Tamizh Pechu

Abstract

5.0  

Tamizh Pechu

Abstract

என் கட்டுரை - 1

என் கட்டுரை - 1

2 mins
1.0K


தீப ஒளி. இந்த தீப ஒளிக்கு ஒரு சக்தி உண்டு. கெட்ட அதிர்வுகளை உறிஞ்சி நல்ல அதிர்வுகளை பரப்பும். இருள் நீக்கி வெளிச்சம் தரும். அதனால தான் கோவில், வீடுகளில விளக்கு ஏத்துறாங்க. அந்த விளக்கு ஒளி ஒரு புது விதமான ஆற்றலை கொடுக்கும்.


சரி இந்த தீபம் ஏற்ற என்னென்ன தேவை? திரி, எண்ணெய், நெருப்பு. போதுமா? இதைக் கொண்டு தீபம் ஏற்ற முடியுமா? முடியாது. எண்ணெய் ஊற்றி திரியை தூண்டி விடணும். அந்த தூண்டல் அவசியம். வாழ்க்கையில நமக்கு நிறைய சாதிக்கணும்னு தோணும். நிறைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் இருக்கும். ஆனா அது பெரும்பாலும் நம்ம மூளையிலேயே தேங்கியிருக்கும். அந்தக் கனவுகளை, ஆசைகளை நிறைவேற்ற நமக்கு ஒரு சரியான தூண்டுதல் தேவைப்படுகிறது. அந்த தூண்டுதல் எங்க இருந்து வரும்?


என்னதான் தான் கஷ்டப்பட்டாலும், தன் மகன்/மகள் பெரிய ஆளாக வரணும்னு நினைச்சு அனுதினமும் உனக்காக ஓயாமல் உழைக்கும் அப்பா கிட்ட இருந்து வரலாம். தான் பசியாயிருக்கிறதையே மறந்து இன்னும் ஒரு தோசை சாப்பிடுடானு பாசத்தில கரண்டியில தோசை தூக்கிட்டு ஓடி வரும் அம்மா கிட்ட இருந்து வரலாம், ஆயிரம் முறை சண்டை போட்டாலும் யார்க்கிட்டேயும் உன்னை விட்டு கொடுக்காத அந்தக் குட்டி தங்கச்சி கிட்ட இருந்து கூட வரலாம், கஷ்டத்திலேயும் சந்தோஷத்திலேயும் தோள் கொடுக்கும் நண்பர்கிட்ட இருந்தும் வரலாம். என், தள்ளாத வயசிலேயும் உழைக்காமல் கிடைக்கிற உணவு வேண்டாம்னு நினைக்கிற அந்த தெரியாத தாத்தா கிட்ட இருந்து வரலாம், தூண்டுதலுக்கு காரணமா உனக்கு பிடிச்ச பிரபலங்கள், ஏதோ ஒரு பொருள், புத்தகம், சந்தித்த தோல்விகள், ஏற்பட்ட அவமானங்கள் எதுவா வேணா இருக்கலாம். ஆனா அந்தத் தூண்டுதல் ரொம்ப அவசியம் வாழ்க்கையில சாதிக்க.‌ ஏனா அதுதான் அந்த ஒளியை பற்றி எரிய செய்யும்.


சரி, திரி, எண்ணெய், நெருப்பு எல்லாம் இருக்கு திரி தூண்டியும் விட்டாச்சு, ஒளி கிடைச்சிதா? இல்லை அந்தத் தீப்பெட்டியில இருந்து குச்சி எடுத்து தீபம் ஏற்ற ஒருத்தர் வேணும். அதுதான் நீ. அந்தக் குச்சியில வர தீப்பொறி. இந்த உலகத்தில எத்தனையோ பேர் வந்து உற்சாகப் படுத்தலாம், தைரியம் கொடுக்கலாம், ஆனால் உன்னுடைய கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் எதுவுமே நடக்காது. உன்னுடைய முழு உழைப்பையும் போட்டு போராடி பாரு, உலகமே வந்தாலும் உன்னை தடுக்க முடியாது.


இருளை விரட்ட தீக்குச்சி என்னும் விடாமுயற்சியை கையிலெடு. தூண்டுதலும், கடின முயற்சியும் ஒன்று சேரும் போது அந்தத் தீப்பொறி தோன்றி உன் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கும். ஒரு முறை ஜெயிச்சா நிறுத்திறக் கூடாது. அதை தக்க வைக்க தினம் தினம் உழைக்கணும். சோர்வு வரும் தளர்ந்து போவோம். அப்போ அப்போ தன்னம்பிக்கை என்கிற எண்ணையை ஊற்றிகிட்டே இருக்கணும். எண்ணெய் வற்றிப் போன பிறகு அதில் எண்ணெயை விட்டு அந்த ஒளியைப் பார், அது இன்னும் அழகாக பிரகாசிக்கும்.


தன்னம்பிக்கை எவ்வளவு அழகான வார்த்தைல அது உன் வாழ்வை இன்னும் அழகாக்கும். உன்னோட ஒளி பத்து ஒளிக்கு உயிர் கொடுக்கும், பத்து நூறாகும், நூறு ஆயிரம் லட்சம் கோடி என போகும். இருள் மொத்தமா விலகும். உன்னுடைய ஒளி கொண்டு மற்றவரின் இருள் விரட்ட உதவு. அதைவிட திருப்திகரமான இன்பம் வேற ஏதுமில்லை. ஆனால் அதற்கு முதலில் நீ பிரகாசிக்கணும், அது மிக அவசியம். ஏனெனில் இருள் கொண்டு இருள் விரட்ட முடியாது. ஒளி கொண்டே இருள் ஒழிக்க முடியும்.


ஒருவர் வாழ்வில் நீ ஒளியாக முடியாவிட்டால் தூண்டலாக இரு, தூண்டலாகவும் முடியாவிட்டால் தன்னம்பிக்கையாக இரு. ஆனால் இருளாக மட்டும் ‌என்றும் இருந்து விடாதே.


ஒளியாகி, ஒளியை ஒளியால் பெருக்கி என்றும் பிரகாசிப்போம்!! ✨

#தமிழ்ப்பேச்சு


Rate this content
Log in

Similar tamil story from Abstract