DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதினேழுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பதினேழுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

4 mins
66


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பதினே


உங்கள் வியாபாரத்தில் திரு. அம்பானி அவர்கள் பங்குதாரராக வந்தால்…!

ன்னிடம் சூப்பர் ஐடியா இருக்கு சார்.. யாராவது பணம் முதலீடு செய்தால். சும்மா ஒரே வருஷத்துலே கோடீஸ்வரன் ஆயிரலாம்…’ என்று சொல்பவரை நாம் பார்த்திருக்கிறோம்.

‘ஏதோ வியாபாரம் போய்கிட்டிருக்குங்க! ஒரு பார்ட்னர் கெடைச்சா நல்ல லாபம் பாக்கலாம்..’ என்பவர்கள் உண்டு.

‘பரம்பர பரம்பரையா இந்த வியாபாரம் செஞ்சிகிட்டு வர்றோம்.... இன்னும் கொஞ்சம் பணம் இருந்தா பெரிய லெவல்லே போயிரலாம்.’ என்பார்கள்.

‘புது டெக்னாலஜி சார்.. ஆனா வெளியிலே சொன்னா எவனாவது சுட்ருவான்..பெரிய தொழிலதிபர் யாராவது கெடச்சா.. அஞ்சு வருஷத்துலே உலகத்தையே வாங்கீறலாம்.’ என்பார் மற்றொருவர்.


பொறுங்கள்! பொறுங்கள்! அமெரிக்காவில் இருந்தால் உங்கள் வியாபாரத்திற்காக நீங்கள் கேட்கும் எல்லாமே கிடைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது! நம் ஊர் டாடா, பிர்லா, அம்பானி அளவுக்கு வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஐந்து பேர், இவ்வாறு திட்டங்களுடன் வருபவர்களை வரவேற்கிறார்கள்! பேட்டி காண்கிறார்கள்! அவர்கள் முழு திருப்தி அடைந்தால் – நம்பிக்கை உண்டானால், வருபவர்களின் வியாபாரத்தில் இணைந்து, தேவையான முதலீடு செய்து பங்குதாரர் ஆகி விடுகிறார்கள்!


இப்படி ஒரு நிகழ்ச்சி CNBC என்னும் தொலைக்காட்சியில் நேரலையில் ஒலிபரப்பப் படுகிறது. தொழிலதிபர்களின் நேர்காணல், அவர்களின் கேள்விகள், அவர்களின் ஒப்புதலுக்காக தங்கள் தயாரிப்புகளை கொண்டு வந்து விளக்கமளிக்கும் நபர்/நபர்கள் எல்லாம் நேரடியாக காண்பிக்கப் படுகிறது. பலர் எல்லோராலும் மறுதலிக்கப்படுவதும், சிலர் ஏதாவது ஒரு தொழிலதிபரால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் கண்கூடாக காணலாம். அபரிமிதமான நம்பிக்கைக் கொடுக்கும் சில தயாரிப்புகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர் கூட முதலீடு செய்ய போட்டியிடுவதும் உண்டு. பத்தாயிரம் டாலர்களிலிருந்து பல லட்சம் டாலர்கள் வரை முதலீடும் செய்கின்றனர்.


நம் ஊரிலும் மிகப்பெறும் வசதிமிக்க தொழிலதிபர்கள், இதே போல் ஆய்ந்தறிந்து, இத்தகைய முதலீடுகள் செய்ய முன் வருவார்களேயானால், நம் நாடு பொருளாதார ரீதியாக மென்மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை.


வாடகைக் கார்-குறைபாடு!

ரு முறை கோவையிலிருந்து சேலம் சென்றபோது ஒரு வாடகைக்கார் எடுத்து சென்றிருந்தோம். போகும் போது இரண்டு முறை டயர் பஞ்சர் ஆகி விட்டது. கோவை திரும்பி வாடகைத் தொகையை அவரிடம் கொடுத்த போது, பஞ்சர் விஷயத்தை சொல்லி நல்ல டயராக போட்டு வைக்க சொன்னோம். ஆனால் அவரோ ‘நீங்கள் வண்டியை எடுக்கும் போதே டயர்களில் சரியான அளவில் காற்று அடித்து இருக்க மாட்டீர்கள்’ என்று சொல்லி விட்டார்.


அதே போல நியூயார்க்கிலிருந்து நயாகரா சென்ற போது ஒரு வாடகைக்கார் எடுத்துச் சென்றிருந்தோம். அந்தக் கார் எல்லா வகையிலும் நன்றாக இருந்தாலும் பின் இருக்கையில் இருக்கும் இரண்டு ஒலிபெருக்கிகளும் வேலை செய்யவில்லை. வாடகைக்காரை திருப்பி விடும்போது இந்த விஷயத்தை சொன்னோம். வாடகைக்கு விட்டவர், மிகவும் வருத்தப் பட்டார். பல முறை ‘சாரி’ சொன்னார். அதோடு நிற்கவில்லை. வாடகைப்பண கணக்கைத் தீர்க்கும் பொழுது, வேலை செய்யாத ஒலிபெருக்கிகளுக்காக முப்பது டாலர்கள் (நம் ஊர் பணத்தில் சுமார் தொள்ளாயிரம் ரூபாய்.) பணத்தைக் குறைத்துக் கொண்டார்.


விலைவாசி!

நாங்கள் அங்கு தங்கி இருந்த சமயத்தில் சில பொருள்களின் விலை நிலவரம் என்னவென்றால்


பொருள்         அளவு     டாலர் விலை    இந்திய ரூபாயில்

                             (ஏறத்தாழ)

ரோமா தக்காளி   1 பவுண்டு  $0.99      ரூ.60/-

USA தக்காளி    1 பவுண்டு  $0.50      ரூ.30/-

தர்பூசனி      9 பவுண்டு  $4.98       ரூ.300/-

கறுப்பு திராட்சை  1 பவுண்டு  $1.97       ரூ.120/-

கைகழுவும் சோப்   --     $1.00       ரூ.60/-

பாதாம் பருப்பு    1 பவுண்டு  $8.00      ரூ.480-/

முந்திரி பருப்பு   1 பவுண்டு  $5.50       ரூ.330/-

பொன்னி பச்சரிசி  10 பவுண்டு  $22.00       ரூ.1320/-

(பவுண்டு=0.453592Kg)

 

 

‘விரிக்கிற் பெருகுமென்றஞ்சி’ இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்! (இது மறைமலை அடிகளின் தமிழ்! கல்லூரி நாட்களில் படித்தது என்று நினைவு! மனதை விட்டு அகலாத மனங்கவர்ந்த சொற்றொடர்! என்னே நம் தமிழின் இனிமை!)


                                                                பூங்கா!

  

 

        இந்த பயணத்தில் நான் புரிந்து கொண்ட ஒரு உண்மை - எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருப்பது ‘பூங்கா’.

 

 சில ஊர்களில் பொழுது போக்குவதற்கு கடற்கரை இருக்கும். கிராமங்களில் ஆற்றங்கரைகள்/குளத்தங்கரைகள் இருக்கும். பெரிய நகரங்களில் ‘ஷாப்பிங் மால்’ எனும் பேரங்காடிகள் இருக்கும். பெரும்பாலும் திரைப்பட அரங்குகள் / டெண்ட்டு கொட்டாய்கள் இருக்கும். 

 

ஆனால், இது எதுவுமே இருந்தாலும் / இல்லை என்றாலும், எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு பூங்கா இருக்கும். காந்தி பார்க், வ.உ.சி.பார்க், திரு.வி.க.பார்க், நேரு பார்க் இப்படி ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும்.

  ‘குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்படியே பார்க்கிற்கு போய் வந்தோம்’ என்று வாழ்நாளில் ஒரு முறையாவது சொல்லாத பெற்றோர்கள் இருக்க முடியாது. நம் நாட்டில் மட்டும் அல்ல. உலகில் எல்லா நாடுகளிலும் ‘பார்க்-பூங்கா’ என்பது ஒரு உற்சாகத்தை வரவழைக்கும் வார்த்தை. வாழ்ந்து பார்க்கும் பேரனுபவம்!


 

லாஸ்வேகாஸில் ‘சன்செட்’ பூங்கா (Sunset Park) என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுமார் 325 ஏக்கர் – ஆம் 325 ஏக்கர் - விஸ்தீரணத்தில் அமைந்திருக்கிறது. இந்த பூங்காவில் நம் மனதைக் கவரும் பலவற்றுள் சில:


 வாத்துக்கள் நீந்தி மகிழும் / மகிழ்விக்கும் மிகப்பெரிய குளம்

குளத்தருகே கூடிக் களித்தல் (picnic),

படகு செலுத்துதல் - போட்டி

டென்னிஸ் கோர்ட்டுகள்,பேஸ் பால்(base ball fields), ஃப்ரிஸ்பீ மைதானங்கள், கூடைப்பந்து மைதானங்கள், கைப்பந்து மைதானங்கள்

நாய்கள் விளையாடி மகிழும் தனிப்பட்ட பார்க்,

உரிமம் பெற்றவர்கள் குளத்தில் மீன் பிடித்தல்

அருகிலிருக்கும் மெக்கார்ரென் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, தேங்கி நின்று, காத்திருந்து, வானேறும், தரை இறங்கும் விமானங்களை கண்டு களித்தல்

குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள்

குடும்பம் குடும்பமாக - உணவு பதார்த்தங்கள், கூடாரங்கள், நாற்காலிகள், விரிப்புகள் இவற்றுடன் வந்து, விளையாடி ,உண்டு, ஒய்வெடுத்து, சுகமாய் கண்ணயர்ந்து கூடிக்களிக்கும் கண்கொள்ளாக் காட்சிகள்.


 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


 தமிழ் திரைப்படம்!


 தீபாவளி சமயத்தில் உங்களுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்திருக்கும். குழந்தைகளுக்கு துணிமணி எடுப்பது! பட்டாஸ் வாங்குவது! பலகாரங்கள் செய்வது! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கவலைகளின் உச்சமாக இன்னொரு கவலை இருந்திருக்குமே! அது சில திரைப்படங்கள் ‘ரிலீஸ்’ ஆகுமா ஆகாதா என்பதே! ஆனால் நாங்கள் இங்கு எந்த விதமான ‘டென்ஷனும்’ இல்லாமல், படம் பார்த்தோம் என்றால் நம்ப முடிகிறதா! அவ்வப்போது, வெளியாகும் சில தமிழ் படங்களை ஓரிரு நாட்கள் - ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் இங்கு ஒரு திரையரங்கில் பார்க்க முடிந்தது. ஐம்பதிலிருந்து நூறு பேர் வரை வருவார்கள். அப்படி, தீபாவளி சமயத்தில் வெளியான விஜய் திரைப்படத்தைப் பார்த்தோம். மேலும் அவ்வப்போது ரஜினி, சங்கர் ஆகியோரின் படங்களையும் காணும் பேறு பெற்றோம்.


  

சாக்லேட் ஃபேக்டரி

ஒரு பொட்டானிகல் கார்டனில் அமையப் பெற்ற ‘ஈத்தல் இன்’ எனும் ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்கு பார்வையிட சென்றிருந்தோம். அந்த தோட்டத்தில் அமைக்கப்பெற்றிருந்த வண்ண விளக்கு அலங்காரங்கள் அற்புதம். அத்தோடு சாக்லெட் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையையும் கண்டோம். ஆமாம்.. சென்றிருந்த ஒவ்வொருவருக்கும் சுவையான ஒரு சாக்லேட் இலவசமாக தந்தார்கள்! அத்துடன் தேவைப் படுவோர் பணம் கொடுத்து தேவையான சாக்லேட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.



 பாட்லக்(Potluck)

ஒரு அயல்நாட்டில் வசிக்கும் போது, நம் நாட்டைச் சேர்ந்தவர்களெல்லாம் நமக்கு நெருக்கமானவர்கள் ஆகி விடுகிறார்கள். என்றாலும் அனைவரும் ஒன்றுகூடி, நாள்தோறும் சந்தித்துப் பேசி மகிழ்வது என்பது கடினமான காரியம். எனவே, பண்டிகை, விசேஷம் போன்ற நாட்களில், அனைவருக்கும் தகவல் கொடுத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேருவார்கள். தத்தம் நாடு, ஊர், குடும்பங்கள், அரசியல், சினிமா என்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு சேரும்பொழுது, ஒவ்வொருவரும், அவரவர் வீட்டில் இருந்து ஓரிரு உணவுப் பதார்த்தங்களை செய்து கொண்டு வருவார்கள். அவற்றைப் பொதுவில் வைத்து விடுவார்கள். எல்லோரும் அனைத்தையும் ருசி பார்த்து மகிழ்ந்து உண்பார்கள். இதைத்தான் (POTLUCK) பாட்லக் என்று குறிப்பிடுகிறார்கள். நாங்கள் இங்கு இருந்த போது, இது போன்று இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம்.


 


 


 அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-18ல் ............. தொடரும்…


 


 

 


Rate this content
Log in

Similar tamil story from Classics