அத்தியாயம் நான்கு.விலகி செல்வதும் காதலே
அத்தியாயம் நான்கு.விலகி செல்வதும் காதலே
அத்தியாயம் நான்கு
விக்னேஷ்,வாய் தவறி கூட ஒரு தரம் குறைந்த சொல்லை பயன் படுத்த கூடாது என்பதில் குறியாக இருந்தான்.ஆனால் அவனுடைய கொள்கையை கேலிக்கூத்து ஆக்கும் படி,அவன் சந்தித்த நிறைய பேர்
அவனிடம் தரக்குறைவான மொழியில் தான் பேசி வந்தார்கள்.அவன் பல முறை அப்படி பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும்,அந்த மனிதர்கள் குணம் மாறுவதாக இல்லை
விக்னேஷ் நண்பன்,குரு,நண்பனிடம் பேசி நாட்கள் ஆகி விட்டது என்று எண்ணி,தொலைபேசியில் விக்நேஷை அழைத்து இருந்தான்.
எப்போதும் உற்சாகமாக பேசும் விக்னேஷ்,அன்று மிகவும் சோர்ந்து மெல்லிய குரலில் சொல்லுடா என்று கேட்டுக்கொண்டு இருந்தான்.சாதாரண நாட்களில் சொல்லு மச்சி என்ற வார்த்தையை தவிர அவன் வாயில் இருந்து வேறு வார்த்தை வராது.ஏதோ நடந்து இருக்கிறது என்று நினைத்து,என்னடா விக்கி என்ன ஆச்சி,ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறாய்,ஏதாவது பிரச்சனையா என்று கேட்க,பதிலுக்கு விக்னேஷ் போடா,வாழ்கையே வெறுத்து போச்சு பேசவே பயமா இருக்கு என்று ஆரம்பித்தான்.டேய் டேய் ஒரு நிமிஷம் அப்படியே இரு, துருவ் லைனில் வரான்,அவனையும் கனெக்ட் பண்றேன்,என்று சொல்லி துருவ் லைனில் வந்ததும் அவனையும் இணைத்து குரு கான்பரன்ஸ் கால் போட்டான். டேய் துரு,இங்கே ஒருத்தன் புலம்பி கொண்டு இருக்கிறான்,என்னவென்று கேள் என்று சொல்ல,துருவ் யாரடா என்று ஆவலுடன் கேட்க,குரு, வேறு யார்
விக்னேஷ் தான் என்று சிரித்தான்.அதை கேட்ட விக்னேஷ்,ஏண்டா என்னை பார்த்தா எப்படி இருக்கு என்றான் சோகமாக.உடனே துருவ் , டேய் குரு மச்சான் நிஜமாகவே சோகமாக தான் இருக்கிறான்,விக்கி நீ சொல்லு உனக்கு என்ன பிரச்சினை .அதற்கு விக்னேஷ்,உங்களுக்கே தெரியும் எனக்கு கெட்ட வார்த்தை பேசினா
பிடிக்காது.ஆனால் நானும் பார்க்கிறேன் வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தை தான் பேசராங்க, என்று விக்னேஷ் சொல்ல,குரு,அவனிடம் அது யார் விவரமா சொல்லு என்று கேட்க,விக்னேஷ் வேறு யார் கூட வேலை செய்யும் கலீக் தான்.
உடனே துருவ்,இதுவா பிரச்சினை.
இது மேல்நாட்டு நாகரீகம்.அங்க வாரதைக்கு வார்த்தை இப்படி ஒரு வார்த்தையை பேசி விடுவாங்க.
அதுவும் மிகவும் பழக்கமான நண்பராக இருந்தால் சொல்லவே வேண்டாம்.அதையே இங்கும் பின் பற்றி வருகிறார்கள்.
உதாரணமாக நீ உன் நண்பனை மச்சி என்று கூப்பிடும் போது,அதன் அர்த்தம் என்ன தெரியுமா.
மச்சான் என்ற வார்த்தை மருவி மச்சி ஆகி விட்டது.
மச்சான் யார்,ஒன்று சகோதரி கணவர்,இரண்டு அத்தை அல்லது மாமா மகன்.அதாவது உன் சகோதரியை திருமணம் செய்ய முறை உள்ளவன்,உரிமை உள்ளவன்.
நீ உன் நண்பனை மச்சி என்று அழைப்பதால் அவன் உன் சகோதரியை காதலிக்க அனுமதித்து விடுவாயா.
அது ஒரு பேச்சு வழக்கு,அதற்கு ஒரு விலை இல்லை.
அப்படி உன் கூட இருக்கும் நண்பன்,ஒரு வார்த்தையை பேசும் போது அது உன் கூட உள்ள நெருக்கத்தை குறிக்கிறது.அவ்வளவு தான். நீ எதற்கு அதை நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்று பாகுபடுத்தி பார்க்க வேண்டும்,சில நேரங்களில்,சிலர்,பேசும் போது,டேய் இவனே என்பார்கள்,அதன் அர்த்தம் என்ன தெரியுமா, ஊர் பேர் தெரியாதவன்,அப்பன் பேர் தெரியாதவன் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்..எவனாவது அப்படி பேசினால் தலையில் ஓங்கி ஒரு குட்டு வை.
நேரம் அறிந்து அந்த வார்த்தையின் விலையை புரிந்து கொள்.அதற்காக எல்லா வார்த்தையும் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மன அழுத்தத்தை வெளிபடுத்த கெட்ட வார்த்தை பேசுவார்கள்.அதுவும் நெருக்கமான நண்பர்கள் நடுவே.காரணம் அந்த வார்த்தைக்கு அவன் கோபித்து கொள்ள மாட்டான்.தேவை பட்டால் அவனும் திருப்பி பேசி விட்டு போய் விடுவான்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அதை கேட்கும் நபரின்,மனதை வருத்தாமல் இருக்க வேண்டும்.எது எப்போது,யார் மனதை புண் படுத்தும் என்றே தெரியாது.நாம் பேசும் நல்ல வார்த்தை கூட பிறரை புண் படுத்தலாம். இதெல்லாம் ஒரு மேட்டர் கிடையாது.அடுத்த வேலை என்னவோ அதை பாரடா.
வந்துட்டான் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை பட்டி மன்றம் நடத்த…
