குரும்பா
குரும்பா
அந்த சின்ன கிராமத்தில் வசிக்கும்
சடையன்,அவன் மனைவி கருப்பாயி. இவர்களுக்கு இரண்டு பெண்கள்,பருவம் எய்திய இரண்டு பேரும்,மூத்தவள் பத்தாவது,இளையவள் ஒன்பதாவது
படித்து வருகிறார்கள்.
இவர்கள் வீட்டில் செல்ல பிராணி
செம்பட்டை நிறத்தில் குரும்பா என்று செல்லமாக அழைக்கப்படும்
நான்கு வயது நாய்.
இவர்கள் இருவரும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது,வீட்டில் இருந்து கூடவே பிரதான சாலை வரை சென்று வழி அனுப்பி விட்டு
வீடு திரும்பும்.
மற்ற நேரங்களில் கருப்பாயி விவசாய நிலத்தில் வேலை செய்ய போகும் போது துணைக்கு செல்லும்.
மதியத்திற்கு பிறகு சரியாக நான்கு மணிக்கு பிராதன சாலைக்கு சென்று அக்கா தங்கை வருவதை வரவேற்க காத்து இருக்கும்.
ஒரு நாள் அக்க தங்கை இருவரும் கிளம்பி சென்று கொண்டு இருக்கும் போது அவர்களின் சைக்கிளை தொடர்ந்து ஒரு மொபெட் சென்று கொண்டு இருந்தது.அதில் வந்த இரு மாணவர்கள்,இந்த பெண்களை கிண்டல் செய்து கொண்டே வந்தனர்.
அவர்கள் இருவரும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள்.இரு பெண்களும் நின்று எச்சரித்த பிறகும் அவர்களுடைய சேட்டை தொடர்ந்தது.
எல்லை மீறுவதை உணர்ந்த அக்கா தங்கை குரும்பா என்று சத்தம் போட
தூரத்தில் இவர்களை பின் தொடர்ந்து வந்த குரும்பா ஓடி பெண்களின் அருகில் வந்தது.மீண்டும் அந்த பையன்கள்
கலாட்டா செய்ய,பெண்களில் ஒருத்தி நாய்க்கு சாடை காட்ட,அது குரைத்து கொண்டு அவர்களை துரத்த தொடங்கியது.
மோபெடில் வந்த இருவரும் வண்டியை வேகமாக ஒட்டி பிரதான சாலையை கடக்கும் போது வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக மோத இருந்த ஒரு நொடியில் அந்த மாணவர்கள் தப்பிக்க,பின்னாடி துரத்தி வந்த
குரும்பா,நிற்க முடியாமல் தடுமாற
ஆட்டோவின் பின் சக்கரம்
குரு ம்பாவின் பின் கால்கள் மீது ஒரு சக்கரம் ஏறி இறங்க,ஒரு கால் மிகவும் நசுங்கி இரத்தம் ஏராளமாக வெளியேறியது.பெண்கள் இருவரும் சைக்கிளை விட்டு இறங்கி ஓடி வாரி அணைத்து கொண்டார்கள்.அதே ஆட்டோவில் பக்கத்து கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கட்டு போட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர்.ஆறு மாதத்திற்கு பிறகு அந்த ஒரு கால் ஊனத்துடன்,அக்கா தங்கை க்கு காவல் காத்து சென்று கொண்டு தான் இருக்கிறது.கால் ஊனம் ஆனாலும் அதன் கடமையில் இருந்து தவறவில்லை.
முற்றும்.
