Logesh Kanakaraj

Drama Tragedy Inspirational

3.6  

Logesh Kanakaraj

Drama Tragedy Inspirational

மிதிபடும் பூக்கள் 2

மிதிபடும் பூக்கள் 2

11 mins
628


குண்டுகள் இடப்படும் போர் முனையிலிருந்து...வீட்டினுள் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் போர் வரை..எல்லா வன்முறைகளிலும் மௌனம் காத்து கொண்டிருக்கும் எம் பிஞ்சுகளுக்கும்


இந்த போர்கள் அப்பிஞ்சுகளை பாதிப்பது தெரிந்தும்....தெரியாதது போல் சட்டை செய்யாமல் அப்போர்களை கணத்த நெஞ்சுடன் நடத்தி கொண்டு ஜெயித்து கொண்டிருக்கும் மனிதம் மறந்த நம் எல்லாருக்கும் இக்கதை சமர்ப்பணம்


சிவா,சாலினி -இந்த சுதந்திர இந்தியாவில் ஒரே வீட்டில் பிறந்த நகரத்து பூக்கள். சிவா பதினொன்றாவது படிக்கிறான். அவன் இருப்பது அவன் அம்மாவிடம். சாலினி நான்கு வயது இளையவள். அவள் இருப்பது அவள் அப்பாவிடம்.

புரிவது போல சொல்ல வேண்டுமென்றால்

ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தால்..லாபம் யாருக்கும் இல்லை என்பதாலோ இல்லை அது நாட்டின் பொருளாதாரத்தை சரிவடைய செய்யும் என்பதாலோ...தனித்தனி குடும்பமாக தனித்தனி வீட்டில் வாழ்தல் லாபம் என்ற நோக்கில் தனிகுடுத்தனமாக மாறிவிட்ட இந்த நாகரிக சமூகத்தில்...

தனிகுடுத்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கணவனக்கும் மனைவிக்கும் பிறந்த குழந்தைகளே சிவா மற்றும் சாலினி.


பின்னர் தனிகுடுத்தனமும் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு லாபம் அளிக்காமல் போக..

தனிகுடுத்தனத்தில் இருந்து கணவனும் மனைவியும் தனித்தனியாக குடும்பங்கள் நடத்தினால் லாபம் என்கிற தத்துவம் மேலோங்க........

அடுத்த தெருவில் இருந்த இரண்டு வேப்ப மரங்களும் வெட்டப்பட்டு இன்னொரு வீட்டை உருவாக்கிய ரியல் எஸ்டேட் காரரின் லாபத்திற்காக,..

கடந்த ஒரு வருடமாக கணவனும் மனைவியும் பிரிந்து இரு வேறு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.


இது இந்தியாவின் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்குமா என்றால்,..சத்தியமாக நான் பொருளாதாரம் படிக்கவில்லை,.ஆகவே என்னிடம் பதிலில்லை.


நல்லவேளை வீடுகளை பிரித்துவிட்டாலும் அப்பிஞ்சுகள் படிக்கும் பள்ளியை மாற்றவில்லை தாயும் தந்தையும்..


அண்ணனும் தங்கையும் தினமும் பள்ளிக்கு வருகையிலும் பள்ளி விட்டு போகையிலும் நடந்தே செல்வார்கள் ஒன்றாக ஒரு தெரு முனை வரை. பின்னர் சிவா அவன் அப்பாவின் வீட்டிற்கும் சாலினி அவள் அம்மாவின் வீட்டிற்கும் வேற்றுபாதையில் நடப்பார்கள்.

இவர்களுடன் தினமும் நடந்தே செல்லும் ஒரு பயாலஜி மிஸ்


இவர்கள் ஐவருக்குள் நடக்கும் கருத்து பரிமாற்றங்களே இக்கதை,,,


1


சார் இட்லி தோசை பூரி வடை என்ன சாப்பிடுரீங்க,..


எனக்கு ஒரு காபி போதும்.,

எனக்கு மேங்கோ மில்க் சேக்...


வேற சார்..


போதும் சார்....


அப்பா நியூஸ் பார்க்கும் போதுதா ஞாபகம் வருது. நாளைக்கு எனக்கு நூறு ரூபா வேணும். சிரியாவுல போரால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பணம் சேர்த்து அனுப்புறாங்க வசந்தி மிஸ்,..


சரிடா உனக்கு நூறு அண்ணனுக்கு நூறு குடுக்கற சரியா,,.


ஓகே பா,,.அப்பா சிரியாவுல வன்முறையில நிறைய குழந்தைங்க பாதிக்கபடுறாங்க பா..பாவமா இருக்கு...


ஆமாம் டா,....உனக்கு புரியுது...அங்க போர் நடத்துறவங்களுக்கு புரிய மாட்டங்குதே,..


அப்பா வன்முறைனா என்னப்பா?


அதுதான் டா சிரியாவுல நடக்குற மாதிரி குண்டு போடறது அது எல்லாம் தான்,..


அவ்ளோதானா..நேத்து நாங்க நடந்து வரும்போது வசந்தி மிஸ் நிறைய சொன்னாங்க..

வன்முறைனா போர் மட்டுமல்ல,.

பாலியல் வன்முறை இருக்கு

குடும்ப வன்முறை இருக்கு

நிறைய இருக்கு...

எனக்கு ஒன்னுதா புரிஞ்சுது..அங்க நடக்குற வன்முறைக்கும் நம்ம வீட்டுல நீங்களும் அம்மாவும் சண்டை போடறதுக்கும் வித்தியாசம் இல்ல.,.

குண்டு சத்தம் 110 டெசிபலுக்கு மேல இருக்கும்..நீங்க சண்டை போடறது 30 டூ 60 டெசிபல் இருக்கும்..டெசிபல் தான் வித்தியாசம்,.ஆனா பாதிக்கப்படறது என்னை மாதிரி அண்ணனை மாதிரி குழந்தைகள் தானப்பா,.

நானும் அண்ணனும் எவ்ளோ பயந்துருப்போம்,,எவ்ளோ நாள் தூங்காம இருந்திருப்போம் உங்களுக்கும் அம்மாக்கும் தெரியாது,.


அப்பா கோபிச்சுகாதீங்க,,,சாரி,,


ஜுஸ் சாப்பிடு...எதுக்குடா சாரி என்னோட தெய்வமே,,..உண்மைய தான் நீ சொன்ன,.


அது ...ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு மா,,.அது மட்டும் இல்ல அப்பா அப்பப்ப குடுக்கிற ஆல்கஹால் இருக்குள்ள அதுவும் புத்திய மட்டுப்படுத்திவிடும்.,.

அதே மாதிரி உனக்கு இருக்கிற மாதிரி வசந்தி மிஸ் எனக்கு இல்லாம போயிட்டாங்க..


குடுச்சாச்சா வா போலாம்,..


அப்பா எல்லாரும் சாப்பிட தான் ஹோட்டல் போவாங்க...நம்ம தான் பாத்ரூம் போறதுக்காக ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு போறோம்,..


ஆமாம் டா பாத்ரூம் போறதுக்கு எம்பது ரூபா செலவு...டிப்ஸ் பத்து ரூபா...

என்ன பன்னுவது இங்க அங்கங்கே பாத்ரூம் கட்டி வைக்கலையே...


ஏம்பா நம்ம நாட்டுல சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரது இல்ல...?


இல்லமா.....பெண்ணுக்கு முக்கியத்துவம் தரது இல்ல நம்ம நாட்டுல. அதுதான் பிரச்சனையே,,


அது ஏம்பா...?


அது தாண்டா மட்டுப்பட்ட சிந்தனை..ஆல்கஹால் மாதிரி இங்க நிறைய விஷயங்கள் நம்ம சிந்தனைய மட்டுப்படுத்துகிறது...


அப்போ நீங்க இனிமேல் அந்த டானிக்க குடிக்க மாட்டீங்கல்ல...


சத்தியமா குடிக்க மாட்டேன் டா என் தெய்வமே..


சிந்தனைய மட்டுப்படுத்துற ஆல்கஹாலும் வேண்டாம்,.

சிந்திக்கவே விடாம பன்னுற இந்த கல்வி முறையும் வேண்டாம்


நீ அந்த வசந்தி மிஸ் கிட்டையே நிறைய கேட்டு தெரிஞ்சுக்கோ...

புக்ல அந்த மிஸ் சொல்லி தரதுலாம் இருக்காது,,.


2


என்னடா CSK ஜெயிச்சிருமா?


அம்மா CSK ஜெயிச்சாலும் சரி..மும்பை ஜெயிச்சாலும் சரி எனக்கு பிரச்சனை இல்ல.எல்லா டீம்லயும் நல்ல ப்ளேயர்ஸ் இருக்காங்க.


நான் IPL பாக்குறதே அந்த அக்காங்க ஆடற டேன்ஸ் பார்த்து கத்துகறதுக்கு தான்


யாருடா அந்த அக்காஸ் ...ஓ...அந்த சியர் கேர்ல்ஸா...

அத பார்த்து நீ என்ன பன்ன போற..நீ அங்க போய் ஆடப்போறியா என்ன.?


ஆமா சியார் பாய்ஸா ஆடப்போறேன்..

டேய் அது கேர்ல்ஸ் ஆடுனாதான் டா பார்ப்பாங்க,..நீ ஆடுனா வியாபாரம் ஆகாது..


அப்ப ஏன் கேர்ல்ஸ் ஆடுற womens T20 உலக கோப்பையை யாரும் பார்க்கிறதுல்ல..

பக்கத்து வீட்டு அக்கா CSK பத்தி எல்லாம் சொல்றாங்க,,.ஆனா womens T20னா பக் பக் னு முழிக்கிறாங்க,,.


டேய் தெய்வமே கேர்ல்ஸ் ஆடுற டேன்ஸ் வேற ..கிரிக்கெட் வேற...,


எல்லாமே ஆடுறது தானே

சரி பிரபுதேவா மாதிரி ஆடுனா எல்லாரும் பார்ப்பாங்களா...

நான் பிரபு தேவா மாதிரி டேன்சர் ஆகுறேன்..

IPL women T20 நடந்தா நான் சியர் பன்னுவேன்...


நீ என்னமோ பன்னு இப்ப CSK ஜெயிக்குமானு பார்க்கலாம்.


ஹஹா என்னம்மா CSK புஸ்ஸா...

சரி வா எனக்கு சமைக்க சொல்லி குடு..


உனக்கு வேற வேலை இல்லையாடா...போய் வேற வேலை இருந்தா பாரு,,. எல்லாரும் பயாலஜி படிச்சு டாக்டர் ஆவாங்க இவரு டேன்சர் ஆவாராம் சமைப்பாராம்..


பயலஜி படிச்சா நம்மள பத்தி தெரிஞ்சுக்களாம் டாக்டரே ஆகனும்னு அவசியம் இல்ல,.,


நான் IPL பார்த்துட்டு சும்மா தானே இருக்கேன்,...


நீ சமையல் கத்துகுட்டு என்னடா பன்ன போற..?

விஜய் TVல அந்த அன்கிள் வருவாரே அவரு மாதிரி ஆகுறேன்...நீ கூட பார்க்கிறயே குக் வித் கோமாளி அதுல கூட கலந்துக்கலாம்..


அடேய் இவரு டேன்சரா ஆவாரா,...அப்புறம் சமையலும் செய்வாராம்...


ஏமா நான் சமைச்சுகிட்டே டேன்சும் ஆடுவேன்.டேன்ஸ் ஆடிட்டே சமைக்கவும் செய்வேன்.


டேய் வாய் ஆதிகமா ஆகி போச்சு உனக்கு..


டேய் இங்க வாடா மக்கா..நான் உனக்கு சமைக்க சொல்லிதாரேன்...


பாரு பாட்டி ..எதுவுமே பேசலன்னா சமத்து னு சொல்லி பட்டம் குடுக்கறாங்க,,

கொஞ்சம் பேசுனா அதிகமா பேசுறனு சொல்லி அடக்கறாங்க..

வர வர இந்த நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போயிருச்சு...




3


சிவா என்னடா அது போட்டோஸ் நோட்ல ஒட்டி வெச்சுருக்க,,,குடு,..


ஒரு நிமிஷம்,,,.

ஸ்டூடென்ட்ஸ் இந்த போட்டோல இருக்கிறது யாருனு சொல்லுங்க,..


தோனி ..

தல தோனி,...


சரி இந்த போட்டோ.,.


என்னடா சத்தமே காணோம்...


பசங்களா தெரியலையா..?

இந்த சைடு.,.

உங்களுக்கும் தெரியலையா...


போச்சுடா நம்ம நாட்டோட நிலமையும் இப்படிதான் இருக்கு...


சிவா நீயே சொல்லு...வா


மிஸ்..

ஸ்மிரிதி மந்தனா...இப்ப இவங்க தான் பேமஸ்..முன்னாடி மிதாலி ராஜ் மாதிரி...


டேய் இது யாருடா...

இது சாலினி...என் தங்கச்சி,,,நாளைய கிர்க்கெட் ப்ளேயர்...


ஏன்டா உன் தங்கச்சிக்கு ஹாக்கி லாம் விளையாட தெரியாதா...

மிஸ் அவளுக்கு ஹாக்கி பேட் எப்படி புடிக்கனும்னே யாரும் சொல்லித் தரல இன்னும்,.

சொல்லி கொடுத்தா அதுவும் ஆடுவா..

ஆனாலும் அவ கிரிக்கெட் பிசுனசுக்கே வரட்டும் மிஸ்,.


என்னது பிசுனஸா...ஹஹா..

நல்லா பேரு வச்சிருக்க டா தெய்வமே...

கிரிக்கெட்டும் விளையாட்டு தான் டா..அத பிசுனஸா மாத்திட்டாங்க,,.

சாரி சாரி பிசுனசா மாத்திட்டோம்..

நம்ம தானே கன்சுயூமர்ஸ்...நம்ம எத வாங்கறமோ அத தானே விற்க முடியும்...


நம்ம நினச்சா எல்லா விளையாட்டையும் கிரிக்கெட் மாதிரி மாத்தலாம்,,,


சரி பசங்களா....ஒலிம்பிக்ஸ் வர போகுது..அத பத்தி படிச்சு வாங்க...

டைரி ல எழுத வேண்டாம் டா,.சிலபஸ்ல இல்லாதத படிக்க சொல்லி உங்கள கொடுமை படுத்தறதா எனக்கு திட்டு விழும்,..



4


அண்ணா மொபைல் குடு,..


நான் மொபைல் ஸ்கூலுக்கு கொண்டு வரது உனக்கு எப்படி தெரியும்...


ஹஹா...நீ படிக்கிற ஸ்கூல்ல நான்...


ம்,. சொல்லு...


.....நானும் படிக்கிறேன்....


குடு...மிஸ் தான் வரலைல...


நோ..குடுக்கமாட்டேன்,..என்ன வேணும் மொபைல்ல,..


அந்த கிரிக்கெட் கேம்,..


அப்ப நோ...


அண்ணா...


ஐ சே நோ....


ஏன்,.?


அப்பா குடுக்கிற ஆல்கஹால் மாதிரி...கேம் விளையாடறதும் அடிஷன்...

அன்னிக்கு நான் விளையாடிட்டு போய்ட்டு இருக்கும்போது,,,மிஸ் கிட்ட மாட்டிட்டேன்,..

மிஸ் தான் எனக்கு சொன்னாங்க. அப்பா ஆல்கஹால் குடிக்கக் கூடாதுனா...நம்மலும் கேம்ல அடிஷன் ஆககூடாது,..

கேம் எல்லாம் கிரவுண்டுல விளையாடனும்...


ஏனா நீ இவ்ளோ நல்லவனா மாறிட்ட ஒரே நாளுல...

நானா கிரவுண்டுல விளையாட மாட்டேன்னு சொன்னேன்..

நீ இருந்த வரயாவது நான் உன் கூட விளையாடிட்டு இருந்த...இப்ப நான் என்ன பன்றது..


நீ இப்ப வா..உனக்கு கேம் க்ரேவிங்க் அதிகமா இருக்கு...சாக்லட் வாங்கி தரேன்..டைவர்ட் ஆகும்..


இந்தா சாக்லெட்,..


அண்ணா போனா..


உனக்கு தெரியுமா..உலக சுகாதார மையம் ஸ்கிரீன் டைம பத்தி சொல்லுது..ரெண்டு வயசுக்கு கீழ இருக்கிற குழந்தைங்க மொபைல தொடவே கூடாது. ரெண்டிலிருந்து ஐந்து வயது இருக்க கூடிய குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல கண்டிப்பா குடுக்க கூடாது ,.


டேய் அண்ணா நீ கதை உடறியா...இல்ல உண்மையா...

இரு நான் உனக்கு இப்பவே காண்பிக்கிறேன்,,


ஹே கூகுள்,,WHO screen time,,,,

பாரு நீயே படிச்சு பாரு


அண்ணா இத தெரியாம நம்ம அத்தை பிரஜீத்துகு சாப்பிடும் போதெல்லாம் போனையே குடுக்கறாங்க..அவன் போன் தரலனா சாப்பிடவே மாட்டேங்குறான்...


நீ போய் பிரஜீத் கிட்ட சொல்லு,,,சாரி,.அத்தை கிட்ட சொல்லு,,,


அவன் சாப்பிடலன்னா விட சொல்லு...பசிக்கும்

போது அவனே வந்து பால் கேட்பான்...


ஓகே னா...பய் பய்,..



5


மிஸ் இன்னிக்கு அம்மா படத்துக்கு கூட்டிட்டு போறனு சொன்னாங்க,,..நான் கடைசியா தியேட்டர் போனது போன வருஷம். நாலு பேரும் சேர்ந்து போனது,.இன்னிக்கு நானும் அம்மாவும் மட்டும்,..


சரி என்ன படம்டா...அதோ அந்த போஸ்டர்ல இருக்கே ஜிப்ஸி படம்.


ஓ சூப்பர் படம் டா....


நீங்க பாத்துட்டீங்களா மிஸ்....


ஆனா அது A படம் டா..நீ எப்படி பார்ப்ப...பதினெட்டு வயசுக்கு மேல வந்தப்புறம் தாண்டா பார்க்கனும்..


ஏன் மிஸ் தியேட்டர் ல என்ன விடமாட்டாங்களா,,,?


தியேட்டர்ல அவாங்களுக்கு டிக்கெட் வித்தா போதும்டா...அவன் அவனுக்கு அவன் அவனோட வியாபாரம்,...


ஏன் மிஸ் நீங்க சூப்பர் படம்னு தானே சொன்னீங்க...பார்த்தா என்ன,..


நல்ல படம் தான் டா...ஆனால் பதினெட்டு வயசுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு அது புரியாம போலாம்,..ஒரு மெட்சியூரிட்டி வரனும்டா,,,.


அப்போ பதினெட்டு வயசு ஆனா எல்லாம் புரியுமா மிஸ்,,,?


பதினெட்டு வயசானாலும் சொல்லி குடுக்கலன்னா புரியாது டா,..,தப்பா கூட புரியலாம்,...


சரி மிஸ் நீங்க கடைசியா பார்த்த U படம் சொல்லுங்க...நான் அதுக்கு போறேன்...


ம்....சில்லு கருப்பட்டி படம் டா...


அப்போ அந்த படத்துக்கு கூட்டிட்டு போக சொல்றேன்,,.


டேய் அந்த படம் இப்போ தியேட்டரில் இல்ல டா..போன்ல பார்க்கலாம்,,.


ஓ..இல்ல மிஸ்,.,,நான் தியேட்டர் தான் போகனும். நான் படம் பார்க்கவா போறேன்,..பாப்கார்ன் சாப்பிடத்தான் போகிறேன். சரி அம்மா கிட்ட ஒரு U படம் கூட்டிட்டு போக சொல்றேன்,.


ஆனா மிஸ் U படம் லாம் நான் பார்த்தா பிரச்சனை இல்லைல,..


டேய் தெய்வமே கஷ்டமான கேள்விய கேட்டுட்டையேடா,..உனக்கு பதில் சொல்றதுக்கு நான் என்னை இன்னும் தயார் படுத்திகனும்...


நீ கேட்ட கேள்விக்கு பதில் எங்கிட்ட இல்லடா..


தணிக்கை குழு னு ஒன்னு இருக்கு..சென்சார் போர்டு,..அவங்களுக்கு ஒரு கடிதம் எழுதி போடனும்...இந்த மாதிரி ஒரு சின்ன பையன் U படம் பார்த்தா எந்த பிரச்சனையும் இல்லையானு கேட்கிறான்...அவனுக்கு நான் என்ன பதில் சொல்ல னு,,.

அவங்க என்ன பதில் சொல்றாங்கனு பார்ப்போம்,.



6



ஏன்டி ரெண்டு நாளா வரல...என்ன ஆச்சு...?


அண்ணா அது வந்து,..நான் பெரிய பொன்னு ஆயிட்டனா,..bleeding வர ஆரம்பிஞ்சுருச்சு...


ஓ அப்படியா...menstruation ஆயிருச்சா...menarche ஸ்டார்ட் ஆயிருச்சா...

இத நேத்து தான் வசந்தி மிஸ் சொல்லி கொடுத்தாங்க,, மென்சஸ் ரெகுலரா வரனுமாம்,.மாசம் மூனு டூ அஞ்சு நாள் வருமாம்..


எனக்கு அப்ப தான் புரிஞ்சுச்சு அம்மா ஒரு சில நாள் வேலைக்கு போகமாட்டாங்கல,,டையர்டா படுத்துக்குவாங்கல.,


அண்ணா எனக்கு இத யாரும் சொல்லி தரலையே,.,உனக்கு தெரிஞ்சிருக்கு,.


ஆமா அப்பாவுக்கு இத பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல,,அவரு CA தானே படிச்சிருக்கார்.

ஆனா அத்தைக்கு பாட்டிக்கும் தெரியும் ல..அவங்க சொல்லலையா...


சரி நான் வசந்தி மிஸ் சொன்னதை உனக்கு சொல்றேன் கவலைப்படாதே...


மிஸ் இன்னொன்னும் சொன்னாங்க...

சிலருக்கு அந்த bleeding டைம் அப்ப சோர்வு ரொம்ப அதிகமா இருக்குமாம்..சிலருக்கு கோபம் கூட அதிகமா வருமா...

அதுக்கு பேரு என்னமோ சொன்னாங்களே..


ஆஆ.ப்ரிமென்ஸ்ட்ருவல் டிஸ்போரியா ( premenstrual dysphoria)...


சாலினி நீ நோட் பன்னிருக்கியா...அந்த டைம்ல தான் அம்மா அப்பாவுக்கு சண்டை அதிகமாக வரும்,,,

முதல்ல அப்பாவுக்கு தான் இத சொல்லி கொடுக்கனும்.


அய்யோ அது வராம இருக்கனும்னா என்ன பன்னனும்,..?


எனக்கு சரியா தெரியல...ஆனா மிஸ் சொன்னாங்க நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு..ஐரன் கால்சியம் உள்ள சாப்பாடு சாப்பிடனுமாம்.


அதனால நான் அந்த லேஸ் (lays) பாக்கெட்லாம் நான் வாங்கி தரமாட்டேன்..


அப்ப பானி பூரி..

அதுவும் எப்பவாதுதான்...


போனா அப்ப நீ மட்டும் சாப்பிடுவ...பொன்னு நான் மட்டும் சாப்பிட கூடாதா,..


ஏய் சாப்பிடுறதல ஆம்பளைங்க சாப்பிடறது பொன்னுங்க சாப்பிடறது னு சாதி இருக்கா என்னா.,.?

உன் உடம்புக்கு அது கெட்டதுனா என் உடம்புக்கும் கெட்டது தான்...


நானும் சாப்பிட மாட்டேன்,,


அப்ப சரி,...




7


அண்ணா நேத்து ஒரு கனவு,..நான் கிரிக்கெட் ட்ரஸ் போட்டுட்டு க்ளவ் மாட்டிட்டு விளையாடிட்டு இருக்கேன். என் கூட மிதாலி ராஜ் பேட்டிங் பன்னிட்டு இருக்காங்க. எதிர் டீம் மஞ்சள் சர்ட் ஆஸ்திரேலியா..அந்த சைடு ல நீயும் பிரபு தேவாவும் டேன்ஸ் ஆடிட்டு இருக்கீங்க..


ம்,,.சொல்லு ,..சொல்லு...


உடனே திடீர்னு நியூட்டன்,..நியூட்டனோடா முகம்,..அப்புறம் ஒரு ஆப்பிள் மரம்...அதிலிருந்து ஒரு ஆப்பிள் கீழ விழுது...

நான் டைவ் அடிக்குறேன் க்ளவுஸ் கையோட..


ம் அப்புறம் என்னாச்சு,.


ஆப்பிள் என் கைக்குள்ள விழுகல,...அப்படியே நின்னுருச்சு...என்ன அப்படியே சுத்துது...அப்படியே எல்லா ஆப்பிளும் கீழ விழுந்து சுத்த ஆரம்பிக்குது..ஜுபிடர் வீனஸ் லாம் என்ன சுத்துது,..

நான் space ல இருக்கேன்.

நான் திடீர்னு நியூட்டனின் ஐந்தாவது விதி யுரேகா யுரேகா னு கத்துற,...அப்பாவும் பயந்து எழுந்தாட்டாரு..நானும் முழிச்சுட்ட...


ஹஹஹா...நீ ரொம்ப படிச்சு குழம்பி போயிட்ட,,

சரி நல்லா பார்த்தியா...நீ போட்டு இருந்தது கிரிக்கெட் ட்ரஸ்ஸா ஸ்பேஸ் ட்ரஸ்ஸா....


ம்,,,நல்லா பார்க்குல,.


அது சரி ,,அது என்ன மிஸ் ...நியூட்டனின் ஐந்தாம் விதி...நான்காம் விதி னு ஒன்னு இருக்கா,,,

எனக்கு தெரியல டா பிசிக்ஸ் டீச்சர தான் கேட்கனும்...


ஆனா அது எப்புடி நீ கிரிக்கெட்டும் ஆடுவ,.

ஸ்பேசுக்கும் போவ,..


நீ சொன்னியல்ல அன்னிக்கு சமைச்சுகிட்டே டேன்ஸ்,.டேன்ஸ் ஆடிட்டே சமையல்,,அந்த மாதிரி தான்,,.


ஏய் நீ ரொம்ப பேசுற,..


ஹஹா...உன் தங்கச்சி உன்னை விட ஒரு படி அதிகமானபுத்திசாலியா தான் டா இருப்பா...


உன் தங்கச்சி ஸ்மிரிதி மந்தனா மாதிரி ஆவானு பார்த்தா கல்பனா சாவ்லா மாதிரி ஆவாளாட்ட இருக்கே,,,


வேண்டாம் மிஸ்,,,போன வருஷம் புக் ல கல்பனா சாவ்லாவ பத்தி படிச்சேன்,.

இன்னும் கொஞ்ச தூரம் அவங்க தரைக்கு வந்திருக்கலாம்,..அதுக்குள்ள ராக்கெட் வெடுச்சிருச்சே,,.பாவம்,,.


ம்ம்..வெடுச்சதனால தானே அது உங்க புக்ல வந்துச்சு,,,அது வெடிக்கலனா இன்னமும் நீல் ஆம்ஸ்ட்டராங்க பத்திதான் நீங்க படிச்சுட்டு இருப்பிங்க,,,


இந்த நாட்டுல இருக்கும் போதே நிறைய பேருக்கு மரியாதையும் குடுக்கறதில்ல உதவியும் கிடைக்குறதில்ல,..அவங்க போன பின்னாடி தான் எல்லா மாலையும்,...




8



அண்ணா அந்த கடலை மிட்டாய்,,ஏய் பர்ஸ் காணோம் பேக்ல தான் வச்சிருந்தேன்,,வீட்டுலையே விட்டுட்டு வந்துட்டேன்,,,அண்ணா கடலை மிட்டாய் வேண்டாம். பர்ஸ் இல்ல...


ஏன்னா பர்ச பாக்கெட்டுல தேடாம பேக்ல தேடுற,..பாக்கெட் எதுக்கு இருக்கு,.


ஏன் ,.பொன்னுங்க எல்லாம் பர்ச கைல தானு வச்சிருக்காங்க. அம்மா கூட பணத்தை பேக்ல தான் வச்சிருக்காங்க...


டேய் அண்ணா லூசு,.எங்க பாவாடை சட்டையில பாக்கெட் வச்சா தெக்குறாங்க..,புரியாம பேசுற,...


அட ஆமா ல்ல...

சரி விடு,.


டேய் தம்பி இந்தா கடலை மிட்டாய்,,,நாளைக்கு குடு காசை,...கடல மிட்டாய் நல்லது டா,,அதனால தான் வச்சுக்கோ,..


அப்புறம் ஏன்னே அந்த லேஸ் பாக்கெட்லாம் விற்குறீங்க...என்னடா ...எல்லாரும் எதை வாங்குறாங்களோ அததான் டா தம்பி விற்க முடியும்,...





9



ச்சே,,,.


ஹஹா,,.சேறு இரைச்சுருச்சா அண்ணா...


ம்....ஆமாம்....கார் காரங்கனாலும் நடக்கறவங்களுக்கு மரியாதை குடுக்க வேண்டாமா..!


சரி ,,..விடுன்னா,.,.வீட்டுக்கு போனா கரை நல்லது னு சொல்லி அம்மா துவைச்சு குடுப்பாங்க....


ம்....ஒதப்பாங்க....

நான் போய் துவைத்துகிடுவேன்...


அட அண்ணா துவைக்க எல்லாம் கத்துகிட்டையா...!


அன்னிக்கு நான் அம்மா பேச்ச கேட்காம பாட்டி கூட சமைச்சனுல,..அப்ப அம்மா கோபமா நீயே இனிமேல் துவைச்சுக்க னு சொன்னாங்க....

நானும் சரி னு சொல்லிட்ட,...அப்பத்திலிருந்து நானே துவைச்சுக்குறேன்,..


க்ரேட் னா,..

அப்போ அந்த சோப்பு பவுடர் விளம்பரத்துக்கு நீயே நடிக்க போயிரு,,,


நான் நடிச்சு அந்த பவுடர் விற்காம போச்சுன்னா....விற்கிற மாதிரி தான் விளம்பரம் பன்னுவாங்க,...




10



டேய் அண்ணா நாளைக்கு என் பிறந்த நாளுக்கு என்ன கிப்டு குடுக்க போற...


ஓ...சர்ப்ரைஸ் குடுக்கலாம்னா...நீயே கேட்குற...


வர வர இது ஒரு பேசனா போச்சு கிப்ட கேட்டு வாங்குறது,,.வா...


நாளைக்கு குடுக்கறதுதா குடுக்குற ...கொஞ்சம் எனக்கு உபயோகமா...பிடிச்சதா குடு.....


சரி போ,..

சாரி,,.போயிட்டு வா...

..............


அண்ணா என்ன கிப்டு,...மிஸ் அந்த கிப்ட குடுங்களே,,


பிரிச்சு பாரு.,.


பேட் பால் க்ளவுஸ்....ச்ச...நான் கூட வேற ஏதாவதா னு நினைச்சேன்...


ஏன்டி உன் கிட்ட நல்ல பேட் பால் இருக்கா...


இல்ல,..


அப்புறம் எப்படி நீ கிரிக்கெட் ப்ளேயர் ஆகறது...


அது சரினா,,,நீ வீட்டுல இருந்த வரைக்கும் பரவால,,,.

அந்த பெரிய அண்ணாங்களும் சேர்த்துக்கறதில்ல,.

ஸ்கூல்ல கிரிக்கெட்டே இல்ல,.,


கவலை படாத டா என் தெய்வமே...கூடிய சீக்கிரம் உங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னு சேருவாங்க,..நீங்க வேணும்னா பாருங்க,..

அப்ப நீ உங்க அண்ணா கூட விளையாடு...

சரியாடா...


ஓகே மிஸ்...

டேங்க்ஸ்,,..





11



மிஸ் நேத்து நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டு இருந்தனா,..பாட்டி இருந்துட்டு அப்பா கிட்ட என்ன கேர்ல்ஸ் ஸ்கூல்ல சேர்த்திரலாம் னு சொல்லி பயப்படுத்தனாங்க,,.


அந்த மாதிரி சேத்திட்டா அண்ணனை பார்க்கறதும் கட் ஆகிடும்,,,


நீ ஏன் பயப்படுற,,...நீ தான் என் கிட்ட சொன்னியல்ல....பாவாடை சட்டைல பாக்கட் இல்லைனு...நீ என்னோடா பேன்டு சர்ட் போட்டுட்டு என் க்ளாஸ்ல என் கிட்ட வந்து உட்காந்துக்கோ,,,பயாலஜி க்ளாஸ்ல மிஸ் கிட்டையும் நீ கத்துக்கலாம்,,,


அது ஏன்,.நீ பாவாடை சட்டை போட்டுட்டு வந்து என் கூட உட்கார மாட்டியா...ஹஹா..


ஏன் நீ சிரிக்குற..


யாரும் சிரிக்க மாட்டாங்கனு சொல்லு,,நான் வந்து உட்காந்துக்குறேன்...எனக்கு பிரச்சனை இல்ல,,.


நேத்து அங்க பஸ் ஸ்டாப்ல நின்னிட்டு இருந்தப்ப ஒரு அக்கா அந்த சைடு போனாங்க,,,அத பார்த்து எல்லாரும் பொன்னுங்களும் தான் அது இது அலி னு கிண்டல் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க,,.அவங்கல நான் ஒன்னும் சொல்லல...ஏனா அவங்க எல்லாம் பயாலஜி குரூப் இல்ல...எங்களுக்கு சொல்லி தந்ததை இன்னும் வசந்தி மிஸ் அவங்களுக்கு சொல்லித் தரல..மிஸ் சொல்லித்தரலேனா நானும் அப்படி தான் பேசிருப்பேன்,,,


மிஸ் எல்லாருக்கும் பயாலஜி சொல்லி குடுங்க மிஸ்,..


பார்க்கலாம் டா...இங்க நான் போய் எல்லாருக்கும் பயாலஜி சொல்லித்தரேனு சொன்னால்,..எல்லாரும் இருக்கிற சிலபசே முடிக்க முடியல இதுல பயாலஜி வேறையா னு என் தான் டா கிண்டல் பன்னுவாங்க...


ஆனாலும் முயற்சி பன்றேன்....




12



மிஸ் மகளிர் தின வாழ்த்துக்கள்...

எஸ் மிஸ்...

நன்றி டா செல்லங்களா,,,.


மிஸ் நேத்து நீங்க ஒரு அன்கிள் கூட பைக்ல போனீங்கல்ல,..அவரு உங்க ஹஸ்பண்டு தானே...


நீங்க எல்லாம் தெய்வங்கடா உண்மையாவே,...கல்யாணம் ஆகாத மிஸ் கு கல்யாணமே பன்னி வச்சுட்டீங்களே டா...


ஏன்டா நீ உன் தங்கச்சிக்கு யாருடா...?


அண்ணன்...


நான் ஒரு அன்கிள் கூட நடந்து போனா மட்டும் ஏன்டா அது என் அண்ணனாவோ பிரண்டாவோ இருக்க கூடாது...


ஓ அப்ப அவரு உங்க பாய் பிரண்டா மிஸ்,,,


அடேய் இது யாருடா சொல்லி கொடுத்தா....நீ பார்த்த U படத்துல சொல்லி குடுத்தாங்களா,..

பிரண்ட்சுல என்னடா பாய் பிரண்டு கேர்ல் பிரண்டுனு,...பிரண்ட்ஸ் னா பிரண்ட்ஸ் தான்டா


அவரு உன்ன மாதிரியே பொறுப்பான ஒரு அண்ணன் இந்த தங்கச்சிக்கு,,..


சாரி மிஸ்...


நீங்க எதுக்குடா சாரி சொல்லனும்....

உங்கள மாதிரி தெய்வங்க கிட்ட சாரி சொல்ல வேண்டியது இந்த சமூகமும் அதுல ஒன்னா இருக்குற நானும் தான்.,,,



சரி வாங்க...


அண்ணா நேத்து ஒரு கனவு,,.என்னன்னா,..

நம்ம வீட்டுல பின்னாடி நான் பேட்டிங் பிடிச்சுகிட்டு இருக்கேன்,.,.அப்பாதான் பவுலிங்,..அம்மா விக்கெட் கீப்பர்,...நான் ஒரு கவர் ட்ரைவ் சாட் அடிக்கிறேன்...


அப்ப கனவுல நான் வரலியா...


நீ இருந்த..நீ எங்கெளுக்கெல்லாம் சமைச்சுகிட்டு இருந்த,...


ஆஹா ,...நீ நல்ல தங்கச்சி,.


சரி நேத்து நான் ஒரு zomato விளம்பரம் அனுப்பிருந்த பார்த்தியா,,...


இல்ல...நீ தான் சொன்னியே அதிகமா மொபைல் வேண்டாம் னு,...அது மட்டும் இல்ல

வாட்ஸ் ஆப் னால நிறைய பிரச்சனை கேர்ல்சுக்கு வருதாமே வேண்டாம்....


நீ ஏன் பயப்படுற சைபர்சேப் கேர்ல் (cybersafe girl) னு ஒன்னு நான் அனுப்புற அத படி....





13




ஹேய் மிஸ்

ஹேய் மிஸ்


ஹேய் டா....


அண்ணா நேத்து அந்த zomato ad பார்த்தேன்,..


என்னடா அது,,.


அதுவா மிஸ் அது நம்ம பிவி சிந்து இருக்காங்கல்ல,,,,அவங்க அப்பா விளம்பரம்...what if she cant cook னு போட்டு ஹேஸ்டேக் போட்டிருக்கும்.


நான் நேத்து அம்மா கிட்ட சாலினிக்கு வந்த அந்த அம்மா அப்பா கிரிக்கெட் விளையாடுற கனவ சொன்னேன்...அம்மா ஒன்னும் சொல்லல,...

அப்பறம் இந்த zomato விளம்பரத்தையும் காண்பிச்ச,,


அம்மா கடுப்பாவங்கனு நினைச்சேன்...


ஆனா அம்மா அப்படிலாம் நடந்தா சந்தோசம் தான் அப்புடினு சொன்னாங்க....


எதை டா சந்தோசம் னு சொன்னாங்க,,,?


அந்த zomato ad ,..அது...


அட அவங்க சந்தோசம் னு சொன்னது அத இல்ல...நீங்க நாலு பேரும் கிரிக்கெட் விளையாடறத,,,உனக்குதான் புரியல...அத தான் நான் சொன்னேன்,..உனக்கு A படம் பார்க்குற அளவுக்கு மெட்சியூரிட்டி வர கொஞ்ச நாளாகனும் னு,,,


ஆமாம் மிஸ் அப்பாகூட எவ்ளவோ மாறிட்டாரு....நேத்து என் கூட கிரிக்கெட் விளையாடுனாரு...


ஏன்டா செல்லங்களா.....உங்க அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்கனும்னு பெரியவங்க யாருமே முயற்சி பன்னலையா,,..


பன்னுனாங்க பஞ்சாயத்து,...

எச்சு தான் ஆச்சு...


நான் சரி நீ தப்பு னு தான் பேசுனாங்க...


நாங்க ரெண்டு பேரும் ஓரமா உட்காந்து பார்த்துட்டு இருந்தோம்,,,

எங்களை பத்தியெல்லாம் யாருமே யோசிக்கல மிஸ்,,.



அப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன்...என்க்கென்னமோ ரெண்டு பேருக்கும் சேரனும் அப்படிங்கற ஒரு எண்ணம் இருக்குனு தான் தோனுது...


அப்ப ஒன்னா அவங்க நேருல பேச தயங்கலாம்....இந்த போன் வாட்ஸ் ஆப் ல பேசிகிட்டா பிரச்சனை எச்சு தான் ஆகும்....

அதனால அம்மாக்கிட்டையும் அப்பாகிட்டையும் லெட்டர் எழுதுற ஐடியாவ எப்படியாவது சொல்லுங்க,..நீங்களே லெட்டர போஸ்ட் பன்னுங்க ...சரியா,,,


என்ன லெட்டர் மிஸ் லவ் லெட்டரா லீவ் லெட்டரா,,,,


டேய் மொக்கை போடாத டா சாமி....


ஓடுங்க வீட்டுக்கு...




14



மிஸ் நாங்க இன்னிக்கு லெட்டர் போஸ்ட் பன்ன போறோம்,....

சூப்பர்,,,ஓடுங்க போஸ்ட் ஆபீஸ் சாத்திரும்,..


ஓகே மிஸ்,..


அண்ணா போஸ்ட் ஆபீஸ் எங்க இருக்குனு தெரியுமா...


நீ அங்க போனதில்லையா..?


இல்ல,,.


வா,..நானும் போனதுல்ல,...ஆனா பார்த்திருக்கேன்....


அண்ணா லெட்டர்ல என்ன எழுதிருக்கு னு படிக்கலாமா...


நோ ரெஸ்பெக்ட் ப்ரைவசி,,..

உனக்கு ஞாபகம் இருக்கா,..அம்மாவும் அப்பாவும் மாத்தி மாத்தி போனை செக் பன்னிகிட்டது,,.அப்புறம் ப்ரைவசி அது இது னு சண்டை போட்டது....


ஆமானா....


நீ இந்த லெட்டர பிரிச்சு படிச்சாலும் அந்த மாதிரி தான். நம்ம ரெண்டு பேரும் அவங்ககிட்ட பெர்மிசன் கேட்டு படிச்சுக்கலாம்,..


நம்ம கிட்ட இருக்கு அப்படிங்கறதுக்காக கேட்காம எதையும் பன்ன கூடாது....


சார் போஸ்ட் பன்னனும்,...எத்தனை ரூபா ஸ்டேம்ப் ஒட்டனும்,,.

இங்க குடுப்பா நான் பன்னிக்கிறேன்...


என்னடா பசங்களா பள்ளியில ஏதாவது போட்டியா என்ன...

அஞ்சல் அலுவலகங்கள் அழியாமல் காப்பது னு போட்டி நடத்துறாங்களா என்ன?


இல்ல இல்ல சார்,.

இது வேற ஒரு காரணம்...


ஓகேடா செல்லங்களா உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்....


நன்றி சார்!!!





14



மிஸ் இந்தாங்க ஸ்வீட் எடுத்துகோங்க...

உங்க கடுதாசி ப்ளேன் வொர்க்கவுட் ஆயிருச்சு,..


ஓ டேங்க் காட்,..,அப்போ சாலினி இனிமேல் ஒரே கிரிக்கெட் தானா,...


அவங்க நேர்ல பேசி போன்ல பேசி எச்சுதான் ஆச்சு மிஸ்,..


ஆனா அந்த லெட்டர்ல என்ன எழுதனாங்கனு தெரியல வொர்க் ஆயிருச்சு


அண்ணா.... நான் தான் அன்னிக்கே சொன்னேன் ல அத படிச்சிறலாம் னு,..


தங்கச்சி திரும்பவும் சொல்றேன் ரெஸ்பெக்ட் ப்ரைவசி,,.


ஆமாம் நீ அந்த சைபர்சேப் கேர்ல் படிச்சியா,,.அதுல கூட ப்ரைவசி பத்தி இருக்குமே,,..


ஆமாம் படிச்சேன்...


மிஸ் எனக்கு ஒரு சந்தேகம்,..


cybersafe girl ல படிச்சா மட்டும் பொன்னுங்களுக்கு சேப்டி கிடைச்சிருமா மிஸ்,..


தற்காலிகமா...


அப்ப நிரந்தரமா கிடைக்கனும்னா,..


அதுக்கு உன்ன மாதிரி சிந்திக்குற வாண்டுங்க எல்லாரும் வயசுக்கு வரனும்டா சிவா,...


அப்ப அண்ணா நீ இன்னும் வயசுக்கு வரலியா,,..மீசையே இல்ல,..


மிஸ் பாருங்க மிஸ் என்ன சொல்லுறானு,..


டேய் மீசை முளைக்கிறது மட்டுமே வயசுக்கு வரதில்ல டா....


ஏன் மிஸ் நீங்க பொன்னுங்க வயசுக்கு வரத பத்தியெல்லாம் சொன்னீங்க...பசங்க வயசுக்கு வரத பத்தி சொல்லியே குடுக்கல,..


ம்,....நேத்து பூவரசம் பீப்பி னு ஒரு படம் பார்த்தேன்.,..அதுல ஒரு டயலாக் கேட்கும் போதே நான் நினைச்சேன்டா...இத பத்தி நான் சொல்லியே தரல னு,,..


கண்டிப்பா சொல்றேன்டா,...ஆனா உனக்கு புரியற மாதிரி அத சொல்றதுக்கு நான் என்னை தயார் படுத்திகனும் டா,...அப்புறம் சொல்றேன்,..


இந்த நாட்டுல ரெண்டு விசயத்தை மட்டும் எல்லாருக்கும் நல்லா சொல்லி தரனும்,.

ஒன்னு அரசியல்....இன்னொன்னு ...


மிஸ் நான் சொலிறேன்,..

பயாலஜி,...


கரக்ட்...இந்த ரெண்ட மட்டும் கரெக்டா சொல்லி குடுத்துட்டா நம்ம நாட்டுல இருக்குற பாதி ப்ராப்ளம் சரி ஆயிரும்னு நினைக்கிறேன்,,..


ஆசை தோசை அப்பள வட ,..

வழியில் இரண்டு குழந்தைகளின் விளையாட்டு சப்தம்,..


சிரிப்பை விழுங்கிக் கொண்டே நடந்து போனார் அந்த வசந்தி மிஸ்....





Rate this content
Log in

Similar tamil story from Drama