STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Drama Tragedy Others

4  

Vadamalaisamy Lokanathan

Drama Tragedy Others

புயல் மழை

புயல் மழை

3 mins
8

நீலகிரியில் கடுங்குளிர்.தினமும் பெய்து வரும் மழையால், இயல்பானதை விட குளிர் அதிகமாக இருந்தது.

படுக்க போகும் முன்பு,தொலைகாட்சியில் வானிலை அறிக்கை கேட்டு விட்டு உறங்க சென்றாள் மாதவி.கணவன் ராணுவத்தில் வட இந்தியாவில் குளிரில் நடுங்கியபடி வேலை பார்க்கிறான் என்ற செய்தி மட்டுமே தான் அவளுக்கு தெரியும்.கணவன் 

ரகு பொதுவாக அவன் வேலை செய்யும் பிராந்தியத்தை மனைவி மாதவியிடம் சொல்வது இல்லை.அப்படி சொன்னால் உடனே கூகுள் தளத்தில் அந்த இடத்தை தேடி அவனிடம்  அங்கலாயிக்க தொடங்கி விடுவாள்.

தூங்க செல்லும் முன்பு கணவனிடம் பேசி விட்டு,வானிலை அறிக்கையும் பார்த்து விட்டு தான் பெரும்பாலான நாட்கள் தூங்க செல்வாள்.

அவளுக்கு ஆறு மாத கைக்குழந்தை,

கூடவே காவலுக்குஒ ரு நாய்.அது ஒன்றும் தனி ரகத்தை சேர்ந்தது அல்ல.சாதாரண நாட்களில். வாசலில்படுத்துக்

கொள்ளும் .இன்று மழையும் குளிரும் இருப்பதால்,ஹாலில் படுத்து கொள்ள,ஓர் கோணியை விரித்து படுக்கை தயார் செய்து கொடுத்து இருந்தாள் மாதவி.

அவளுடைய அம்மா தம்பி வீட்டிற்கு சென்று விட்டு, பலமான காற்றில் மரம் விழுந்து சாலை அடைக்க பட்டதால்,அவரால் இரவு வந்து சேர முடியவில்லை.

அப்ப்பவும் அம்மா அவளையும் தான் அழைத்து இருந்தார்கள்,தம்பி வீட்டில் இன்று இரவு தங்கி காலையில் வரலாம் என்று சொன்னதை மறுத்து விட்டாள்.

பதிவு செய்த எரி வாயு உருளை அன்று தான் வரும் என்று செய்தி வந்ததால்,அதை வாங்க வீட்டில் இருந்து விட்டாள்.அது திரும்பி போனால் மீண்டும் வர பத்து நாட்கள் ஆகி விடும். எரிந்து கொண்டு இருக்கும் உருளை தீரும் தருவாயில் இருந்தது.

நேரமே படுத்து விட்டாலும்,தூக்கம் வரவில்லை.சுமார் பத்து மணிக்கு குழந்தை பசிக்கு அழ அதற்கு பால் கொடுத்து தூங்க வைக்கும் போது இரவு பதினோரு மணி.

ஹாலில் இருந்த நாய் படுக்காமல் ,ஹாலை சுற்றி கொண்டே,ஜன்னலை பார்த்து ஓரிருமுறை குறைத்துக்கொண்டு இருந்தது.மணி பன்னிரெண்டு,காற்றின் வேகம் அதிகமாகி ஒரு வினோத சத்தமாக கேட்க தொடங்கியது.

காற்றின் வேகம் கூடிக்கொண்டே இருக்க,பலத்த மழையும் பெய்ய தொடங்கியது.

இதை கவனித்த அந்த நாய்,அதிக சத்தத்தில் குறைக்கவும்,மாதவி இருந்த அறைக்குள் வந்து,அவளை வாயில் கவ்வி இழுப்பதும் ஆக இருந்தது.ஒரு வேளை நாய்க்கு பாத்ரூம் போக வேண்டுமா என்று நினைத்து வாசல் கதவை திறக்க

மழையின் சாரல் வீட்டுக்குள் வந்தது.

வெளியில் வந்த நாய் வீட்டிற்கு உள்ளே வர மறுத்தது.அது மட்டுமல்ல,அவள் புடவையை பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தது.

அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று நினைத்து உள்ளே சென்று தேவையான பொருள்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு,டார்ச் வெளிச்சத்தில்,குழந்தையை தூக்கி கொண்டு,நாயின் துணையுடன்,பக்கத்தில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தை நோக்கி மழையில் நனைந்தபடி போய் சேர்ந்தாள்.

பள்ளிக்கூட வாசலை மிதித்து இருப்பாள்.அப்படி ஒரு இடி சத்தம்.

திரும்பி பார்க்கும் போது,மின்னல் வெளிச்சத்தில்,அவளுடைய வீட்டிற்கு மேலே இருந்த பெரிய பாறை உருண்டு கீழே வருவது தெரிந்தது.இடி சத்தம் இன்னும் பலமாக, தொடர்ந்து கேட்க,

அவள் கண் முன்னே அவள் வசித்த வீடு பூமிக்கடியில் புதைந்து போனது.

சுமார் நூறு அடி தூரத்தில் அவளுடைய வீடு காணாமல் போனது.அவளுடைய நாய் அவள் காலுக்கு அடியில் நின்று கொண்டு அந்த காட்சியை பார்த்து கொண்டு

இருந்தது.

வரும் விபரீதம் நாய்களுக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.தக்க சமயத்தில் அது தன்னை எச்சரித்து வெளியில் அழைத்து வந்து விட்டது என்றே அவள் கருதினாள்.

அரை மணி நேரத்திற்கு பிறகு அவளுடைய கணவன் கூப்பிட,

பத்திரமாக இருக்கிறாயா,நம் வீடு இருந்த பகுதி மண்சரிவில் தரை மட்டம் ஆகி விட்டது என்று இப்போது தான் செய்தி பார்த்தேன் என்று சொல்ல,அவளும் பத்திரமாக பள்ளிக்கூட கட்டிடத்தில் இருக்கிறேன்.நாய் தான் எனக்கு இடைவிடாது குரைத்து எச்சரிக்கை செய்தது.வீட்டிற்குள் போகவே விடவில்லை.நல்ல வேளை உயிர் பிழைத்தோம்.நம் வீடு மூழ்கி போனது, சேறும் சகதியுமாக அந்த இடம் காட்சி அளிக்கிறது.

நானும் குழந்தையும் நாயும் மட்டும் தான் இங்கு நிற்கிறோம்.மின்னல் வெளிச்சத்தில் பார்த்தால் நம்ம ஊரு இருந்த அடையாளம் இல்லவே இல்லை.என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Drama