பூனைக்குட்டி
பூனைக்குட்டி
செல்வா வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட பூனைகுட்டிகள் இருந்தாலும்,அதில்,கறுப்பி என்று அழைக்கபடும் பெண் பூனை மிகவும் முக்கியமான
ஒன்று.
அது கிட்டத்தட்ட அந்த வீட்டின் காவல்காரன் என்று சொல்லலாம்.புதிதாக யார் வந்தாலும் சரி,அது மனிதனாக இருந்தாலும்,மிருகமாக இருந்தாலும்
அவ்வளவு சீக்கிரம் உள்ளே நுழைய விடாது.
புதிதாக ஒரு மனிதன் வந்தால்,அவனை உள்ளே வர விடாமல் காலை சுற்றி சுற்றி வந்து ஒலி எழுப்பி,வீட்டு உரிமையாளரை எச்சரித்து விடும்.
அதே போல பழகி விட்டால் அதன் ஓசை வேறு விதமாக இருக்கும்.
மழைகாலம் தொடங்க,அந்த பூனைகுட்டுகளின் இருப்பிடம் ஒரு கேள்விக்குறி ஆகி விட்டது.முற்றம்,மொட்டைமாடி, படிக்கட்டு என்று தங்களுக்கு பிடித்த இடத்தில் உறங்கி ஓய்வு எடுத்து கொண்டு இருந்த பூனைக்குட்டிகள் விடாது மழை பெய்ய ,வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி பட்டன.செல்வா முடிந்த வரை அவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்தான்.
ஆனால் குழந்தைகள் இருந்த வீட்டில் சுகாதாரம்
பேண வேண்டிய கட்டாயம் வந்த போது,செல்வா அவைகளை அங்கு இருந்து விரட்ட வேண்டியது ஆயிற்று.அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
அங்கும் இங்கும் அடைக்கலம் தேடி அலைந்தன
அந்த குட்டிகள்.அன்று இரவு பெய்த கன மழை
வெள்ளம் பெருக்கெடுத்து ஓட,நீரின் வேகத்தை எதிர்த்து நிற்க முடியாமல் ஒவ்வொரு குட்டியாக அடித்து செல்ல,செல்வா தன் குழந்தைகளை பாதுகாத்து கொண்டு,பூனை குட்டிகளை கவனிக்க முடியாமல் போக,அத்தனை குட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஒரு துயரமான சம்பவம்.
மழை விட்டதும் செல்வா அவைகளை தேடி போக ஒன்றுமே கிடைக்காமல் போனது அவனை பெரும் துயரில் ஆழ்த்தியது.
என்ன வசதி இருந்தாலும் பருவநிலை மாறும் போது செல்ல பிராணிகளை பாதுகாப்பது ஒரு சவாலாக தான் உள்ளது.
