பேசினோம்
பேசினோம்
அன்றைய தின அலுவலக வேலைகள் முடிந்து வீட்டிற்கு கிளம்பிய சிரிஷ் வீட்டிற்கு வந்து கை, கால்கள் கழுவி புத்துணர்ச்சியாகி பின் சாப்பிட அமர்ந்தான்
அப்பொழுது அவனது மொபைலில் மெசெஜ் வந்த சத்தம் கேட்க எழுந்து சென்று தனது மொபைலை பார்க்க அவனது நண்பன் கிரி மெசேஜ் செய்திருந்தான்,
"டேய் கீதா மெசேஜ் பண்ணிருந்தா டா,நான் போன வாரம் போன கோயில் பத்தி கேட்டா, நான் அதை பத்தி சொன்னேன்.
அப்பறம் எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு" என கிரி அனுப்பிய மெசேஜை படித்து விட்டு சிரிஷ் "இவ்வளவுதானா? நீ என்னா லவ் பண்றேன்னு சொல்லிட்டு இப்படியே பேசிட்டு இருந்தா நீ எப்படி அவகிட்ட மனசு விட்டு பேசி காதலை சொல்லுவ?" என மெசேஜ் அனுப்பிவிட்டு தொடர்ந்து சாப்பிட்டான்.
கிரி கீதா மீது ஒருதலை காதல் கொண்டிருந்தான், இருவரும் வெவ்வேறு நகரங்களில் தங்கி படித்ததால் ஆன்லைனில் மட்டுமே பேசி கொண்டிருந்தனர்.
ஒரு வாரம் கழித்து,
சிரிஷ் அவனது காதலி மஹியிடம் பேச மிகவும் யோசித்து கொண்டிருந்தான்.
சிரிஷ் அவளிடம் என்ன பேசலாம் என நீண்ட நேரம் யோசித்து விட்டு அவளிடம் தனக்கு முந்தைய நாள் ஆபிஸில் நடந்த சம்பவத்தை கூறி விட்டு அவள் என்ன கூறுவாள்? என போனை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான்.
மஹி சிரிப்பு ஈமோஜியை அனுப்பி கொஞ்ச நேரம் அவனுடன் பேசிவிட்டு நாளை போன் செய்வதாக மெசேஜ் அனுப்பினாள்.
சிரிஷ் மனதில் வார்த்தைகளால் வி
வரிக்க முடியாத மகிழ்ச்சி அடைந்தான் மற்றும் அந்த மகிழ்ச்சியின் அளவை எதனுடனும் ஒப்பிடலாம் என யோசித்து கொண்டிருந்தான்.
அப்பொழுது சிரிஷின் மனதில் திடீரென கிரியிடம் அவன் சில தினங்களுக்கு முன் அவன் காதலியிடம் பேசிய ஒரு விஷயத்தை பற்றி சந்தோஷமாக தன்னிடம் கூறும்போது தான் அதை பற்றி அவனுக்கு வருத்தத்தை அளிக்கும் வகையில் பேசியது குறித்து தன்னை தானே திட்டிக்கொண்டு வருத்தமடைந்தான்.
சிரிஷ் உடனே கிரிக்கு போன் செய்தான்,கிரி போன் எடுத்து சொல்லு டா? என கூறி முடித்த உடனே சிரிஷ் "ரொம்ப சாரி டா,அன்னைக்கு நீ உன் சந்தோஷத்தை என் கூட பகிர்த்துக்கிட்ட நான் அது பத்தி தேவையில்லாம பேசி உன்னை கஷ்டப்பட வச்சிட்டேன்.
எனக்கு இன்னைக்கு தான் ஒரு விஷயம் புரிஞ்சுது டா,
நமக்கு பிடிச்சவங்க நமக்கு குடுக்குற சந்தோஷமும்,வருத்தமும் நமக்கு ரொம்ப பெருசு டா,
எதுவும் மனசில் வச்சிக்காத,சாரி"
என சிரிஷ் பேசி முடித்தான்.
கிரி உடனே "நீ அப்படி பேசுன அப்பறம் கொஞ்சம் கஷ்டம் ஆகிருச்சு டா,
ஆனால் நீ உன்னோட கருத்தை சொல்ற, நம்மளோட சந்தோஷம் அது நம்ம கையில் தானே இருக்கு?
பரவாயில்லை டா,நீ அதை புரிஞ்சிக்கிட்டதே போதும்"
என கூறினான்.
கிரி,சிரிஷ் இருவரும் நீண்ட நேரம் பேசிவிட்டு கிரி "பார்ப்போம் டா" என சொல்ல, சிரிஷ் "கண்டிப்பா" என சொல்லி ஒருவர் பின் ஒருவர் அழைப்பை துண்டித்தனர்.