ஏரி
ஏரி
அந்த சிற்றூரில் வசிக்கும் மக்களுக்கு பக்கத்து கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று தான் வீட்டு தேவைக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும்.
அந்த ஏரிக்கு செல்ல ஒரு ஒத்தயடி பாதை அதுவும் ஒருவரது நிலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும்.
ஒரு நாள்,அந்த வழியை வேலி போட்டு அடைத்து விட்டார்,அந்த விவசாயி குப்புசாமி. ஊர் மக்கள்
எல்லோரும் கூடி,அவரிடம் கேட்ட போது ,அது வழியாக நடக்க கூடாது,அந்த பாதையை பயன்படுத்தும் சிலர் அவரது நிலத்தில் விளையும் பயிர்களை சேத படுத்தி விடுகிறார்கள்,அதனால் அந்த பாதையில் யாரையும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
அந்த வழியை விட்டால் சுமார் மூன்று மைல் சுற்றி போக வேண்டும். நீர் எடுக்க செல்லும் கூட்டம் பெரும்பாலும் பெண்கள் தான்.அவர்கள் அவ்வளவு தூரம் தண்ணீர் சுமந்து கொண்டு வர முடியாது.
மீண்டும் ஊர்.மக்கள் குப்புசாமி யைபார்த்து கெஞ்சி கேட்டனர்.
அதற்கு இன்னும் ஒரு மாதம் வரை அனுமதி கொடுப்பேன்,அப்புறம் முடியாது,நீங்கள் வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட
இதற்கு என்ன தான் மாற்று வழி என்று ஜனங்கள் அவரையே கேட்டனர்.காரணம் அந்த ஊரில் அவர் ஒருத்தர் தான் சற்று அறிவாளி,அவர் சொன்னால் அந்த ஊர் மக்கள் கேட்பார்கள்.
அதற்கு அவர் சொன்னார்,எதற்கு நீங்கள் அடுத்த கிராமத்தில் இருக்கும் ஏரியை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்,உங்கள் ஊரில் நீங்களே ஒரு ஏரி வெட்டி, தண்ணீரை சேமிக்கலாம்.
உங்களுக்கு சிரமும் குறையும் என்றார்.
ஊர் மக்கள
் அவர் சொல்வது சரி என்று ஒப்புக்கொண்டனர்.அவருடைய வழி காட்டுதல் படி அந்த கிராமத்தின் எல்லையில் ஒரு இடத்தை தேர்வு செய்து ஏரி அமைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்
குப்புசாமி, மழை காலம் தொடங்க ஒரு மாதம் இருக்கிறது,உடனே பணியை தொடங்குங்கள் என்று கூறி ஊர் மக்கள் உடனே செயலில் இறங்கினார்கள்.
வெட்ட வெட்ட, மழையும் வந்து போய் கொண்டு இருக்க,ஏரி வெட்ட ஈரம் இருந்ததால் இருபது நடில் ஏரி தயார் ஆகி விட்டது.கூடவே மழை நீர் ஓடும் பாதைகளை ஆள படுத்தி அந்த தண்ணீர் ஏரிக்குள் வந்து சேரும்படி செய்தனர்.
அடுத்தடுத்து மழை பெய்ய,ஏரியும் நிரம்ப தொடங்கியது.உபரி நீரை விவசாயத்திற்கும் பயன் பட,ஒரு வழியாக அந்த ஊர் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகியது.
குப்புசாமி வீட்டில் மனைவியுடன் பேசி கொண்டு இருக்கும் போது,மனைவி கணவனிடம் பாதையை அடைத்தது தவறு என்று சொல்லி கொண்டு இருந்தார்.அதற்கு,அவர் எனக்கும் அதில் உடன்பாடு இல்லை தான்.ஆனால் பக்கத்து கிராமத்து ஏரியில் உள்ள நீர் இரண்டு கிராமத்து தேவையை பூர்த்தி செய்யாது.அந்த ஊரில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது.இன்னும் சில நாளில் அந்த ஊர் மக்களே நம் ஊர் மக்களை தடுத்து விடுவார்கள்.ஆனால் இதெல்லாம் இந்த ஊர்மக்களுகு சொன்னால் புரியாது.அதற்கு தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.தேவை என்று வந்துவிட்டால் ரா பகல் பார்க்காமல் ஏரி வெட்டி முடித்து விட்டார்கள்.இனி இந்த ஊர் மக்கள்
தண்ணீருக்கு வேண்டி அலைய வேண்டியது இல்லை என்று சொல்லி முடித்தார்.
முற்றும்