நீ இன்றி நான் இல்லை
நீ இன்றி நான் இல்லை
நீ இன்றி நான் இல்லை.
நாதன் இப்போது 72 வயதை கடந்து விட்டார்.இன்று வரை அவர் வேலை பார்த்த நிர்வாகம் வேலை கொடுத்து சம்பளமும் கொடுத்து வருகிறது.அவர் விருப்ப ஓய்வு கேட்டும்,அவருக்கு தரப்படவில்லை.வீட்டில் இருந்து கொண்டு உங்கள் ஆலோசனையை கொடுத்து வாருங்கள் என்று நிர்வாகம் கூறி விட்டது.
அவரும் வேலைக்கு என்று சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரே நிர்வாகத்தின் கீழ் வேலை செய்து வருகிறார்.நிர்வாக இயக்குநர் எண்ணப்படி நடக்கும் திறமை பெற்றவர்.எல்லோரிடமும் இனிமையாகவும் கீழ் படிந்தும் நடக்கும்குணம்உள்ளவர்.
அவருக்குஎதிரிஎன்றுயாரும்கிடையாது.நிர்வாகத்தில் உயர்ந்த நிலையில்இருந்துவருகிறார்.
கொரோனா வந்த சமயம்,இனியும் இளைஞனை போல நடந்து கொள்ள கூடாது என்று நினைத்து விருப்ப ஓய்வு கேட்டார்.
அவருடைய பொறுப்பை கவனிக்க ஒரு உண்மையான உதவியாளர் கிடைத்துஅவருக்கும் தேவையான வழிகாட்டி முறைகளை விளக்கி,அவரே சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு பயிற்சியும் கொடுத்து உள்ளார்.அவரும் இவருடைய எதிர்பார்ப்பு ஏற்ப பணிகளை விரைவில் கற்று கொண்டார்.
அது நாதனுக்கு மன உளைச்சலை பெரிதும் குறைக்க உதவியது. நிர்வாக இயக்குநர் எண்ணப்படி பணி புரிவது அவ்வளவு எளிதான வேலை அல்ல.இத்தனை வருடமும் நேரம் காலம் பார்க்காமல்,உடலை வருத்தி கொண்டு வேலை செய்த உடம்பு சற்று ஓய்வு கேட்டது.
மேலும் ஓய்வு பெற்றாலும் சுறு சுறுப்பாக இருக்க திட்டம் வைத்து இருந்தார்.அவர் உடம்பு ஓய்வு கேட்டாலும்,அவருக்கு தன் மனைவி கூட நேரம் செலவழிக்க விரும்பினார்.திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகி விட்டது.மனைவியும் வேலைக்கு சென்று வந்ததால்,இருவரும் சேர்ந்தஇருக்கும் நேரமும் நாட்களும் மிக குறைவாகவே இருந்தது.அதுவும் இல்லாமல் நாதன் வாரத்தில் நான்கு நாள் வெளியூர் சென்று விடுவார்.
மாலை வீடு திரும்பும் போதே மணி ஒன்பதை நெருங்கி விடும்,மனைவியும் பணியில் இருந்து வீடு திரும்ப ஆறு அல்லது ஏழு மணி ஆகிவிடும்.மனைவிக்கு சமையல் வேலையும்,அடுத்த நாள் தேவை படும் உணவிற்கு காய்கறி வெட்டி வைப்பதற்கும் நேரம் போதாது.அவரும் தினமும் நான்கு மணிக்கு கண் விழித்தால் மட்டுமே சரியான நேரத்திற்கு சென்று ரெயிலை பிடிக்க முடியும்.
ஒரே மகன் பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அவரையும் காலை ஏழு மணிக்குஅனுப்பவேண்டும். இதற்குள் எல்லா சமையல் வேலையும் முடிய வேண்டும்.கிட்ட தட்ட ஒரு ரோபோபோல தான் நாதனின் மனைவி செயல் பட்டு வந்தார்.
வார இறுதி நாட்களில் மட்டுமே மூவரும் சேர்ந்து உணவருந்தும் நிலை இருந்து கொண்டே இருக்கும்
நாதனின் மகன் படிப்பை முடித்து விட்டு கணினி பொறியாளர் ஆக வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.அந்த வேளையில் அவருக்கு நெஞ்சு வலி வந்து சிறிய அறுவை சிகிச்சை செய்து முடித்தார்.மகனிடம் சொல்லவில்லை,அவன் வட மாநிலத்தில் இருந்தான்.மனைவி மட்டும் ஒரே ஆளாக இருந்து இவருக்கு வேண்டிய பணிவிடைகள்,கூடவே ஆசிரியர் பணி,அது சம்பந்த பட்ட ஜனத்தொகை கணக்கெடுப்பு ,இப்படி வேலை மேல் வேலை,உதவி செய்ய யாரும் இல்லை,அப்படி இருந்தாலும் அவர்களுக்கு நேரம் இல்லை.சில மாதங்களுக்கு பிறகு நாதன் அதிகாலை நடக்க சென்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி இடுப்பில் அடி.படுத்த படுக்கை.இப்பவும் மனைவி தான்.
நான்கு வருடங்கள் ஓடின,மகனுக்கு மேலே படிக்க விருப்பம்.நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க பல லட்சம் செலவு செய்து படித்து பட்டம் வாங்கிய பிறகு உதவி பேரா சிரியர் பணிக்கு செல்கிறேன்,உங்களை விட்டு வெளியூர் செல்ல விருப்பம் இல்லை என்று கூடவே இருந்த உள்ளூரில் வேலை செய்து வந்தார்.
திருமணம் நான்கு வருடம் தேடி மகனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.திருமணம் தாமதம் ஆக ஆக மனைவிக்கு மன கவலை, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள்.நாதனை விட அவர் மனைவிக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது.மனைவி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.வீட்டில் அவர் தனியாக இருந்து மேலும் மன உளைச்சல் அதிகம் ஆனது.
இதை கவனித்து வந்த நாதன் பணி ஓய்வு பெறுவதில் தீவிரம் காட்டினார். அதற்கேற்ப கொரோனாவும் வர அதை சாக்கிட்டு,வீட்டில் இருந்து பணி புரிய அனுமதி கேட்டு வாங்கினார்.அவருடைய எண்ணம் முழுவதும் மனைவியுடன் பேசி பொழுதை கழிக்க வேண்டும்,முடிந்தவரை மனைவி கூட இருப்பதை விரும்பினார் .அது ஓர் அளவிற்கு நிறை வெறியது. எங்கு சென்றாலும் இருவரும் செல்ல ஆரம்பித்தனர்.
மனைவியுடன் பேசுவது தான் அவருடைய தலையாய கடமை வேலை வேலை என்று குடும்ப சந்தோசத்தை தவற விட்டது எவ்வளவு மூட தனமானது என்று புரிந்து கொண்டார்.அவர் சம்பாதித்த பணம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.மனைவி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனாக இனித்தது மனைவிக்கு உதவியாக எந்த வேலையும் செய்து கொண்டு, பொறுப்புள்ள கணவனாக இருந்து வருகிறார்.
கணவன் மனைவி பேச கூட நேரம் இல்லாமல் பணம் சம்பாதிப்பது தான் குறிக்கோள் என்ற வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையே இல்லை.மனைவி கணவனுக்கும் மகனுக்கும் வேண்டி பொறுத்து கொள்ளும் துன்பங்கள் விவரிக்க இயலாது இது என்ன கஷ்டமான வேலை என்று நினைத்து,அதை அவரே செய்து பார்த்த போது அவருக்கு புரிந்தது,மனைவி என்பவர் தன்னை படைத்த கடவுளுக்கு மேலே.
அத்தனை துன்பங்கள் பொறுத்து முகம் கோணாமல்,தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறி குடும்பத்திற்காக வாழும் மனைவி ஒரு தெய்வம் தான்.அரிதாக விரும்பி கேட்ட பொருளை கூட வாங்கி கொடுக்க நேரம் இல்லாமல்,அலுவலகம் மட்டும் தான் அவர் கண்ணுக்கு தெரிந்தது.நல்ல வேளை,late is better than never என்பது போல,எதுவானாலும் மனைவிக்கு செய்த பிறகு தான் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்,இருப்பார்,இருந்து கொண்டே இருப்பார்.
முற்றும்.
.
