Vadamalaisamy Lokanathan

Drama

5  

Vadamalaisamy Lokanathan

Drama

காதல் சொல்ல, வந்த தொல்லை

காதல் சொல்ல, வந்த தொல்லை

2 mins
541



காதலிப்பது குற்றமா,இல்லை என்றால் போலி காரணங்கள் சொல்லி பிரிப்பது ஏன்.

மஞ்சு கல்லூரியில் படித்து வந்தாள்.அவளுடைய கிராமத்தில் இருந்து சோமு என்ற பையனும் படித்து வந்தான்.பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவனும் அவளும் ஒரே வகுப்பில் அமர்ந்து படித்து,இப்போது பக்கத்து நகரத்தில் உள்ள அரசினர் கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.அவனுடைய அப்பா தான் இவர்கள் படித்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர்.சோமுவை தலைமை ஆசிரியர் பையன் என்பது மட்டும் தான் அவளுக்கு தெரியும்.

மஞ்சுவின் அப்பா சிறிதளவு விவசாயம் செய்து கொண்டு இரண்டு மாடுகள் வைத்து பால் கறந்து அதில் கிடைத்த வருமானத்தில் மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.பொருளாதார ரீதியில் பார்த்தால் சோமு வின் அப்பா மஞ்சு குடும்பத்தை விட வசதி ஆனவர் தான்.சோமுவின் அப்பா சொல்லி தான் மஞ்சுவை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.பட்டம் படித்த பிறகு இருவரையும் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு படிக்க சொன்னார் சோமுவின் இருவரும் கிராமத்தில் இருந்து பக்கத்து நகரம் சென்று பயிற்சியை மேற்கொண்டனர்.சில நேரங்களில் இருட்டி விட்டால் மஞ்சுவை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டு போவான்.

இது மஞ்சுவின் தாய் மாமாவிற்கு பிடிக்க வில்லை.போயும் போயும் அவனுடனா சே வெட்கம் ஆக இருக்கிறது என்று அடிக்கடி சொல்லுவான்.அவனுக்கு கிடைத்த காசில் குடித்து விட்டு நண்பர்களுடன் சீட்டாடுவது வாடிக்கை.அவன் தன் சகோதரி இடம் அவளை படிக்க வைக்க வேண்டாம்,எதிர்காலத்தில் சொல் படி நடக்க மாட்டாள் என்று கூறி வந்தான்.அதுவும் அல்லாமல் இவனுக்கும் மஞ்சுவிர்க்கும் பால்ய வயதில் மஞ்சுவின் அம்மா வழி தாத்தா பாட்டி திருமணம் செய்து வைத்து இருந்தனர்.மஞ்சு சின்ன வயதில் தாத்தா பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு சென்ற போது மஞ்சுவின் தாயாருக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சி அது.அதை சுட்டி காட்டி மஞ்சுவை திருமணம் செய்ய எனக்கு தான் உரிமை என்று சொல்லி கொண்டு,அதற்கான ஒரு புகை படத்தை அத்தாட்சியாக காட்டி மிரட்டி வந்தான்.


சோமுவும் மஞ்சுவும் இப்போது வேறு வேறு மாநிலத்தில் உதவி ஆட்சியர் ஆக பணி புரிந்து வருகிறார்கள்.

இருவரும் நாட்டுக்காக சேவை செய்ய விரும்பினார்கள். வாழ்க்கையிலும் இணைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி திருமணம் செய்து கொள்ள அவரவர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்டனர்.மஞ்சுவின் பெற்றோர் அனுமதி கொடுத்தனர்.சோமுவின் அப்பா தான் மஞ்சு இந்த உயர்ந்த பதவிக்கு காரணமாக இருந்தார்.

அவர் பையன் ஆசை படும் போது அதை மறுக்க கூடாது என்று சம்மதம் சொன்னார்.ஆனால் சோமுவின் அப்பா இந்த திருமணத்திற்கு தயக்கம் காட்டினார்.

காரணம் மஞ்சுவின் தாய் மாமா அடிக்கடிவீட்டுக்கு வந்து அவரை மிரட்டி வந்தார்.

சோமுவின் அப்பா போலீசில் புகார் அளிப்பேன் என்று சொல்லியும் தாய் மாமன் கேட்பதாக இல்லை.அவன் அந்த பால்ய வயது திருமண புகை படத்தை காட்டி தகராறு செய்து வந்தான்.அவன் ஒரு முரடன்.அவனை திருத்த முடியாது.இன்றைக்கு ஆசைப்பட்டு இருவர் திருமணம் செய்து கொண்டால் எதிர் காலத்தில் இந்த முரடனின் தொல்லை தாங்க முடியாது.உள்ளூரில் தொல்லை கொடுப்பது அல்லாமல் இருவரும் வசிக்கும் வெளியூரில் சென்று தொல்லை கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் இந்த முரடன் கூட சண்டை போட்டு கொண்டு இருக்க முடியாது.அதுவும் அல்லாமல் சட்டபடி வழக்கு தொடர்ந்தால் அது முடியும் வரை தேவை இல்லாத பிரச்சினைகள் சந்திக்க வேண்டி வரும்

அதனால் மஞ்சு என் மகனுக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்.ஒரு நல்ல பெண்ணை இழப்பது வருத்தம் தான்.ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறி விட்டார்.

இந்த காரணத்தால் மஞ்சுவின் காதல் நிறைவேறாமல் போனது அவளுக்கு வருத்தம் தான்.மூட நம்பிக்கை வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை மஞ்சு அன்று தான் புரிந்து கொண்டாள்.


Rate this content
Log in

Similar tamil story from Drama