தினம் மாறும் மனம்
தினம் மாறும் மனம்


காலை பொழுதில் செந்தில் சீக்கிரமாக கல்லூரிக்கு சென்று வகுப்பில் அமர்ந்து தான் புதிதாக வாங்கிய கதை புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனது வகுப்பறைக்குள் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து வந்தது.
அதை கண்டு அவன் ஓடி சென்று காத்தாடியை அமர்த்தினான்.
பின்பு தனது இடத்திற்கு சென்று அமர்ந்து மெதுவாக மூடி வைத்த புத்தகத்தை திறந்து படிப்பதை தொடர்ந்தான்.
அவனுடைய மனம் அன்று புத்துணர்ச்சியுடன் இயங்கி கொண்டு இருந்ததது.
அன்று தேவையான அனைத்து வகுப்பு வேலைகளையும் முடித்து வைத்து இருந்தான்.
அன்றைய தினம் அனைவருடனும் சிரித்து பேசி கொண்டு இருந்தான் செந்தில்.
அவன் மனம் கவர்ந்த பெண்ணின் முகத்தை அன்று பார்க்க வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பார்த்தான்.
மாலை நேரம், அந்த பெண்ணிடம் முதல் முறையாக மெசெஜ் செய்து பேசினான்.
செந்தில் மகிழ்ச்சியாக மாலை வேலைகளை செய்து விட்டு சாப்பிட்டு விட்டு தனது ஹாஸ்டல் ரூம் வந்து படுத்தான்.
அடுத்த நாள் காலை எழுந்த செந்தில் மணியை பார்த்த பொழுது மணி 09:45,முதல் வகுப்பு ஆரம்பித்து முடிய போகும் நேரம்.
வேகமாக காலேஜிற்கு கிளம்பி விட்டு நேரத்தை பார்த்தால் 10:07 இரண்டாவது வகுப்பிற்கும் தாமதம் ஆனது.
சரி மூன்றாவது வகுப்பிற்கு செல்லலாம் என சிறிது நேரம் அலாரம் வைத்து விட்டு கண் அசந்து படுத்தான் செந்தில்.
மீண்டும் எழுந்து பார்த்தால் மணி 01:45,மதியம் ஆகி இருந்தது.
செந்தில் வேகமாக சாப்பிட்டு விட்டு வந்து யோசித்தான் பேசாம இன்னைக்கு லீவு போட்டா என்ன? என எண்ணி அன்று லீவு போட்டு விட்டு ஜாலியாக மொபைல் பார்த்து விட்டு மாலை வகுப்பில் இருந்து வந்த தனது நண்பர்களி
டம் வகுப்பில் என்ன நடந்தது? என கேட்டான்.
இரண்டு பாடங்களில் அசைன்மென்ட் வைக்காமல் அன்று வகுப்பில் நடந்த விஷயங்களை மட்டும் எழுதி தந்தால் போதும் என சொன்னார்கள் என கூற செந்தில் பதற்றம் ஆனான்.
மற்ற வகுப்புகளில் மிக முக்கிய பாடங்களை நடத்தியதை அறிந்து நண்பர்களின் நோட்ஸ்கைளை வாங்கி வந்து மாலை வேகமாக படிக்க தொடங்கினான்.
பின்பு அடுத்த நாள் கல்லூரிக்கு சென்று ஆசிரியர்கள் இடம் தான் வகுப்பிற்கு வராததை கூறி அந்த பேப்பரில் எழுதி தர அவர்கள் சொன்னதை எழுதி தர அனுமதி கேட்க ஆசிரியர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அன்று மாலை,ரூமிற்கு வந்த செந்தில் தன் வாழ்க்கை இரண்டு தினங்களில் ஒரு முற்றிலும் மாறுபட்டதாக நடந்ததை யோசித்து கொண்டு நேரம்,வாழ்க்கை,சுற்றி இருந்தவர்கள் மீது கோபப்பட்டு கொண்டு இருந்தான்.
அப்பொழுது ஒரு பட்டாம்பூச்சி அவன் ரூமிற்குள் வந்ததை பார்த்தும் காத்தாடியை அமர்த்தாமல் இருக்க அந்த பட்டாம்பூச்சி அடிப்பட்டு அவனது முன் வந்து விழ பதறிய செந்தில் காத்தாடியை அமர்த்தி விட்டு அந்த பட்டாம்பூச்சியை கையில் மெல்ல எடுத்து அடிப்பட்ட இடத்தில் சிறு முதலுதவி செய்ய ஆரம்பித்தான்.
பட்டாம்பூச்சியின் இறகுகளை பார்த்த செந்தில் ஆச்சரியத்தை அடைந்தான்.
அதன் ஒரு பக்க இறகில் இருந்த அமைப்பு இன்னொரு இறகில் முற்றிலும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல் திரும்பி இருந்தது.
செந்தில் ஒரு உண்மையை உணர்ந்தான்.
வாழ்க்கை எப்பொழுதும் ஒருவருக்கு ஒரே மாதிரி இருப்பதில்லை, மகிழ்ச்சி, சோகம் மற்றும் சிரிப்பு,அழுகை மற்றும் ஏற்றம்,இறக்கம் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.
இரண்டும் இருப்பதால் தான் நாம் வாழ்க்கையை இன்னும் கவனத்துடன் உற்று பார்க்கிறோம்,அப்படித்தானே?