DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருபத்திஐந்து – FINAL

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருபத்திஐந்து – FINAL

5 mins
355


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருபத்திஐந்து – FINAL


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)

 

மலிபு கோயில் (malipu temple) தரிசனம்!


 

               

 ஆரவார கடற்கரை அனுபவத்திற்கு பிறகு – அமைதி தேடும் ஆன்மீக பயணமாக காலபஸாஸ் நகரில் பிரபலமான ‘malibu temple’ – மலிபு கோயிலுக்கு சென்றோம். ஸ்ரீ வெங்கடேஷ்வரஸ்வாமி கோயில் என்கிற இந்த பாலாஜி கோயிலில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் என்று எல்லா கடவுள்களையும் தரிசித்தோம். குன்று சூழ் சுற்றுச் சூழலில் ரம்மியமாக அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் லட்டு, தேங்காய் சாதம், புளி சாதம், மிக்ஸர், பாயாசம் என்று நம் ஊர் பிரசாதங்கள் கிடைப்பது ஆனந்தம்.


இப்படியாக இரண்டு நாள் லாஸ்ஏஞ்சல்ஸ் பயணத்தை முடித்து மீண்டும் லாஸ்வேகாஸ் வந்தடைந்தோம்.


வேல்லி ஆஃப் ஃபைர்(VALLEY OF FIRE)

 

          

டிசம்பர் 25 அன்று (valley of fire) ‘வேல்லி ஆஃப் ஃபையர்’ என்னும் இடத்திற்கு சென்றிருந்தோம். முழுக்க முழுக்க இயற்கைக் சூழலில் அமைந்த இடம். இது நிவேடா மாநிலத்தின் தேசீய இயற்கை அடையாளச் சின்னமாக விளங்குகிறது என்று குறிப்பிடுகிறார்கள். (red sandstone formations) செஞ்சிவப்பு மணற்கல் குன்றுகளால் உருவாகியிருக்கும் இந்த பகுதி சுமார் நாற்பத்திரண்டாயிரம் ஏக்கர்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.


பல்வேறு வடிவப் பாறைகள் செக்கச்செவேல் என்று தகதகவென வெயிலில் மின்னுகின்றன. பகல் நேரங்களில் கதிரவனின் கதிர்கள் பட்டு நெருப்பில் ‘தகதக’வென எரிவது போன்ற ஒரு தோற்றம் அளிப்பதால் இந்தப் பகுதி ‘valley of fire’ என்னும் இப்பெயரைப் பெற்றிருக்கிறது போலும்,


சங்கரின் சினிமாவில் (ஜீன்ஸ்?) இது இடம் பெற்றிருக்கிறது.


சுமார் 150 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட டைனோசர் காலத்திலிருந்து ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நிலையை அடைந்ததிருப்பதாக குறிபிடுகிறார்கள்.


லாஸ்வேகாஸிலிருந்து சுமார் எண்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில், மக்கள் மலையேற்றத்துக்காகவும், அங்கேயே தங்கி மகிழ்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் வந்து செல்கின்றனர். இரவு வெப்ப நிலை பூஜ்ஜியத்திற்கு குறைவிலிருந்து 75 டிகிரி ஃபேரன்ஹீட்டாகவும் பகல் வெப்ப நிலை 120 டிகிரி ஃபேரன்ஹீட் வரை செல்லும் எனவும் குறிப்பிடுகிறார்கள். பாறைகளின் வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் நம் மனதைக் கவரும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக சொல்லலாம்.


மௌஸ் டேன்க், ஃபைர் வேவ் போன்ற ஹைக்கிங் பகுதிகளும், செவென் சிஸ்டர்ஸ், வைட் டூம்ஸ் போன்ற பொழுது போக்குப் பகுதிகளும் நிறைய உள்ளன.


மௌன்ட் சார்ல்ஸ்டன் (Mount Charleston)

 

பனிப் பிரதேசம் – பகுதிக்குள் பிரவேசம்!  

 

சென்னையில் இருக்கும் நீங்கள் குலுமணாலி பனிப்பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2700 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்க வேண்டும். தங்கும் செலவு எகிறும். அலைச்சல்!


சரி.. சரி.. விடுங்கள். அதே குலுமணனாலியை சென்னையிலிருந்து சுமார் ஐம்பத்தாறு கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு வந்து வைத்து விட்டால் எப்படி இருக்கும்!


மலைகளால் சூழப்பட்ட ‘மொஜாவி பாலைவனத்தில்’ (Mojave desert) அமைந்திருக்கும் லாஸ்வேகாஸ் நகரத்திலிருந்து, வெறும் 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மௌன்ட் சார்ல்ஸ்டன் என்னும் பனிப்பிரதேசம் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. பனிப் பிரதேசமென்றால் சாதாரண பனிப் பிரதேசமல்ல..! பனியோ.. பனிப் பிரதேசம்!


மலைகளால் சூழப்பட்ட நிவேடா மாநிலத்தின் எட்டாவது, உயரமான மலை மௌன்ட் சார்ல்ஸ்டன். வருடம் முழுக்க பயணிகளும் உள்ளூர் வாசிகளும் வருகை புரியத்தக்க ஈர்ப்பான அம்சங்களைக் கொண்ட இடம். வருடத்தில் ஆறு மாதங்களாவது பனி சூழ்ந்திருக்கும் மனங்கவர் மலைப்பிரதேசம். சுமார் 150 பொழுது போக்கு இடங்கள் (picnic spots) உண்டு. சுமார் 200 ‘கேம்ப்’ பகுதிகள் (Camp points) கொண்டது. ‘


புதிய வானம்.. புதிய பூமி!

 

 ‘புதிய வானம்.. புதிய பூமி..’ என்ற மக்கள் திலகத்தின் பாடலை மனம் விட்டு – வாய் விட்டு – உற்சாகமாக – சத்தமாக – பாடிக்களிக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான சூழல். லாஸ்வேகாஸின் Ski & Snowboard Resort (ஸ்கீ & ஸ்நோபோர்ட் ரிசார்ட்)டால் நடத்தப்படும் இரு குச்சிகளை வைத்து உந்தி முந்தி செல்லும் ஸ்கீயிங் மற்றும் விசேஷ இருக்கைகளில் அமர்ந்து பனிப்பிரதேசத்தில் சறுக்கி செல்லும் ஸ்லைடிங்… போன்ற பல்வேறு விதமான பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது பனித்துகள்களை ஒருவர் மீது ஒருவர் வீசியடித்து விளையாடுவதும், பனித்துகள்களால் பொம்மைகளை உருவாக்குவதும் ஆனந்தம் அளிக்கும்!


அங்கே நாங்கள் இருந்த சமயத்தில் சில நிமிடங்கள் ஒரு பனிமழை பெய்து எங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து விட்டது போங்கள்.


பல மணி நேரம் நுகர்ந்த சந்தோஷச் சூழலை சில நிமிடங்களில் கோடி காட்டுவது எதற்கென்றால் – உங்கள் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி – இத்தகைய இடங்களை நீங்கள் (முடிந்தவர்கள்) தேடிச் செல்ல வேண்டும் என்பதுதான்!

தரையிறக்கம் (LANDING)


 

        

வாசக அன்பர்களே! இன்னும் தொடரத் தொடர எத்தனையோ ஆச்சரியங்களும் அனுபவங்களும் என்னுள்ளே இருந்து பீறிட்டு எழும். ஒவ்வொரு அனுபவத்தையும் விரிவாக எழுத ஆரம்பித்தால் பக்கங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடும்! நீங்களும் நல்ல ‘மூடில்’ இருக்கும் பொழுதே உங்களை விடுவித்து விடுவது – அல்லது என்னை நான் விடுவித்துக் கொள்வது - என் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். இன்னொரன்ன பிற காரணங்களால் இந்த என் இனிய பயணக் கட்டுரையை நிறைவு செய்யும் கட்டத்திற்கு வந்து விட்டோம்.!

 

நாங்கள் பெரும்பாலும் தங்கி இருந்தது அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் எங்கள் மகன் வசிக்கும் ‘லாஸ்வேகாஸ்’ நகரம்தான். அவ்வப்போது ஆங்காங்கே சுற்றுப்பயணம் செய்து பல அனுபவங்களைப் பெற்று இங்கே அளித்திருந்தாலும், ‘லாஸ்வேகாஸ்’ அனுபவங்கள் சற்று தூக்கலாகவே இருந்திருக்கும். 


மேலும் நான் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே எனக்கு / என் குடும்பத்தினருக்கு, அந்தந்த நேரத்தில் – அந்தந்த பருவகாலங்களில் ஏற்பட்ட அனுபவங்களே!

 

நான் குறிப்பிடும் சில புள்ளி விபரங்கள் / தகவல்கள் எல்லாம் அந்தந்த இடங்களில் அந்தந்த நேரங்களில் கேட்டு / பார்த்து தெரிந்து கொண்டவைதான். முடிந்த வரை எண்களை / தகவல்களை மீண்டும் கேட்டு சரி பார்த்துக் கொண்டதும் உண்டு. ஆனால் எல்லாமே கால மாற்றத்துக்கேட்ப UPDATE செய்யப்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. எனவே இந்த எண்களை / தகவல்களை பயன்படுத்தும் தேவை உங்களுக்கு ஏற்பட்டால் பயன் படுத்தும் முன் அப்போதைய latest எண்களை / தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு செயல் படவும்.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலைப் படங்களையும் நிகழ் படங்களையும் பதிவு செய்து வந்திருக்கிறேன். (சிறு சிறு குறிப்புகளுடன் இவைகளை வெளியிட்டால் வாசகர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையும்.


மற்றொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். சுத்தத்தில் அமெரிக்க தேசம் சூபர்தான்! சுகாதாரத்திற்காக இந்த நாட்டைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! சில பழக்க வழக்கங்கள் நன்கு பிடித்திருக்கிறது! ‘டென்ஷனுக்கான’ சூழ்நிலைகள், இந்த நாட்டு மக்களுக்கு, நம் நாட்டு மக்களை விடக் குறைவுதான்! சமூக / அரசுக் காரியங்களுக்கான நடைமுறைகள் மிகவும் எளிதாகவும் பதற்றம் தராதனவாகவும் இருக்கின்றன!


ஆனால்…


இங்கே மக்கள் தொகையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நாட்டில் பல மடங்கு அதிகம். நம் நாட்டில் பத்தாயிரம் பேர் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில், இங்கே பத்துப் பேர் கூட இருப்பதில்லை. அதாவது, இங்கே அரசாங்கம் அந்த பரப்பளவில் பத்து பேருக்கான வசதியை செய்து கொடுத்தால் போதும். ஆனால் நம் நாட்டில் அரசாங்கம் அதே பரப்பளவில் அதே வசதியை பத்தாயிரம் பேருக்கு செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே இங்கு இருக்கும் வசதியை சொல்வதுதான் நம் நோக்கமே தவிர, நம் நாட்டோடு வசதிகளோடு ஒப்பிடுவது என்பது ஒரு புரிதலுக்காகத்தான்.


ஆனால் - அதே நேரத்தில் - காமராஜர், கக்கன், லால்பகதூர் சாஸ்திரி போன்ற அரசியல் தலைவர்கள் நமக்கு மீண்டும் அமையப்பெற வேண்டும். லஞ்ச லாவன்யங்கள் கறுப்புப் பணங்கள் முழு அளவில் ஒழிக்கப்பட வேண்டும்.


லஞ்சம் வாங்குவதால் ஒரு குடும்பம் பயன் அடையலாம். ஆனால் நம் நாட்டில் மிகுந்த ஏழ்மையில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


தங்களுக்கு சேர வேண்டிய வளங்கள் தடுக்கப்பட்டு சுரண்டப் படும் பொழுது, எதுவும் செய்ய முடியாத பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அடையும் துன்பங்களுக்கும் துயரங்களுங்களுக்குமான எதிர் வினைப் பலன் யாரைச் சென்று சேரும்?


பத்து வயதுக்கு கீழ் உள்ள ஒரே ஒரு குழந்தை கூட பட்டினி கிடக்கக் கூடாது. அப்படி அந்தக் குழந்தை பட்டினியோடு இருக்கும் பொழுது, நாம் மட்டும் உண்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. (நான் இதை நம் இந்திய அளவில் மட்டும் சொல்லவில்லை. உலக அளவிலேயே சொல்கிறேன்.) எனவே கறுப்புப் பணங்களெல்லாம் வெளியே வந்து கணக்கில் காட்டப்பட்டால், தொழில்கள் பெறுகும், கல்வி பெறுகும், வேலை வாய்ப்பு பெறுகும், மக்கள் சுபீட்சம் பெறுவர், குடும்பங்கள் மகிழும், அதனால் கோடிக் கணக்கான குழந்தைகள் பட்டினியிலிருந்து மீளும்!


 

நாம் இன்னும் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்களாகத்தான் இருக்கிறோம். அது ஒன்றே நமக்கு இருக்கும் நம்பிக்கை. சட்டதிட்டங்களால் ஏற்படுத்த முடியாத மன மாற்றத்தை விரைவில் மனசாட்சி ஏற்படுத்தும்.


அப்படி ஒரு நிலைமை உதித்தால், உலகின் எந்த நாட்டைக்காட்டிலும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும் என்பதை நினைக்கும் போது, ஒரு பெரும் ஏக்கம் தொக்கி நிற்கிறது! ஒரு சில லட்சம் பேர் மனம் வைத்து திருந்தினால் இந்தியாவின் நூற்று முப்பது கோடிக்கும் மேலான மக்கள் சுபீட்சமாக வாழ முடியும். நாம் உறுதியாக நம்பலாம். அப்படி அவர்கள் மனம் திருந்தி ஒரு வளமான வாழ்க்கையை நம் மக்களுக்கு அளிக்க முன் வருவார்கள். அப்போது அரசாங்கம் அவர்களின் பெயர்களை, இந்திய வரலாற்றின் பொன்னேட்டில் கூட பொறித்து வைக்கலாம்!


வெல்க பாரதம்!


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)


                                                 அமெரிக்கப் பயணத் தொடர் –  முற்றும்

  


Links to Previous Chapters 1 to 20 (or cut -n- paste)

Link To ->CHAPTER-20https://storymirror.com/read/tamil/story/attiyaaym-iruptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ge7isj3aLink To ->CHAPTER-19https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-18https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-17https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnneellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ya2hzd8cLink To ->CHAPTER-16https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll/500icvq5Link To ->CHAPTER-15https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/e3fjusfnLink To ->CHAPTER-14https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinaannnkuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/92gte56fLink To ->CHAPTER-13https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptimuunnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/qkrc8cqeLink To ->CHAPTER-12https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pnnnirennttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/8st3xzy4Link To ->CHAPTER-11https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnonnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/gpv1cbdjLink To ->CHAPTER-10https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/jtbk307cLink To ->CHAPTER-9https://storymirror.com/read/tamil/story/attiyaaym-onnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/rhojyus1Link To ->CHAPTER-8https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ettttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/veqm3za5Link To ->CHAPTER-7https://storymirror.com/read/tamil/story/attiyaaym-eellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/bmkvapm8Link To ->CHAPTER-6https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/59qmt83zLink To ->CHAPTER-5https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/luoldk3nLink To ->CHAPTER-4https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-naannnku/n8ir0y75Link To ->CHAPTER-3https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-muunnnrru/vgou2nszLink To ->CHAPTER-2https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-irnnttu/9bzbu3kkLink To ->CHAPTER-1https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynn-tottr-onnnrru/7urar4au 


Rate this content
Log in

Similar tamil story from Classics