DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

ஞாயம்தானா?

ஞாயம்தானா?

2 mins
87சில நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் பிரபல கோயில் ஒன்றிற்கு சென்றிருந்தார்.


அன்று விசேஷ தினம். சாதாரணமாக விசேஷ நாட்களில் கோயில்களுக்கு செல்வதை அவர் தவிர்த்து விடுவார். கூட்டம் அதிகமாக இருக்கும்; சாமியை கண்குளிர தரிசிக்க முடியாது. போன்றவயே காரணங்கள். என்றாலும் அன்று விசேஷம் என்பதை கவனிக்காமல் கோயிலுக்கு புறப்பட்டுp போய் விட்டார். கோயிலில் பயங்கர கூட்டம். மைல் நீளத்திற்கு வரிசை. தரிசனம் கிடைக்க குறைந்தது மூன்று நான்கு மணி நேரம் ஆகி விடும். அவ்வளவு நேரம் பொறுமையாக நிற்க முடியுமா?


இவ்வளவு தூரம் கிளம்பி வந்து விட்டதால், சாமியை தரிசிக்காமல் போகவும் மனசு வரவில்லை. யோசனையுடன் நின்றிருந்தார்.


திடீரென 'அன்கிள்.. வணக்கம்.. ' என்று குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார்.


'நான் உங்க பயனோட க்ளாஸ்மேட் அன்கிள்..' என்று வந்தவர் அறிமுகப் படுத்திக் கொண்டார்.


சிறிது நேர குசல விசாரிப்புக்குப் பிறகு 'என்ன அன்கிள்.. தரிசனத்துக்காகவா..' என்றார்.


என் நண்பர் தயக்கத்துடன் 'ஆம்.. ' என்று சொல்ல, 'வாங்க அன்கிள்..' என சாமிக்கு மிக அருகில் இருக்கும் நுழைவு வாயிலுக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த காவலாளியிடம் 'இவரை உள்ளே அனுப்பிச்சிருங்க' என்று சொல்லி விட்டு 'நான் வரேன் அன்கிள்..' என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.


ஒரு வழியாக அரை மணி நேரத்தில் திவ்யமான தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வரும் போது, ஏற்கனவே வரிசையில் நின்றிருந்த ஒருவர்,


'ஏன் சார் நாங்கெல்லாம் எவ்வளவு நேரமா கால் கடுக்க நிற்கிறோம்.. நீங்க இப்பொதான் வந்தீங்க.. தெரிஞ்சவங்க இருக்காங்கங்கறதனாலே குறுக்குலே பூந்து தரிசனம் பார்த்துட்டு வந்துட்டிங்களே சார்.. உங்களுக்கே ஞாயமா இருந்தா சரி..!' என்று ஒரு வித வெறுப்புடன் சொன்னார்.


என் நண்பருக்கு தர்ம சங்கடமாக போய் விட்டது. அப்படி இடையில் சென்று தரிசனம் பார்க்கும் ஆட்களைப் பற்றி எவ்வளவோ முறை அவரே வெறுத்துப் பேசி இருக்கிறார்.


நண்பருக்கு விரைவில் சாமியை பார்த்தோம்; நல்ல தரிசனம் கிடைத்தது என்ற திருப்தி போய் ஒரு குற்ற உணர்வு தொற்றிக் கொண்டது.


நண்பர் செய்தது ஞாயம்தானா?


அந்த சூழ் நிலையில் நானோ நீங்களோ இருந்தால் என்ன செய்திருப்போம்?


   
Rate this content
Log in

Similar tamil story from Classics