அத்தியாயம் மூன்று.விலகி செல்வதும் காதலே
அத்தியாயம் மூன்று.விலகி செல்வதும் காதலே
அத்தியாயம் 3 விலகி செல்வதும் காதலே
துருவ் தன்னுடைய நீண்ட நாள் காதலித்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தினான்.
அந்த பெண் காதலை மறுக்கவே துருவ் வேதனை அடைந்து தன் காதல் மறுக்கபட்டதை பற்றி நிறைய பேரிடம் கூறினான்,துருவ் தனது பக்கம் இருந்து மட்டுமே யோசித்து தன் காதல் மறுக்கப்பட்டதை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் தேடி நிறைய பேரிடம் தனது காதல் பற்றி கூறினான்.
பின் 1 வருடம் கழித்து துருவ் அந்த பெண்ணிடம் பேசும் பொழுது தான் அவளை எந்த வகையிலும் வேதனை பட வைத்திருந்தால் மன்னிப்பு கேட்டான்.
அந்த பெண்ணிடம் நட்பாக பேச துருவ் முயல அந்த பெண் தனக்கு அவனுடன் பேசுவது சற்று கஷ்டமாக உள்ளது என கூற துருவ் அந்த பெண்ணை விட்டு விலக ஆரம்பித்து அந்த வலியையும் கடக்க ஆரம்பித்தான்.
துருவ் தனது இந்த வாழ்க்கையின் பகுதி எங்கு இருந்து ஆரம்பித்தது என யோசிக்கும் பொழுது 7 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் அவன் நினைவுக்கு வந்தன,
துருவ் காலையில் கண்விழித்து பார்க்கும் போது மணி எட்டு.இரவு முழுவதும் கனவு வந்து வந்து போய் கொண்டு இருந்தது. மதியம் ஆகும் போதே அவனுடைய நண்பர்கள் இன்று மாலை அங்கு போக வேண்டும்,இந்த ஹோட்டலில் சாப்பிட டேபிள் புக்
பண்ணி இருக்கேன்.என்னுடைய காதலியை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று இவனிடம் சொல்லி கடுப்பு ஏத்துவார்கள்.
அந்த காதலில் தான் என்ன இருக்கிறது.அதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே அதை உணர முடியும்.
துருவ் பெண்கள் பின்னால் அலையும் பையன் கிடையாது.காதலிப்பதில் ஒரு ஒழுக்கம் வேண்டும் என்று நினைப்பவன்.
ஒரு பெண்ணிடம் பேசும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற எண்ணம் உடையவன்.
இதனால் அவன் விரும்பிய பெண்ணை பார்த்து,ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் எப்படி பக்கத்தில் போய் பேசி விட முடியும்.
பல நண்பர்கள் காதல் காதல் என்று சுற்றும் போது,அது காம உணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்று நினைப்பான்.
அவன் அந்த பெண்ணை நீண்ட நாளாக விரும்பி வருகிறான்.அதை ஒரு நண்பனிடம் சொன்ன போது
டேய்,சீக்கிரம் உன் காதலை சொல்லி விடு,இல்லாவிட்டால்,ஒரு நல்ல நாளில் ஒருத்தன் கல்யாணம் செய்து கொண்டு போய் விடுவான்.
துருவ் நண்பன் சொன்னது உண்மையா இருக்குமோ,சொல்லாமல் இருந்தால் அவன் சொன்னது போல நடந்து விடுமா? என்று கவலை பட்டான்,நீண்ட நாள் ஒரு தலை பட்சமாக காதலித்தாலும், தன் காதலை சொல்லும் போது அவள் மனம் புண்பட கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.இருந்தாலும் நண்பன் சொன்னது போல,காலம் தாழ்த்த கூடாது,அடுத்த சந்தர்பத்தில் சொல்லி விட வேண்டும் என்று ஆவலாக இருந்தான்.
அவன் அவளை அன்று சந்தித்து, பொதுவான விசயங்கள் பேசி,கொண்டு,இரண்டு முறை i love you
என்று உதடு வரை வந்து விட்டது.மூன்றாம் முறை,அவள் பெயரை சொல்லி, ஐ என்று ஆரம்பித்தான்.உடனே அவள் என்னடா i love you சொல்ல வரையா என அந்த பெண் கேட்க துருவ் ஆமா என்றான்.
அந்த பெண் உடனே எனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இல்லை துருவல் நீ எப்படி என் கிட்ட அப்படி சொல்லலாம் என கேட்டு இருவரும் நீண்ட நேரம் பேச அது வாக்குவாதமாக மாறி இருவரும் இனி பேசிக் கொள்ள வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
அவனுக்கு இதை விட ஒரு அவமானம் தேவை இல்லை.நண்பன் உசுப்பேத்தி விட்டான்,அவசரப்பட்டு விட்டோம்.தேவையில்லாமல் அவளுக்கு டென்ஷன் எனக்கும் டென்ஷன்…சே,இனி எந்த பெண்ணிடம் இப்படி பல்பு வாங்க கூடாது.
இது நடந்து ஒரு வருடம் ஓடிவிட்டது.
அன்று அம்மா சில சாமான்களை அவசரமாக வாங்கி வர சொல்லி இருந்தார்,அந்த சூப்பர் மார்கெட்டில்
ஒவ்வொன்றாக தேடி கொண்டு இருக்கும் போது,எதிரில் கண்ட ஒரு
தேவதை,ஒரு வருடம் முன்பு தன் காதலை ஏற்க மறுத்த பெண் கண்முன் நின்று கொண்டு இருந்தாள்.
அவள் தன் காதலை மறுத்த போது,வருத்தம் தாளாமல்,பல பேரிடம் சொல்லி அழுது இருக்கிறான்.அந்த வருத்தம் அவன் நெஞ்சை விட்டு போகவில்லை.
அது அவன் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.
அவளை பார்த்ததும் அவளுடன் அன்று நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன் என்று சொல்ல,அவளும் இல்லை துருவ் நான் அது எல்லாம் கடந்து வந்துட்டேன் என கூறி நீ எப்படி இருக்க? என்றாள்.
துருவல் ஒருவித பதட்டம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்வில் “நாம திரும்ப பேசலாமா?” என கேட்டுவிட்டு அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான்.
இல்லை துருவ், நான் உன்னை கடந்து வாழ ஆரம்பிச்சிட்டேன்,இப்ப திரும்ப நம்ம இரண்டு பேர் பழகுனா அது சரியா வராது,நீ குற்ற உணர்ச்சினால இல்லைனா எல்லாத்தையும் நம்ம கடந்து வந்து புதுசா நம்ம உறவ ஆரம்பிக்கலாம் அப்படினு சொல்ற,ஆனால் அது சரியா வராது? நடந்த எல்லாத்தையும் நம்ம கடந்து வரலாம் ஆனால் மறக்க முடியாது, நீ என்னை கடந்து ஒரு புது வாழ்க்கையை வாழனும் அது தான் என் ஆசை,பார்த்துக்கோ,வரேன் என சொல்லிவிட்டு கிளம்பினாள்.
துருவ் தனது வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சாமானை தந்து விட்டு தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டு சத்தமாக மொபைலில் பாட்டை போட்டுவிட்டு கதறி அழ ஆரம்பித்தான்.
அழுது முடித்த பின் துருவ் ஒன்றை யோசித்தான் “நமக்கு பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதே நமது ஆசை, அவர்கள் நம்மளுடன் இருப்பது பிடிக்கவில்லை என்றால் நாம் அவர்களை விட்டு விலகி விட வேண்டும்,கஷ்டம் தான்,ஆனால் அவர்கள் மகிழ்ச்சி தான் நமது மகிழ்ச்சி இல்லையா,
விலகி செல்வதும் அன்பின் வெளிப்பாடே,
விலகி செல்வதும் காதலே.”
துருவ் அந்த பெண்ணை விட்டு விலகி தன் வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டான்.
