Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Abstract Inspirational

5.0  

anuradha nazeer

Abstract Inspirational

பரமஹம்ஸரிடம்

பரமஹம்ஸரிடம்

1 min
35.2K


ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

..*ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்...!!*

வந்தவர் கேட்டார்:

*“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”*

*பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:*

*“ஓ....!* *பார்த்திருக்கிறேனே...!!*

*காலையில் கூட தாயுடன் பேசினேன்”*

*“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”*

என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் ,

*சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று,*

ஆவலோடு காத்திருந்தனர்.

*பரமஹம்சர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம்,*

*“நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?”*

என்று கேட்டார்.....!!

அவர் சொன்னார்:

*“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”...!!*

*“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே...?”*

*“நன்றாகத் தெரியும்”*

“அப்படியானால்,

*என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”*

*“அது எப்படி....?*

*நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே....?”*

*“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,*

*கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா....?*

*நான் அதைப் படித்திருக்கிறேன்.*

*நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்”*

*என்று பரமஹம்சர் நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.*

*டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார்.*

*மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்..


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Abstract