குழந்தைகள்
குழந்தைகள்


குழந்தைகள்.
ராமு தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் பிறக்கவில்லை.அந்த கிராமத்தில் ராமுவின் மனைவியை அதை சொல்லி கேலி பேசி கொண்டு இருந்தார்கள்.
ராமுவுக்கு அது மிகவும் கவலையை அளிக்க,அவர்கள் இருவரும் பக்கத்தில் உள்ள நகரத்திற்கு குடி பெயர்ந்தனர்.
அங்கு சென்று ஒரு வீடு வாடகைக்கு எடுத்து,தங்கி கொண்டு இருவரும் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார்கள்.
அந்த மருத்துவ மனை செயற்கை முறையில் கரு தரிக்க வைக்கும் பணியை செய்து கொண்டு இருந்தது.
ராமுவின் மனைவி ராணிக்கு தானும் அப்படி செய்து கொள்ள முடியுமா என்று மருத்துவ மனையில் கேட்க,அதற்கு லட்சங்களில் செலவாகும் உன்னால் அதை கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள்.
உண்மையாகவே அவளுக்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது.இருந்தாலும் அதற்கு வேண்டிய பரிசோதனைகள் அந்த மருத்துவமனை இலவசமாக பார்த்து கொடுத்தது.
அவளால் செயற்கை முறையில் கரு தரிக்க முடியும் என்று உறுதி ஆயிற்று.
ஆனால் அதை செய்ய அவளிடம் பணம்இல்லை.ராமு ராணி இருவரும் தங்களுக்கு இவ்வளவு தான் அதிர்ஷ்டம் என்று எண்ணி கொண்டார்கள்.
இப்படி சில மாதங்கள் சென்றன.அப்போது அந்த ஊரில் இருந்த பணக்கார குடும்பம் வாடகை தாய் மூலம் பிள்ளை பெற்று கொள்ள முடிவு செய்து,அதற்கு வாடகை தாயை தேடினார்கள்.
இதை பற்றி நிர்வாகம் ராணியிடம் சொல்ல,அவளும், ராமுவிடம் சொல்லி அவனை சம்மதிக்க வைத்தாள்.
எப்படியாவது என் வயிற்றில் ஒரு குழந்தை கருவில் வந்தால் போதும் என்று ராணி கெஞ்ச,ராமு சம்மதம் சொன்னான்.
குறிப்பிட்ட நாளில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு,அவளுக்கு செயற்கை முறையில் கரு உருவாக்க பட்டது.
வாடகை தாயாக இருப்பதற்கு அவளுக்கு ஒரு பெரிய தொகை இழப்பீடாக கொடுக்கவும் அந்த பணக்கார குட
ும்பம் சம்மதித்து இருந்தது.
ஆனால் குழந்தை பிறந்தால் ராணிக்கு காண்பிக்க மாட்டோம் என்பதையும் விளக்கி சொல்லி இருந்தார்கள்.
அதற்கும் சம்மதம் சொல்லி தான் அவள் வாடகை தாய் ஆனாள்.
குறிப்பிட்ட காலம் முடிந்து இன்னும் இரண்டு நாளில் பிரசவம்.
அந்த நாளும் வர,ராணி இரட்டை குழந்தை பிரசவித்த கொடுத்தாள்.
அவளுக்கு நினைவு திரும்பி பார்க்கும் போது அவள் மட்டும் கட்டிலில் படுத்து இருந்தான்.ராமு கையில் பண கட்டுடன் அருகில் அமர்ந்து இருந்தான்.
கையில் சுமார் ஐந்து லட்சம்.இருவருக்கும் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
ராணி,இது போதும் எனக்கு,நான் இனி மலடி இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லி அழுது கொண்டு இருந்தாள்.
அப்போது ஒரு மருத்துவரும்,செவிலி இருவரும் உள்ளே வந்தார்கள்.செவிலி கையில் பிறந்த
குழந்தை.
அந்த பெண் மருத்துவர்,அவள் பக்கத்தில் வந்து,ராணி நீ இரண்டு குழந்தை பெற்று கொடுத்தாய்.அதில் ஒரு குழந்தை தான் இது.
ஒரு சின்ன பிரச்சினை,இந்த குழந்தைக்கு பார்வை இல்லை.அதனால் அந்த பணக்கார குடும்பம் இந்த குழந்தையை,நீ விருப்ப பட்டால் வைத்து கொள்ளலாம்,வேண்டாம் என்றால் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்து விடுவோம் என்று கூற,வேண்டாம் வேண்டாம் நானே வைத்து கொள்கிறேன் என்று தாவி அந்த குழந்தையை வாங்கி பால் கொடுக்க தொடங்கினாள்.
மருத்துவர் மேலும் சில வெள்ளை தாளில் அவர்கள் இருவரும் கையொப்பம் வாங்கி கொண்டு,அந்த குழந்தையை அவளிடம் ஒப்படைத்து விட்டு போனார்கள்.
ஒரு வாரம் கழித்து,ராமுவும் ராணியும்,வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு போகிறோம் என்று அந்த குழந்தை யுடன் கிராமம் நோக்கி சென்றார்கள்.
இனி நான் மலடி அல்ல
உறக்க கூறி கொண்டு….