நட்பில்
நட்பில்
அன்று சரவணன் ஆபீஸில் அமர்ந்து இருந்தான்.
அவனது எண்ணங்கள் அனைத்தும் முந்தைய நாட்களில் நடந்த சம்பவங்களை பற்றியே இருந்தன.
அப்பொழுது புதிதாக அவனுக்கு கிடைத்த நண்பர்கள் அவனிடம் வந்து பேசும் பொழுது சரவணன் பேசாமல் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழுந்து சென்றான்.
“என்னை ஏன் கூப்பிடவே இல்லை அவர்கள்,என்னை பற்றி மறந்து விட்டார்கள்,எனக்கு மதிப்பு அளிக்கவில்லை” என அந்த புது நண்பர்கள் பற்றி சரவணன் யோசித்து கொண்டே அவனுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தான்.
அவனுடைய நண்பர்கள் என்னவென்று அங்கு யோசித்து கொண்டு இருக்க சரவணன் இங்கு தன்னை மையப்படுத்தி அவன் மேல் இருந்த தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள் செய்த செயல்களுக்கு காரணம் யோசித்து கொண்டு இருந்தான்.
“நட்பில் பேசி வரும் பிரச்சனைகள் சில,பேசினால் தீர்ந்துவிடும் பிரச்சனைகள் பல,ஆனால் தேவையற்ற மௌனம் அந்த நட்பையே உடைத்து விடும் ஆபத்து கொண்டது,அந்த நட்பு மீண்டும் சேராமல் கூட போய் விடும்”.
சரவணன் அதை உணராமல் மீண்டும் மீண்டும் அவர்களை தன் செயல்களால் காயப்படுத்தி கொண்டே இருந்தான்.
அவனிடம் வந்து பேசம் அந்த புது நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து போனது.
இறுதியாக சரவணன் எங்கே அந்த நட்பு இல்லாமல் போய்விடுமோ? என்ற பயம் அவனை யோசிக்க வைத்தது அப்பொழுதுதான் அவன் செய்த தவறுகளை உணர ஆரம்பித்தான்.
சரவணனின் மனதில் இருந்த அனைத்தையும் அவனுடன் பேசும் அந்த புது நண்பர்களில் இரு நண்பர்களிடம் கூறினான்.
அவர்கள் கூறியது “உன்னுடைய மனதில் உள்ளதை எங்களிடம் சொன்னால்தான் தெரியும்.
நீ எங்களிடம் ஒரு விசயத்தை கூற வேண்டும் அல்லது நாங்கள் தவறாக ஒரு செயலை செய்துவிட்டோம் என்று அதை எங்களிடம் கூறினால் தானே தெரியும்.
நீ ஒவ்வொரு தடவை நாங்கள் பேசியும் எங்களிடம் பேசாமல் எங்களை பார்த்தும் பார்க்காதது போல் கடந்து சென்றால் அது எங்களை எவ்வளவு காயப்படுத்தியது? எவ்வளவு வேதனை தந்தது தெரியுமா?
ஒரு நட்பில் பிரச்சனை வருவது இயல்பு,சிறு கருத்து வேறுபாடு,தவறான புரிதல் அல்லது எதோ ஒரு காரணம்.
ஆனால் ஒரு நண்பனின் மனதை ஒரு அளவிற்கு மேல் காயப்படுத்தினால் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் அதை சரி செய்ய முடியாது.
நாங்கள் உன்னை நண்பனாக தான் பார்க்கிறோம்,அதுதான் உன்னோடு இப்பவும் பேசுகிறோம்.
ஆனால் எல்லாரும் ஒரே போல் இருப்பதில்லை,விருப்பமில்லாத உணர்வுகளை மனமும் ஒரு அளவிற்கு மேல் சுமப்பதில்லை”.
அவர்கள் இருவர் பேசியதை கேட்டு தன் மீது இருந்த தவறுகளை உணர்ந்து சரவணன் மிகுந்த வேதனை அடைந்து தன்னை தானே நொந்து கொண்டான் அத்துடன் இப்படி ஒரு நண்பர்கள் கிடைத்தது காலமும்,சூழ்நிலையும் அவனுக்கு செய்த ஒரு பெரும் உதவி என உணர்ந்து சற்று மகிழ்ச்சியும் ஆனான்.
சரவணன் அத்துடன் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொண்டான்,
“நமக்கு பிடித்தமானவர்கள் எத்தனை பேருடன் புதிதாக பழகினாலும்,பேசினாலும் என்றும் நம்மை மறப்பதும் இல்லை,ஒதுக்குவதும் இல்லை,அவர்கள் நம் மீது கொண்ட அன்பு என்றும் மாறுவதும் இல்லை.
நாம்தான் சில நேரம் அவர்களை விட்டு ஒதுங்கி நின்று அவர்களையும் ஒதுங்க வைக்கிறோம்”.
“பேசங்கள்,மனதினுள் உள்ள குழப்பங்களை,வேதனைகளை பேசி தீர்க்க முடியும் என்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுங்கள்.
பேசி இங்கு சரியான பிரச்சனைகள் பல உண்டு”.
