Shakthi Shri K B

Abstract Drama Classics

5  

Shakthi Shri K B

Abstract Drama Classics

நட்பின் அடையாளம்

நட்பின் அடையாளம்

2 mins
791


அன்று நான் சற்று கால தாமதமாக தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டேன். "அடடா, என்ன செய்வேன் நான் இன்று மிக முக்கியமான நாள் ஆயிற்றே. கடவுளே ! எப்படியாவது நான் நேரத்துக்கு செல்லவேண்டும்."ம்ம்ம் ம்ம்ம்.. முயன்று பார்ப்போம். 

"அம்மா, மீனாட்சி, காலை உணவும், மத்திய சாப்பாடும், தயார் செய்கிறாயா?.." சற்று தூரத்தில் இருந்து ஒரு பதில் ஓசை வந்தது." மாமா, இதோ தயாராகிக்கொண்டே இருக்கிறது மாமா, பிள்ளையளுக்கும் பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது, நான் விரைந்து செயல்பட்டுக்கொண்டு உள்ளேன்", என்றால் மூத்த மருமகள் மீனாட்சி. 


பின்பு என்ன கவலை நாம் சரியாக சென்று அந்த வேலையை முடிக்கலாம் என எண்ணியபடி குளியல் அறைக்கு சென்ற திரு.கணேசன். என்ன தன வயது 58 ஆனாலும் அயராது உழைத்து தனது இரு மகன்களையும் படிக்கவைத்து பட்டதாரி ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு. ஆனால் அவரின் மனைவி பத்மினி அம்மாள் இருந்த வரை இவரை போல உற்சாகம் உள்ளவரை அந்த தெருவில் யாருமே கிடையாது. இருவரும் இணை பிரியாத நண்பர்கள் போல வாழ்ந்து வந்தவர்கள். ஆனால் இப்பொழுது இரண்டு வருடங்கள் சுழன்றோடிவிட்டன பத்மினி அம்மாள் இயற்கை எய்தி. 


கணேசன், தனது வாழ்க்கையை எண்ணிய படியே குளித்துவிட்டு வந்து தயாராக துடைங்கிறார். அப்பொழுது, மீனாட்சியின் கூக்குரல், "என்னங்க , நீங்க தயாரா? இன்னைக்கு ஒரு நாள் பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கூடத்தில் விட்டு அலுவலகம் சொல்லுங்க." என தனது கணவன் குமாரை கேட்டாள். சரி, சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் என சொல்லியபடியே விரைந்து சென்றான் அவனின் அப்பாவுடைய அறைக்கு.


"அப்பா, அப்பா, நான் பிள்ளைகளை பள்ளிகூடத்தில் விடப்போகிறேன், நீங்கள், சுந்தரவுடன் போய்விடுகிறீர்களா?" என கேள்வி எழுப்பினான். " அடடா, அதற்கு என்னப்பா நான் சுந்தர் கூட போகிறேன். நீ பிள்ளைகளுடன் போ." என்றார் கணேசன். 

மாமா அது சரியாக இருக்குமா? என வினவினாள் மீனாட்சி. "அட, விடுமா அவனுக்கு தெரியாது நான் பெண் வீட்டாரை சந்திக்கப்போகிறேன் என்று. எப்படியாவது சமாளித்துவிடலாம்." என சிரித்தபடி கூறினார் கணேசன்.


மணி ஒன்பதை தொட்டது கடிகாரத்தில், "மீனாட்சி, நீ கிளம்பு அம்மா உன் அலுவலகத்திற்கு " என கூறியபடியே கணேசன், குமார் வாப்பா நாமும் செல்லலாம். என்னை சற்று மடிப்பாக்கத்தில் இறக்கிவிட்டு நீ அலுவலகம் செல்லப்பா என்றார்.

சரி, அப்பா தொவந்தேன். வாருங்கள் செல்லலாம். அனைவரும் புறப்பட்டனர் வீட்டை பூட்டிக்கொண்டு.

மடிப்பாக்கத்தில் இறங்கிய கணேசன் இளைய மகன் சுந்தருக்கு விடைகொடுத்தபின் தன் அலைபேசியை எடுத்து பெண் விட்டார் என பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணுக்கு அழைப்பை விடுத்தார்.


"அ , சொல்லுலங்க, நான் இங்கு பிள்ளையார் கோவில் அருகே இருக்கிறேன், மஞ்சள் நிற சட்டை, வேஸ்டி அணிந்துளேன்" என அந்த பக்கத்தில் இருந்த நபர் கூறினார்." நானும் அருகே தன உள்ளேன் , நீல நிற சட்டை, வேஸ்டி எனது அடையாளம் என்றார் கணேசன்.


சற்று நேரத்தில், இருவரும் சந்தித்தனர்.." நீ, நீ, அமாம் நான் நான் " என இருவரும் மகிழ்ச்சியில் திகைத்து போனார். இருவரும் பள்ளி பருவ நண்பர்கள். கணேசன், "ஏய் கதிரேசா , நீயே, உன் பெண்ணுக்கு தான் ஏன் மகனை மனம் முடிக்க வந்தாயா, என்ன ஒரு ஆச்சரியமான தருணம், இனி வேறு பேச்சே கிடையாது." "டேய் ,ஏன்டா , என்னை உன் சம்மதியாக ஏற்றுக்க மாட்டாயா, என மெல்லிய குரலில் கேட்டார் கதிரேசன். 


"அடடா, நீ இன்னுமும் மாறவில்லை ஒன்றுக்கு இன்னொன்றை முரணாக எண்ணுவதை".நான் என்ன கூறினேயென்றால் உன் மகள், இல்லை இல்லை ஏன் மருமகள் தான் உன் மகள் என்று. பார்த்தாயா , நீயும், மாறவில்லை, உன் கிண்டல் பேச்சும் மாறவில்லை, சரி இனி உன்னை அடே நண்பா என கூப்பிடுவதா இல்லை சம்மதி என கூப்பிடுவதா" என கேட்டார் கதிரேசன். " ஹாஹா ,நீ என்றும் எனது அன்பிற்குரிய நண்பன்", என சொல்லிக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டே கிளம்பிரார். 


அன்று மாலை கணேசன் தன் தெருவில் நின்றபடியே தன் பேரன் பேத்தியுடன் மகிழ்ச்சியாக விளையாடியதை கண்டு அவரின் மகன்கள் மருமகள் மற்றும் அத்தெருவில் வசிப்பார்வர்கள் என அனைவரும், கணேசனின் முகத்தில் அந்த புன்சிரிப்பை கண்டு அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். நட்பின் இழப்பை நட்பு தான் ஈடுசெய்யமுடியும். நட்பே உயர்தந்து!


Rate this content
Log in

Similar tamil story from Abstract