விவசாயம்
விவசாயம்
அது ஒரு மலை அடிவாரம்.அங்குள்ள கிராம மக்களுக்கு,வாழ்வாதாரம் அந்த மலையில் உள்ள காடுகள்.இருக்கும் ஒன்றிரண்டு ஆடு மாடுகளை காட்டுக்குள் கொண்டு சென்று மேயவிட்டு, பசியாறிய பிறகு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.கூடவே விறகும் பொறுக்கி வந்து விற்றால் தான் சாப்பாட்டுக்கு அரிசி வாங்க முடியும்.
அடிவாரத்தில் பரந்து கிடக்கும் பூமி, புல் முளைத்து
வறண்டு கிடக்கும்.கைக்கெட்டும் தூரத்தில் ஒரு அருவி ஓடிக்கொண்டு இருக்கிறது.காட்டுக்குள் மேயும் மாடுகள் இந்த அருவியில் வந்து தண்ணீர் அருந்துவது வழக்கம்.
பழனி இரண்டு மாடு மூன்று ஆடுகளை மேய்த்து பால் கறந்து,அங்கு பால் சேகரிக்க வரும்,பால்காரர் கொடுக்கும் சகாய விலைக்கு விற்று,வாங்கிய பணத்தில் குடும்பத்தை கவனித்து இரு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து கொண்டு இருக்கிறான்.
பார்பதற்கு வறண்ட பூமியாக இருந்தாலும்,செழிப்பான பூமி.வீட்டு தேவைக்கு ஒரு வாழை நட்டால்,அதில் கிடைக்கும் பலன் கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கும்.
பழம் இலை, காய்,பழம்,தண்டு என்று எந்த பொருளும் வீணாகாமல் காசு அல்லிதருமரம் வாழை.
ஆனால் விவசாயம் செய்ய அங்கு உதவ யாரும் இல்லை.அப்படி யாராவது வேலைக்கு வந்தாலும் கூலி கொடுக்க பணம் இல்லை.பழனிக்கு கொஞ்சமாவது விவசாயம் செய்து அறுவடை செய்து பக்கத்து டவுனில் விற்று காசு சம்பாதிக்க வேண்டும் என்று ஆவல் உள்ளவன்.
பழனியின் மகன் படிக்கும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை விவசாய துறையில் ஒரு அதிகாரி என்று தெரிந்து அவரை சந்திக்க போனான்.
அவரும் சில விதைகளையும்,கொடுத்து விதைக்க சொன்னார்.செடி முளைத்த ஒரு வாரத்தில் தகவல் சொன்னால் வந்து பார்ப்பதாக கூறினார்.
பழனி வீட்டை சுற்றி இருந்த இடத்தை சுத்தம்
செய்து விதைகளை நட,அது முளைத்து செடியாகி பூ பூக்கும் பருவத்திற்கு வந்தது.அந்த அருவியில் இருந்து குடத்தில் தண்ணீர் சுமந்து வந்து செடிகளுக்கு ஊற்ற,செடிகளும் நன்கு வளர்ந்தது.
பெரிதாக நோய் பாதிப்பு எதுவும் வரவில்லை.
ஆடும் மாடும் போட்ட சாணம் இயற்க்கை உரம் ஆகியது.காற்று வீசும் போது.காட்டில் இருந்து பறந்து வந்த் இலைகள் நல்ல உரம் ஆனது.
செடிகள் எதிர்பார்ப்புக்கு மேலே வளர்ந்து பலன் கொடுத்தது.அதை அறுவடை செய்து,அதிகாரியின் வழிகாட்டுதல் படி பக்கத்து நகரத்தில் விற்க நல்ல லாபம் கிடைத்தது.
பழனியின் மகனும் கல்லூரி வரை படித்து விட்டு
தந்தையுடன் சேர்ந்து இன்னும் பெரிய அளவில் விவசாயம் செய்ய தொடங்கி நல்ல வருமானமும் எடுக்க தொடங்கி விட்டான்.தங்கையை நல்ல இடத்திற்கு திருமணம் செய்து கொடுக்க முடிந்தது.
இன்றைக்கும் அவன் நன்றி சொல்வது அந்த மலைக்கும் மலை அடிவாரதிர்க்கும் தான்.
முற்றும்
