Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

DEENADAYALAN N

Classics


5  

DEENADAYALAN N

Classics


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திமூன்று

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திமூன்று

3 mins 60 3 mins 60

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இப்பத்திமூன்று


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!

(கோவை என். தீனதயாளன்)


புத்தாண்டு கொண்டாட்டம்!

 

மாலை ஆறு மணிக்கெல்லாம் ‘ஸ்ட்ரிப்’ என்னும் கொண்டாட்டம் நிறைந்த தெருவை அடைந்தோம். மிகப் பிரபலமான காஸினோக்களும், பொழுதுபோக்கு அரங்குகளும், உணவகங்களும் நிறைந்த இடம். தெருவில் பல இடங்களில் மக்கள் இசைக்கருவிகளுக்கு ஏற்ப அதிரடி ‘ட்ரம்ஸ்’கள் இடியாய் முழங்க அற்புதமாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.


                                                   

   (15 secs to 12 midnight)


அனைவருமே பொதுமக்கள்தான். இருந்தாலும் எந்த வித காழ்ப்புணர்வோ கலாட்டாவோ இன்றி மலர்ந்த முகங்களுடன் – தாங்கள் பிறந்ததே அதற்குத்தான் என்பது போல – ஆண் பெண் விகல்பமின்றி அற்புதமாக மெய் மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.

 

வான வேடிக்கையில் புத்தாண்டு வரவேற்பு!

 

                                                        


இங்கு புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு நிகழும் வான வேடிக்கை மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் குழுமி இருந்தாலும், ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதலோ, எந்த வித இடிபாடோ, தள்ளுமுள்ளோ இல்லாமல் இருப்பது ஆச்சரியம். வான வேடிக்கை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும்போது கூட வந்த சுவடு தெரியாமல் கலைந்து தத்தம் வாகனம் செல்லும் அதிசயம் – அதிசயம்தான்!


நம் ஊர் திருவிழாக்களில் பலூன், ‘பீப்பீ’ போன்றவை விற்பனை செய்யப்படுவதைப் போல், இங்கும் விளக்கில் மிளிரும் தலைக் கீரீடங்கள், ஜ்வலிக்கும் கலர் கண்ணாடிகள், ‘பீ..பீ..’ என்று ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் விற்கப் படுகின்றன. சிறுவர்களும், சிறுமியரும், பெரியோரும் அவற்றை அணிந்து ஒலி எழுப்பிச் செல்லும் காட்சி விசித்திரமாகத்தான் இருந்தது.

 


லாஸ்-ஏஞ்சல்ஸ் பயணம்!

 

நிறுத்தம் இல்லா நெடுஞ்சாலைப் பயணம்!

 

மெரிக்காவின் மிக முக்கிய – மிகப் பிரபல நகரங்களில் ஒன்று லாஸ்ஏஞ்சல்ஸ். நாங்கள் தங்கியிருந்த லாஸ்வேகாஸிலிருந்து காரில் – சற்று இளைப்பாறிச் சென்றால் - சுமார் ஐந்து மணி நேரப்பயணம். நிறுத்தமில்லா நெடுஞ்சாலைப் பயணம். ஆங்காங்கே வழியில் ‘எக்ஸிட்’ (exit) என்று குறிப்பிட்டு இருக்கும் இடங்களில் நுழைந்தால் அந்தந்த ஊர்களுக்குள் செல்லலாம்; எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம்; சிரமப்பரிகாரம் செய்து கொள்ளலாம்; உணவகங்களில் பசியாரலாம். பின் மீண்டும் நெடுஞ்சாலையில் இணைந்து நிறுத்தமில்லா நெடும்பயணத்தைக் தொடரலாம்.


அமெரிக்க நெடுஞ்சாலையில், ஒரு ‘exit’-இல் நுழைந்து, நாங்கள் எடுத்துப் போயிருந்த இட்லி-வெங்காய சட்னியை ருசி பார்த்தது, ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது.


நெடுஞ்சாலையில் முன்னுரிமைப் பாதைகள் உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே காரில் சேர்ந்து சென்றால் அவர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி இன்னும் விரைவாக செல்லும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒருவர் மட்டும் செலுத்தும் வாகனம் இந்த பாதையில் வந்தால் டாலர்களில் அபராதத்தை செலுத்த வேண்டியதுதான். பெரும்பாலும் ஒருவர் மட்டும் ஓட்டும் வாகனம் அதிகம் இருப்பதால் எரிபொருள் சேமிப்பிற்காக இந்த யுக்தி கடைபிடிக்கப் படுகிறது.


கோலிவுட்..டோலிவுட்..பாலிவுட்…..ஹாலிவுட்!

 

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நுழைந்து நேராக பிரபலமான (Hollywood) ஹாலிவுட்டிற்கு சென்றோம். ஹாலிவுட் என்பது சினிமா சம்மந்தப்பட்ட பகுதி மட்டும் அல்ல. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு பொதுவான பகுதி அது. அந்த பகுதிக்குப் பெயர் ‘ஹாலிவுட்’. எப்படி ‘கோடம்பாக்கம்’ என்பது சென்னையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது தமிழ்த் திரை உலகிற்கு ஒரு அடைமொழியாக இருக்கிறதோ, அதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.


லாஸ்வேகாஸ் நகரில் வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குப் பஞ்சமே கிடையாது. வசதியாகவும் இலவசமாகவும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களுக்கு தட்டுப்பாடு மட்டும் அல்ல. கட்டணமும் மிக மிக அதிகம். (ஆறு மணி நேரத்திற்கு 15/- டாலர் – அதாவது 900/- ரூபாய்) லாஸ்வேகாஸோடு ஒப்பிடும் போது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் கொஞ்சம் ‘கசமுசா’தான்.(congested)


                                        நடராஜா சர்வீஸில் நல்ல நல்ல வேடிக்கைகள்!

                                              


ஆரவாரமிக்க தெருக்களில் ‘தெருநடை’யே ஒரு பொழுது போக்குதான். அதிலும் குறிப்பாக, ‘walk of fame’ என்று ஒரு பகுதி உள்ளது. அங்கே நாம் நடக்கும் நடை மேடைகளின் மீது ஆயிரக்கணக்கான உயர்தர கற்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், மிகப் பிரபலமானவர்களின் பெயர்களை பதித்து வைத்திருக்கிறார்கள். அவற்றின் மீது நடந்து கொண்டே அந்த விபரங்களை நாம் பார்க்கலாம். இந்த பிரபலங்களின் பட்டியலில் மைக்கேல் ஜாக்சன், ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் போன்றவர்களும் அடக்கம்.


                                           


ஹாலிவுட் பகுதியில் நம் விநாயகப்பெருமானை நினைவுறுத்தும் ஒரு சிலையைப் பார்த்தோம். உயரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையை பார்த்தவுடன் எனக்கு கோயமுத்தூர் ஈச்சனாரி விநாயகர் நினைவுக்கு வந்தார்.அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 24ல் ............. தொடரும்…


Links to Previous Chapters 1 to 20 (or cut -n- paste)


Link To ->CHAPTER-20https://storymirror.com/read/tamil/story/attiyaaym-iruptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ge7isj3aLink To ->CHAPTER-19https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-18https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-17https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnneellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ya2hzd8cLink To ->CHAPTER-16https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll/500icvq5Link To ->CHAPTER-15https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/e3fjusfnLink To ->CHAPTER-14https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinaannnkuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/92gte56fLink To ->CHAPTER-13https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptimuunnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/qkrc8cqeLink To ->CHAPTER-12https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pnnnirennttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/8st3xzy4Link To ->CHAPTER-11https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnonnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/gpv1cbdjLink To ->CHAPTER-10https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/jtbk307cLink To ->CHAPTER-9https://storymirror.com/read/tamil/story/attiyaaym-onnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/rhojyus1Link To ->CHAPTER-8https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ettttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/veqm3za5Link To ->CHAPTER-7https://storymirror.com/read/tamil/story/attiyaaym-eellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/bmkvapm8Link To ->CHAPTER-6https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/59qmt83zLink To ->CHAPTER-5https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/luoldk3nLink To ->CHAPTER-4https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-naannnku/n8ir0y75Link To ->CHAPTER-3https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-muunnnrru/vgou2nszLink To ->CHAPTER-2https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-irnnttu/9bzbu3kkLink To ->CHAPTER-1https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynn-tottr-onnnrru/7urar4au


Rate this content
Log in

More tamil story from DEENADAYALAN N

Similar tamil story from Classics