Vadamalaisamy Lokanathan

Abstract

5.0  

Vadamalaisamy Lokanathan

Abstract

ஒரு பஸ்ஸின் கதை

ஒரு பஸ்ஸின் கதை

3 mins
471



மரத்தடியில் இருந்த என்னை ஆட்களை பிடித்து தள்ளி வெட்டார வெளியில் நிறுத்தி விட்டார்கள்.


வேறு பஸ்களில் பராமரிப்பு வரும் போது,என்னிடம் இருந்து ஒவ்வொரு பாகமாக கழட்டி கொண்டு இருந்தார்கள்.

என்னுடைய பெயர் night queen.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பெயரை தாங்கி கொண்டு தான் நான் கோயமுத்தூர் to சென்னைக்கு ஓடி கொண்டு இருந்தேன்.அப்படி ஒன்றும் பெரிதாக வயது ஆகி விடவில்லை.புதிதாக எடுத்து வந்த என்னை ஐந்து வருடம் தான் பயன் படுத்தி இருப்பார்கள்.

அதற்குள் ஐம்பது வயது ஆன மாதிரி ஒரு தோற்றம்.

வந்த புதிதில்,முதலாளி தினமும் வந்து முன்னாடி நின்று முத்தம் கொடுத்து செல்வார்.அவர் செல்லமாக என்னை ஆல் ஃபைவ் என்று கூப்பிடுவார்.அதாவது என்னுடைய பதிவு எண்5555.

தினமும் பக்கத்தில் நின்று கிளீனரை துடைக்க சொல்வார்.

அழுக்கு இருந்தால் தண்ணீர் அடித்து கழுவ சொல்வார்.ஒரு பயணம் ஓடி வந்ததும்,ஆறு டயரையும் பரி சோதித்து,அழுக்கு இல்லாமல் கழுவி நிறுத்துவார்கள்.

வெள்ளிக்கிழமை ஆனால்,மாலை போட்டு விபூதி சந்தனம்,குங்குமம்

வைத்து, தேங்காய் உடைத்த பூஜை தவறாமல் நடக்கும்.

டிரைவர் ஏறும் போது செருப்பை கழட்டி தனியாக வைத்து விட்டு தான் ஏறுவார்.டிரைவர் வந்து ஊதுபத்தி ஏற்றி வைக்க கேபின் முழுவதும் நறுமணம் வீசும்.

உள்ளே மாட்டியுள்ளமுதலாளியின் தாத்தா படத்திற்கு, எப்போதும் வாடாத பிளாஸ்டிக் மாலை,

அதற்கு பக்கவாட்டில் உள்ள லட்சுமி படத்திற்கு முல்லை பூ மாலை.

மொத்தத்தில் நான் ஒரு கோவில் போல தோற்றம் அளிப்பேன்.

என்னிடம் இடம் பிடித்து பயணிக்க பயணிகள் கூட்டம் அலை மோதும்.என்னிடம் இல்லாத வசதிகள் விரல் விட்டு எண்ணி விடலாம்.இப்படி பெருமையாக நான்கு வருடம் ஓடி விட்டது.அதை வாங்க முதலாளி போட்ட பணத்தை விட இரு மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்து விட்டேன்.

ஐந்தாம் வருட தொடக்கத்தில், இருந்து எனக்கு சனி பிடிக்க தொடங்கியது.சென்னையில் இருந்து வரும் போது,தர்மபுரி தாண்டி வரும் போது, இரவு சுமார் ஒரு மணி இருக்கும்,நான்கு வருடம் உழைத்து ஓய்ந்து விட்டேன் என்று அறிந்தும் டிரைவர் என்னை சும்மா விடுவதாக இல்லை.வேகம் அதிகரிக்க,அவருடைய பாதத்தை தரையோடு உரசும் அளவிற்கு அழுத்தி கொண்டு இருந்தார்.

நானும் நானூறு மீட்டர் பந்தயத்தில் ஓடி ஜெயிக்கும் ஆர்வத்தில் டிரைவர் விருப்பத்திற்கு நானும் உயிரை கொடுத்து ஓடி கொண்டு இருந்தேன்.என் இதயம் போல இருந்த என்னுடைய என்ஜின் வெடிக்கும் அளவிற்கு அழுத்தத்தில் இயங்கி கொண்டு இருந்தது.

என்னுடைய முகப்பு விளக்குகள் பாய்ச்சிய வெளிச்சம் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பளிச்சென்று தெரிந்தது.அந்த நேரம் நான் நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடி கொண்டு இருந்தேன்.

என் தலை எழுத்து, பக்கவாட்டில் செடிகளுக்கு நடுவில் மறைந்து இருந்த ஒரு பசு மாடு ,நடு ரோட்டில் வந்து நிற்க,

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மாட்டின் மீது மோத,அந்த மாடு தொண்டை கிழிய வலியில் அலற,டிரைவர் என்னுடைய பிரேக்கை அப்படி அமுக்க,என் முதுகெலும்பு மீது கால் வைத்து மிதித்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு வேதனையை தாங்கி கொண்டு பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதி நின்றேன்.மாட்டின் மீது மோதிய வலி ஒரு பக்கம்.குட்டி சுவரில் மோதிய வலி வேறு.என்னால் அழ கூட முடியவில்லை.ஒரு வேளை நான் வலியில் கத்தியது,பயணிகள் போட்ட சத்தத்தில், கேட்கவில்லையா என்று தெரியவில்லை.

முன்பக்க சக்கரம் வளைந்து நெளிந்து நிற்க,என்னுடைய என்ஜின் பாதி அப்பளமாக நொறுங்கி இருக்க,என் விலா எலும்புகள் முறிந்து போன உணர்வு எனக்கு.என்னை ICU வில் சேர்த்தால் தான் நான் பிழைப்பேன்.

ஆனால் என்னுடைய வலியை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய டிரைவரை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு போனார்கள்.நானும் செய்வது அறியாது திகைத்து நின்றேன்.

அந்த வலியிலும் என்னை நம்பி பயணித்த பயணிகளுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.யாரும் என் உதவிக்கு வருவதாக தெரியவில்லை.நல்ல வேளை,யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை..


அன்றோடு என் வாழ்க்கை முடிந்து விட்டது,வேறு ஒரு வாகனம் மூலம் கட்டி இழுத்து வர பட்டேன்.நான் அடி பட்டது,பயணிகள் அடிபட்டது என்று முதலாளி காப்பீட்டு தொகையாக பெரும் பணத்தை வாங்கி கொண்டார்.செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல,என்னுடைய மரண படுக்கையில்,முதலாளி லாபம் பார்த்து கொண்டார்.

இது வரை நிழல் இருந்தது,இனி எப்போதும் வெய்யில் மண்டையை பிளக்கும்.யாரிடம் சொல்லி அழ முடியும்.

வெய்யிலில் நின்று கொண்டு மெதுவாக,பழைய நினைவுகளை யோசித்து பார்த்தேன்.

ஒரு நாள் சுமார் பத்து பேர் பயணித்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் தம்மில் பேசி கொண்டது காதில் விழுந்தது.அதாவது இந்த பஸ்ஸில் பயணித்த யோகம்,நம்ம பையனுக்கு பொண்ணு அமைந்து விட்டது என்று.இனி ஒரு நாள் அப்பா மகனிடம்,இந்த பஸ்ஸில் வந்த யோகம்,உனக்கு வேலை கிடைத்து விட்டது என்று.

நடுவில் ஒரு வாலிபன் அழுது கொண்டே இறக்கும் தறுவாயில் இருக்கும் தந்தையை காண புலம்பி கொண்டே போனான்,

ஆனால் அவர் அப்பா பிழைக்க வேண்டும் நானும் வேண்டி கொண்டேன்.

கணவனுடன் கோபித்து கொண்டு தாய் வீடு செல்லும் பெண்,தங்கள் திருமணம் நடக்காது என்று தெரிந்தும் காதலிக்கும் வேறு வேறு மதத்தை சேர்ந்த காதலனும் காதலியும்,வேலை தேடி மொழி தெரியாத ஊரில் இருந்து வந்த இளைஞர்கள், சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள்,தனக்கு பிடித்த சினிமா நடிகனின்,பிறந்த நாளை கொண்டாட சென்னை செல்லும் ரசிகர்கள்,யோகா கற்று கொண்டால்

மகிழ்ச்சியின் உச்ச கட்டம் என்று நினைத்து கோவை வரும் இளம் ஆண்,பெண்கள்,

உறவினர் வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க செல்லும் குழந்தைகள் இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.அத்தனை பேரும் என்னை விரும்பி என்னுடன் பயணித்தார்கள்,நான் இன்னும் அவர்களை தினமும் நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.என்னுடன் பயணித்த யாராவது என்னை தேடி வருவார்களா என்று காத்து இருக்கிறேன்.அப்படியே வந்தாலும் அவர்கள் முன்னால் வெட்கத்தால் கூனி குறுகி நிற்க வேண்டும் என்று வருத்தமாக இருக்கிறது.என்னுடைய உடலில் உள்ள உறுப்புகளை தானம் கொடுத்துகொண்டுஇருக்கிறேன்,

மற்றவர்கள் பிழைக்க. அரை நிர்வாணமாக நிற்கிறேன்.

ஒரே ஒரு மகிழ்ச்சி,இந்த நிலையிலும் என்னால் என்னுடைய உறுப்புகளை தானம் கொடுக்க முடிகிறது,கொடுத்து முடிந்து விட்டால் நான் எலும்பு கூடாக நிற்பேன்.அப்போது என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது.

முடிவுரை..

இந்த கதை மனிதனுக்கும் பொருந்துமா…



Rate this content
Log in

Similar tamil story from Abstract