கூட்டு குடும்பம்
கூட்டு குடும்பம்
பரதன் அந்த குடும்பத்தின் மூத்த மகன்.அவனுக்கு ஒரு தங்கை சித்ரா ஒரு தம்பி சசிகுமார்
இவர்களுடன் பரதனின் அம்மா பார்வதி.
அப்பா தம்பி பிறந்ததும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அந்த திருமணம் சட்டப்படி செல்லாது தான்.ஆனால் இப்போது பரதன் குடும்பத்தை விட்டு போய் விட்டார் என்பது தான் உண்மை.
அப்புறம் தான் தெரிந்தது,அம்மாவை திருமணம் செய்யும் முன்பே அப்பாவுக்கு அந்த பெண்ணுடன் பழக்கம் என்று.சொல்ல போனால் அந்த அம்மா முதல் தாரம்,பரதனின் அம்மா இரண்டாம் தாரம்.முதல் தாரத்திற்கு பரதனை விட இரண்டு வயது மூத்த ஒரு பையன்,அதாவது பரதனுக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான்.முதல் தாரத்தின் பெயர்முத்துலட்சுமி, முத்து என்று கூப்பிடுவார்கள்.
அண்ணன் என்று சொல்லப்படும் அவனுக்கு பெயர் ராஜன்.அப்பாவின் பெயர் கிருஷ்ணன்.அவருக்கு ஏற்ற பெயர் தான்.
கிருஷ்ணன் ஒரு உயர்ந்த பதவியில்,
அரசாங்கத்தில் வேலை செய்து வந்தார்.நல்ல சம்பளம் நல்ல வருமானம்.தன்னுடன் வேலை பார்த்த பெண்,முத்து லட்சுமி,கணவனை இழந்தவள்.திருமணம் ஆகி ஒரே மாதத்தில் விபத்தில் இறந்து விட்டார்.கிருஷ்ணன் முத்துலட்சமிக்குஆறுதல் கூற போனவர்.அதுவே
பிற்காலத்தில் பழக்கம் காதலாக மாறி,தாலி கட்டாத கணவனாக வாழ்ந்து வந்தார்.
முத்துலட்சுமி கிருஷ்ணனும் சேர்ந்து வாழ்ந்த போது பிறந்த பையன் தான் ராஜன்.
கிருஷ்ணன் வீட்டில் பெண் பார்க்க தொடங்கிய போது,அவரால் தன்னுடைய காதலை வீட்டிற்கு சொல்ல முடியாத நிலைமை.
கிருஷ்ணனின் அப்பா நோய்வாய் பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார்.மகனுக்கு திருமணம் செய்து பார்க்க விரும்பினார்.
தன்னுடைய தங்கை பெண் பார்வதியை மணம் முடித்து வைக்கவிரும்பினார்.கிருஷ்ணன்
,ஏற்கனவே தனக்கு ஒரு குடும்பம் இருப்பதை சொல்ல முடியவில்லை.
தன்னுடைய இக்கட்டான நிலையை
முத்துவிடம் சொல்ல, அவளும்,சற்றும் தயங்காமல் செய்து கொள்ளுங்கள் ஆனால் என்னை கை விட்டு விட கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டாள்.
அப்படி அவருக்கு இரண்டு மனைவிகள்.இரு குடும்பத்தையும் பொறுப்புடன் பார்த்துக்
கொண்டார்.பெரும்பாலும் பார்வதியுடன் தான் தங்கி இருந்தார்.
முத்துவும் அவரை பார்வதி வீட்டில் இருக்க சொல்லி வற்புறுத்தி இருந்தாள்.
இவருக்கு அடிக்கடி வெளியூரில் வேலை இருந்ததால்,இரண்டு வீட்டிற்கும் சென்று நேரம் செலவழிக்க அவரால் முடிந்தது.
ஆனாலும் குழந்தைகள் பெரிதாகி கொண்டு இருக்கும் போது தான் இப்படி இருப்பது அவரது மனசாட்சியை உறுத்தியது.இதை எப்படி யாரிடம் சொல்வது.
முதல் மனைவி முத்துவை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் இல்லை.இவர் பணம் செலவழிக்க மறந்தாலும், முத்துவிடம் நிறையசொத்து இருந்தது.அது முதல் கணவன் விபத்தில் இறந்து போது காப்பீடு மூலம் வந்தது.
அதனால் பணத்திற்காக எப்போதும் கிருஷ்ணனை எதிர்பார்க்க மாட்டாள்.
ஒரு கட்டத்தில் முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டி முத்து கூடவே இருக்க வேண்டியது ஆயிற்று.
முத்துவும் அதிக நாள் உயிருடன் இருக்கவில்லை.
நோய் தெரிந்து ஆறு மாதத்தில் இறந்து போனாள்.
அப்போதாவது திரும்ப வந்து பார்வதி கூட இணைந்து இருக்கலாம்.மூத்த மகன் ராஜனை
தனியாக விட்டு விட்டு வர மனம் ஒப்பவில்லை.
அவனும் வக்கீலுக்கு படித்து முடித்து விட்டு உயர் நீதி மன்றத்தில் வக்கீலாக தொழில் செய்து வந்தான்.அவனுக்கு திருமணம் செய்து முடித்து விட்டு மீண்டும் பார்வதியிடம் வந்து இருக்கலாம் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் தன்னுடைய முதல் மனைவியை பற்றி பார்வதி மற்றும் குழந்தைகள் அரைகுறையாக அறிந்து இருந்தாலும்,வெளிப்படையாக பேசி ராஜனையும் பார்வதி குடும்பத்துடன் இணைத்து கொள்ள விரும்பினார்.
தனக்கு பிறகு எல்லோரும் ஒற்றுமையா இருக்க வேண்டும்.எல்லோரும் சேர்ந்து பார்வதியை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தார்.
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்து இருந்தார்.ராஜன் திருமணத்தை பார்வதி அம்மா ஸ்தானத்தில் இருந்து முடித்து தர வேண்டும் என்று நினைத்து இருந்தார்.
அதற்காக ஒரு நாளை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்.
மகள் சித்ராவுக்கு பிறந்த நாள் வந்தது.அந்த நாளில் மீண்டும் பார்வதி வீட்டுக்கு போகலாம் என்று முடிவு செய்து இருந்தார்.
மகன் ராஜனிடம் சொல்ல, "எதுக்கப்பா,தேவை இல்லாத பிரச்சனை,உங்களையே ஏற்று கொள்வார்களா என்று தெரியவில்லை.நடுவில்
நான் எதற்கு" என்று கேட்டான்.
அதற்கு அவர்" நீ இருப்பது அவங்களுக்கு தெரியும்
இருந்தாலும்,முறைப்படி உன்னை அறிமுக படுத்தி வைக்க விரும்புகிறேன்.ஏற்று கொள்வது அவங்க பிரியம்"என்று சொன்னார்.
ராஜன்"சரிங்க அப்பா, எப்போ போகவேண்டும் என்று மட்டும் சொல்லுங்க"
கிருஷ்ணன் பிறந்தநாள் அன்று சென்றால்
பார்வதி. ஏதாவது இடக்கு முடக்காக பேசினால் சித்ராவின் பிறந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது.
என்று நினைத்து,அதற்கு முன்பு வரும் விடுமுறை நாளான,சனிக்கிழமை அங்கு செல்ல திட்டம் இட்டு இருந்தார்.அதற்கு முன்பு பார்வதிக்கு போன் செய்து தன்னுடைய வருகையை முன்கூட்டியே அறிவித்தார்.பார்வதியும் ஒன்றும் பதிலுக்கு பேசாமல்,சரி என்று மட்டும் சொல்லி வைத்தாள்.
மகன் ராஜனிடம்,சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு போக வேண்டும் தயாராக இருக்க சொன்னார்.ராஜனும் "சரிங்க அப்பா" என்று சொல்லி விட்டான்.
சனிக்கிழமை காலையில் இருந்தே பார்வதிக்கு படபடப்பாக இருந்தது.இவர் எதுக்கு வர வேண்டும்.
பரதன் கோபப் படுவான்.அப்பாவை எல்லோர் முன்னிலையிலும் மரியாதை குறைவாக பேசுவான்.யாருக்கு பரிந்து பேசுவது,கணவனுக்கா
இல்லை மகனுக்கா.முன்னமே சொன்னால் பரதன் தங்கை தம்பியை அழைத்து கொண்டு வெளியில் சென்று விடுவான்.அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள்.
தொடரும்....
