முயல் பண்ணை
முயல் பண்ணை
அந்த கிராமத்தில் முயல் முருகன் என்று சொன்னால் சின்ன பிள்ளையும் அவன் வீட்டை காட்டும்.
முருகன் பெரிய அளவில் முயல் பண்ணை வைத்து முயல் வளர்த்து அதை கறி வெட்டி விற்பவர் களுக்கு விலைக்கு கொடுத்து நல்ல லாபம் பார்த்து கொண்டு இருந்தான்.
அவனுக்கு மூன்று வயதில் ஒரு மகன் சரவணன்.
அவன் எப்போதும் அங்குள்ள முயகுட்டிகளுடன் விளையாடி கொண்டு இருப்பது வழக்கம்.
அப்படி விளையாடும் போது தூய வெண்மை நிறத்தில் உள்ள குட்டியை வைத்து விளையாடுவது வழக்கம்.
ஞாயிறு கிழமை நிறைய பேர் வந்து குட்டிகளை வாங்கி செல்வார்கள்.அப்படி கொடுக்கும் போது
சரவணனின் செல்ல முயல்குட்டியும் விற்பனையில் சேர்ந்து போய் விட்டது.சரவணன் விளையாட அதை தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.அவனுக்கு அழுகை வந்து அதை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே இருந்தான்.முருகனும் பல குட்டிகளை கொண்டு வந்து கொடுத்தும் அவன் அழுகை நிற்கவில்லை.
அவனுக்கு லேசாக ஜுரம் வர தொடங்கியது.
முருகன் எவ்வளவு சொல்லியும் சரவணன் அழுகை நிற்கவில்லை.முருகன் அன்று வாங்கி சென்ற அத்தை பேர் வீட்டுக்கும் சென்று பார்க்க,எங்கும் அந்த குட்டி இல்லை.அது இந்நேரம் கறியாக சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள்.
முருகன் சரவணனை மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு ஜுரம் அதிகம் ஆகி விட்டது.
அவனுடைய மனைவி முருகனை கண்டமேனிக்கு திட்ட,உனக்கு வேறு வியாபாரம் கிடைக்கவில்லையா.இப்போது பார் என் மகனின் உயிருக்கே ஆபத்து.இனியாவது குட்டிகளை வளர்த்தி விற்பதை நிறுத்தி விட்டு வேறு வேலை
பார் என்று திட்ட,அப்போது தான் முருகனுக்கு
உரைத்தது.
சரவணன் ஜுரம் குணமாகி வீடு வந்ததும்,மகனிடம்
உனக்கு பிடித்த குட்டிகளை வைத்து கொள்,மற்ற குட்டிகளை கூட்டில் அடைக்காமல் திறந்து விடுகிறேன் என்று சொல்ல சரவணனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
