Logesh Kanakaraj

Drama

5.0  

Logesh Kanakaraj

Drama

பொக்கிசம்

பொக்கிசம்

3 mins
580


என்ன ஆச்சு இவனுக்கு....?...அம்மா முனுமுனுத்தார் மெதுவாக.


அப்பா உறங்கிக் கொண்டிருந்தார்...இரண்டு சிப்டுகள் தொடர்ந்து பார்த்துவிட்டு ( இரவு சிப்டு உட்பட ) உறங்கிக் கொண்டிருந்தார்..

அவர் விடும் குறட்டையை ஒரு நிமிடம் ரசித்தான். ஆம், அவன் அப்பாவின் குறட்டை தன்னை இரவில் எழுப்பினாலும் கனவை கலைத்தாலும் கூட அந்த குறட்டையை ரசிக்கவே செய்வான். அவன் அப்பாவின் வேலை பளு அவனுக்கு நன்றாக தெரியும்.


அண்ணன் எல்லாவற்றையும் கவனித்து கொண்டே இருந்தான்...எதையும் கண்டு கொள்ளாதவன் போல்.


அவன் எதையோ தேடி கொண்டிருக்கிறான்..

அவன் அலமாரியிலிருந்த எல்லா புத்தகங்களையும் எடுத்து புரட்டி கொண்டிருந்தான்..அதனுள்ளே எதனையோ தேடிக் கொண்டிருந்தான்...பழைய ஐனூறு ரூபாய் நோட்டு கூட இருந்தது..ஆனால் அவன் தேடியது அதில் இல்லை. எல்லா புத்தகங்களையும் தேடிவிட்டான் திருக்குறள் புத்தகம் உட்பட..

தொடர்ந்து தேடுகிறான்...சில பாலித்தின் பைகள்..கிழிந்திருந்தாலும் அதனுள்ளே வீட்டின் மின்சாரா பில், தண்ணீர் வரி ரசீது, LIC பிரீமியம் செலுத்திய பில், நான்கு முனைகளில் மஞ்சலிடப்பட்ட அண்ணனின் ஜாதகம் என எல்லாம் பாதுகாப்பாகவே இருந்தன...அவன் தேடியது மட்டும் கிடைத்தவாறு இல்லை..


டைரிகளில் தேடுகிறான்...வருடம் 2000 என்று குறிப்பிட்ட பச்சை டைரி..அவன் அப்பாவிற்கு அலுவலகத்தில் கொடுத்ததாக இருக்கும்..அதை புரட்டுகிறான்..சற்றே ஒரு புன்னகை அவனுள்..நான்காம் வகுப்பில் அவன் எழுதிய சில கவிதை வரிகள் ஒரு சிரிப்பை ஏற்படுத்தியது அவனுக்குள்..


"கனவை கண்டேன் கணவை கண்டேன்

கனவுக்குள்ளே காதல் கொண்டேன்" என்று சில வரிகள்...ஏதோ ஒரு காதல் படத்தை ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு எழுதிய ஞாபகம்..அண்ணன் ஒரு நாள் அந்த டைரியை எடுத்து வீட்டிற்கு வந்தவரிகளிடம் அந்த வரிகளை வாசித்து மானத்தை வாங்கிய நினைவுகள் அவனுக்குள் ஒரு நிமிடம் ஊஞ்சலாட..

உடனே அதை வைத்துவிட்டு மீண்டும் தொடற்கிறான்..

சீட்டு டைரி , அம்மா அப்பா இருவரும் அமர்ந்து பட்ஜெட் இடும் டைரி..எந்த டைரியிலும் இல்லை..

போட்டோ ஆல்பம் ஒன்றை எடுக்கிறான்..அவன் அம்மா அப்பாவின் திருமண போட்டோ..அவன் அண்ணன் தவழும் வயதில் எடுத்த போட்டோ...அவனுடைய மழலை போட்டோ பார்க்க அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது..அவனது பள்ளி பருவ குரூப் போட்டோக்கள் வரிசை வரிசையாக சற்று அவனை அமைதியாக்கியது..முதன்முதலில் அஆஇஈ சொல்லித் தந்த மேரி மிஸ்..ABCD சொல்லித் தந்த டெல்பி மிஸ்..போட்டோக்கள் அவன் நினைவுகளை பறக்கவிட்டன..

பின்னர் குடும்பத்துடன் ஊட்டி சென்ற போட்டோக்கள் மீண்டும் அவன் நினைவுகளை கிளறியது..

"அவன் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ அப்போது,,.ஊட்டியில் குடும்பத்துடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான்..அவன் முன்னால் பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவி,,கான்வென்டில் படிப்பாள் போல...எல்லோரும் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள் ஊட்டியை ரசித்தபடி,,அவன் திடீரென்று திரும்பி பார்க்கிறான்,,,யாரும் இல்லை..முன்னால் அச்சீருடை மாணவி மட்டும்...ஒரு நிமிடம் பதறிப் போனான்,,பின்னர் பாதையின் அந்த பக்கத்திலிருந்து சப்தம்,,அது அம்மாவின் குரல்,.அம்மா கேட்கிறார் அந்த சிறுமியிடம்.."உன் தம்பிய உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடரையா" ..அந்த சகோதரியும் சிரிக்கிறாள் சரி "நான் தம்பியை பார்த்து கொள்கிறேன் " என்று...எல்லோரும் சிரிக்கிறார்கள் அவனை பார்த்து..அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.."


மீண்டும் அப்பாவின் குறட்டை..புன்னகைத்து கொண்டே அந்த போட்டோ ஆல்பத்தையும் மூடி வைத்தான்....


அப்பாவின் குறட்டையை மீண்டும் ஒரு முறை ரசித்தான்,.

எத்தனை ஆசையான படங்களோ நிகழ்ச்சிகளோ இருந்தால் கூட அப்பா உறங்கி கொண்டிருந்தால் தொலைக்காட்சி பெட்டி அமைதியாகவே இருக்கும்,.அறையின் கதவை கூட திறக்க மாட்டான் அப்பாவின் உறக்கம் போய்விடும் என்று..

அன்று அவனுக்கு பொறுமை இல்லை..மெதுவாக திறக்கிறான் அப்பா உறங்கிக் கொண்டிருக்கும் அறைக் கதவை..அந்த கதவை அவ்வளவு மெதுவாக லேசாக யாராலும் தொட்டிருக்க முடியாது..


அங்கே டேபிளின் மேல் ஏறி அட்டாளியில் சில கவர்கள், சில புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வருகிறான் வெளியே..எல்லாற்றுள்ளும் தேடுகிறான்..முடிந்ததாக தெரியவில்லை முகத்தில் தேடல்..


மீண்டும் அம்மா "என்ன ஆச்சுடா இவனுக்கு" அண்ணனிடம்,,இச்சமயம் கொஞ்சம் சிரித்து கொண்டே..

அண்ணன் ஏதோ சினிமா நடிகன் போல் கைகளிலேயே பேசினான் தனக்கு தெரியாது என்று,,

கலைத்த எல்லாவற்றையும் அடுக்கி வைத்தான்.

முகத்தில் ஒரு ஏமாற்றம்..


மணி பத்தை தொட்டது,.அப்போதே அப்பா உறக்கத்திலிருந்து எழுந்தார்..

அவன் காலை உணவிற்கு முன் தவறாமல் குளித்து விடுவான்,.இன்று இல்லை,,


தொலைக்காட்சி பெட்டி இப்போதும் அமைதியாகவே இருந்தது..எல்லோரும் காலை உணவிற்கு அமர்ந்தாயிற்று.

"நீ இன்னும் குளிக்கலையா! ஆச்சரியத்துடன் அப்பா,,


"இல்ல இன்னிக்கு குளிக்கல...சாப்பிட்ட பிறகு.." பதில் வந்தது..


சுட சுட இட்லியை இறக்கி வைத்தார் அம்மா..

இரண்டு சட்னிகள் வேறு..

இட்லி நன்றாகத்தான் இருந்தது..

ஆனால் அவனுக்கு இறங்கவே இல்லை..


அவன் அண்ணன் கேட்டார்..

"என்னடா காலைல இருந்து எதையோ தேடிகிட்டே இருக்க,..என்ன?"

அப்போது அம்மா அண்ணனை பார்த்து சிரித்தார்,,

"ஒன்னும் இல்ல " சற்று தாமதமாக பதில் வந்தது,,

மறுபடியும் அண்ணன் சும்மா விடவில்லை.

"என்னடா தேடுற சொல்லு"

இப்போது மௌனம் மட்டுமே பேசியது..


மூன்றே இட்லி தான் சாப்பிட்டான்...அவன் சாப்பிடுவதற்குள் எல்லோரும் கைகழுவி விட்டனர்,,


அம்மா சொன்னார் "இன்னும் ரெண்டு இட்லி இருக்கு நீ தேடனுது கிடச்ச பிறகு வந்து சாப்பிடு"


இவன் கையை துடைத்து கொண்டே சமையலறைக்கு வெளியே போனான்..

அங்கே நாற்காலியின் மேல் ஏதோ தென்பட்டது,.

எடுத்து பார்த்தான்

அவன் தேடிய அந்த பொக்கிசம்.

அண்ணனிற்கும் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கவில்லை,,அப்பாவும் சேர்ந்து கொண்டார்,,

அவனால் முழுவதுமாக சிரிக்க முடியவில்லை,,

நாணம் பெண்ணுக்கு மட்டும் சொந்தமானதல்ல,,

அவன் ஒரு நானத்தோடு தலை குனிந்தான்,,.


அந்த போட்டோ பத்து வருடங்களுக்கு முன்னால் பள்ளியில் எடுத்தது,.

யாருக்கும் தெரியாமல் இருக்க அந்த போட்டோவை ஒரு புத்தகத்தில் வைத்தது,.அதன் பிறகு மறந்து விட்டான்,.

ஆயுத பூசையின் முன் அம்மாவின் கண் பட்டிருக்கும் போல,...

அவன் பரிசு வாங்கும் பொழுது எடுத்தது,,

அதுவல்ல அங்கே மேட்டர்,.

அந்த போட்டோவில் எதேச்சையாக கவர் ஆகி விட்ட ஒரு மாணவி,.

அவனை முதன்முதலில் ஈர்த்த பெண்,,.முதல் ஈர்ப்பு.


அம்மா கேட்டார் "ஏன்டா பிரேம் போட்டுக்களாமா" ,,,நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆன பிறகும் எம்மருமக கிட்ட காண்பிச்சு சிரிக்கலாம்,..


தலையை நிமிர்ந்தான்,,

சிரிப்பை அடக்க முடியவில்லை...அவனால்..


இப்போது குறட்டை சத்தமில்லை

சிரிப்பு சப்தம் மட்டுமே.Rate this content
Log in

Similar tamil story from Drama