DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திநான்கு

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திநான்கு

3 mins
33


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திநான்கு


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)


 

 


ஹாலிவுட்’டின் அடையாளச் சின்னம் (sign of Hollywood)

 

                                       

 

தன் பின் ‘sign of hollywood’ என்னும் ‘ஹாலிவுட்’ சின்னம் செதுக்கப்பட்டிருக்கும் பகுதியை அடைந்தோம். நாம் திரைப் படங்களிலும், போஸ்டர்களிலும் காணும் ‘hollywood’ என்னும் மலை மீது செதுக்கப் பட்டிருக்கும் அந்த குறிச்சொல் ஒரு வித மயக்கத்தை கொடுத்தது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதைப் பார்ப்பதற்காக – பார்த்து புகைப்படம் எடுப்பதற்காக – நாம் நிற்கும் இடம் நம் ஊர் முப்பது அடி சாலையைப் போல குறுகலாகத்தான் இருக்கிறது. மேலும் ஊரின் பல உயரமான பகுதிகளிலிருந்தும் அந்த குறிச்சொல் நம் பார்வைக்கு தெரிகிறது. விருப்பப் படுபவர்கள் அந்த மலை மீது ஏறி ‘hollywood’ என்னும் சொல்லின் அருகில் செல்வதற்கும் வசதிகள் உண்டு


 

 

சுத்தீ சுத்தீ வரலாங்க!

‘டிஸ்னிலேண்ட்’ (Disneyland), ‘ஸீவோர்ல்ட்’(SeaWorld), ‘யுனிவர்சல் ஸ்டுடியோஸ்’(Universal studios Tour), ‘வேல் வாட்சிங்’ (Whale Watching), ‘ஸோனி பிக்சர்ஸ் ஸ்டுடியோஸ்’ (Sony Pictures Studios), ‘வார்னர் ப்ரதர்ஸ்’ (WB VIP Studio Tour), ‘மேடம் டுஸ்ஸாட்ஸ்’(Madame Tussauds), இன்னும் தீம் பார்க்குகள் உள்பட எக்கச்செக்கமான பொழுது போக்கு அம்சங்கள் லாஸ்ஏஞ்சலஸிலும் அதைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றன. சில நாட்களாவது தங்கினால் தான் இவற்றை எல்லாமே குறையின்றி கண்டு களிக்க முடியும்.. சிலவற்றிற்கு வாங்கும் டிக்கட்டுகளுக்கு நாள் கணக்கில் அனுமதிப்பார்கள். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சென்று கண்டு களிக்கலாம். ஆனால், அதற்கேற்றவாறு கட்டணமும் அதிகம். 


நல்ல பசி வேளையில் ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தோம். ‘fajita’ என்னும் காய்கறிக் கலவையான சைவ உணவை வரவழைத்து உண்டோம். மக்கா சோளம் அல்லது ஏதோ ஒரு மாவில் செய்யப்பட்ட அரை வேக்காட்டு சப்பாத்தி போல் இருந்தது. கூடுதலாக ஒரு பழ ரசத்தை சாப்பிட்டு திருப்தி அடைந்தோம்.


ஆஸ்கார் அரங்கம் (dolby theatre)

 

                                        

 

ம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றது நம் அனைவருக்கும் தெரியும். அவர் விருது பெற்ற அதே மேடையில் நாங்கள் கால் பதித்து விட்டு வந்தோம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆம்! ‘ஆஸ்கார் விருது’ வழங்கப்படும் ‘dolby theatre’ (டால்பி தியேட்டர்) எனப்படும் பிரம்மாண்ட அரங்கை நாங்கள் கண்டு களித்தோம். மூவாயிரத்து நானூறு இருக்கைகள் கொண்டு முட்டை வடிவத்தில் இருக்கும் அந்த அரங்கை நாங்கள் பெருமிதத்துடன் பார்த்தோம். அரங்க அமைப்பில் முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி ‘பால்கனி’ அமைப்பும் உண்டு. 120 x 70 அடி விஸ்தீரணத்தில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்ட மேடை பெரிய பிரம்மிப்பைக் கொடுத்தது என்றால் அது மிகை அல்ல. 


அதன் பிறகு ‘santa monica’ – சான்டா மோனிகா என்னும் ஒரு கடற்கரைக்கு சென்றோம். மிகவும் பிரபலமானது – பிரசித்தி பெற்றது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், ஏனோ அப்படி நாங்கள் உணரவில்லை. ஒரு வேளை நாங்கள் சரியான நேரத்தில் பார்க்கவில்லையா அல்லது ‘மெரீனா’வைப் பார்த்த நமக்கு அது அவ்வளவு பெரிதாக தெரியவில்லையா என்று தெரியவில்லை!


அந்த இரவு ‘காம்ப்ளிமெண்டரி காலை உணவுடன், நான்கு பேருக்கு நூற்றுப்பத்து டாலர்கள் வாடகையில் ஒரு அறையில் தங்கினோம். அந்த பகுதி நிறைய இந்திய சைவ/அசைவ உணவகங்களாலும், புடவை/சூடிதார்/நகைகள் அணிவிக்கப்பட்ட மாடல் பொம்மைகள் நிரம்பிய புடவை, நகை கடைகளாலும் நிரம்பி இருந்தது. ஏறத்தாழ நம் கோயமுத்தூர் ராஜ வீதியை நினைவுறுத்தியது.


காலடியில்கடல் – ஹெர்மோசா பீச் (Hermosa beach)

 

டுத்த நாள் காலை உணவை முடித்து ‘hermosa beach’ – ஹெர்மோசா கடற்கரைக்கு சென்றோம்! எங்கள் பயணத்தில் இது ஒரு மறக்க முடியாத அனுபவம். கடலுக்கு மேல் ஒரு சிறிய மேம்பாலம் (jetty)போல் கட்டி இருந்தார்கள். சுமார் அரை கிலோமீட்டருக்கு மேல் அந்தப் பாலம் இருக்கும். நமது கால்களுக்குக் கீழாக கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பது ஒரு பயக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது. பாலத்தின் இரு மருங்கிலும் தூண்டிலைக் கடலில் போட்டுவிட்டு; ‘ஹாயாக’ ஆண்களும் பெண்களும் கண்மூடி துயின்று கொண்டிருப்பது பரவசமூட்டும் காட்சிகள். வெகு தொலைவில் கடற்கரை மணலில் குழந்தைகளும் பெரியவர்களும் மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சிகளை இந்த பாலத்தில் இருந்து காணலாம். ஒரு சிலர் மிதி வண்டியில் அந்த பாலத்தின் மீது பயணம் செய்து, ஆங்காங்கே நிறுத்தி விட்டு, வேடிக்கை பார்ப்பதில் இறங்கி விடுகிறார்கள். அங்கிருக்கும் தொலைநோக்கிக் கருவிகளில் கண்களை பதித்து தொலைதூர ரசிப்பில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகருகே பறவைகள் பறந்து வந்து, அந்த பாலத்தின் ஓர சுவர்/தூண்களில் அமர்ந்து வேடிக்கை காட்டும் அற்புதம் ஒரு புறம்.


ஹெர்மோசா பீச்சில் அடித்து நொறுக்கினார்கள்!


                                                      

       

யணத்தில் ஒரு மறக்க முடியாத அனுபவம்’ என்று நான் மேலே குறிப்பிட்டு இருப்பதற்கு இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய காரணம்.. ‘ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’..’ட்ரம்ஸ்’..! ஆம்! ஒரு இடத்தில் நூற்றுக் கணக்கான ‘ட்ரம்ஸ்’ எனும் தோல் இசைக் கருவிகள் – பல்வேறு அளவுகளிலும் – வெவ்வேறு வடிவங்களிலும் வைத்திருக்கிறார்கள். அவற்றை யார் வேண்டுமானாலும் – எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக வாசிக்கலாம். போவோர் வருவோர் எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு சேர நின்று, யாராவது ஒருவர் முன்னெடுத்து வாசிக்கும் ஒலியை மற்றவர்கள் அப்படியே அல்லது அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி வாசிப்பது சுகானுபவம். யார் வேண்டுமானலும் முன்னெடுத்து வாசிக்கலாம். இதில் கற்றுக்குட்டி, விற்பன்னர் என்கிற பேதம் இல்லை. ஏற்கனவே ‘ரிதம்’ இசைக் கருவிகளில் ஆர்வம் உள்ள நான் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு நின்று, எந்தத் தடையும் இன்றி, மெய் மறந்து வாசித்து என்னுடய மன அழுத்தங்களையெல்லாம் வெடித்துச் சிதறச் செய்தது - ஒரு மறக்க முடியா – மறக்க விரும்பா மகிழ்ச்சியான அனுபவம்!

 


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 25ல் ............. தொடரும்…


Links to Previous Chapters 1 to 20 (or cut -n- paste)


Link To ->CHAPTER-20https://storymirror.com/read/tamil/story/attiyaaym-iruptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ge7isj3aLink To ->CHAPTER-19https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-18https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-17https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnneellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ya2hzd8cLink To ->CHAPTER-16https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll/500icvq5Link To ->CHAPTER-15https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/e3fjusfnLink To ->CHAPTER-14https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinaannnkuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/92gte56fLink To ->CHAPTER-13https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptimuunnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/qkrc8cqeLink To ->CHAPTER-12https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pnnnirennttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/8st3xzy4Link To ->CHAPTER-11https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnonnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/gpv1cbdjLink To ->CHAPTER-10https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/jtbk307cLink To ->CHAPTER-9https://storymirror.com/read/tamil/story/attiyaaym-onnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/rhojyus1Link To ->CHAPTER-8https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ettttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/veqm3za5Link To ->CHAPTER-7https://storymirror.com/read/tamil/story/attiyaaym-eellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/bmkvapm8Link To ->CHAPTER-6https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/59qmt83zLink To ->CHAPTER-5https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/luoldk3nLink To ->CHAPTER-4https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-naannnku/n8ir0y75Link To ->CHAPTER-3https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-muunnnrru/vgou2nszLink To ->CHAPTER-2https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-irnnttu/9bzbu3kkLink To ->CHAPTER-1https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynn-tottr-onnnrru/7urar4au


Rate this content
Log in

Similar tamil story from Classics