சுகுவின் குடும்பம்
சுகுவின் குடும்பம்
பிச்சை தனது தட்டு வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு வர சொல்லிய வீட்டிற்கு வெளியே காத்து கொண்டு இருந்தார்.
பிச்சை அப்பொழுது பக்கத்து வீட்டு பையன் பள்ளி செல்ல நடந்த போது "டேய் தம்பி எப்படி இருக்க?" என கேட்ட பொழுது அந்த பையன் தலை குனிந்து கொண்டே செல்ல அவன் அம்மா "அண்ணே நல்லா இருக்கான்" என மகனை தனது மறுபக்கத்தில் நிற்க வைத்து கொண்டே சொல்லி விட்டு கடந்து சென்றனர்.
அந்த பையன் பேசுனாலும் நீங்க பேச விட மாட்டேங்கிளே என பிச்சை நினைத்து கொண்டு இருக்க வீட்டின் உள்ளே இருந்து "அந்த ஆளுக்கு எதுக்கு அவ்வளவு பணம்,பேசுன பணமே அதிகம்,கொஞ்சம் அடிச்சு பேசி குறைங்க" என ஒரு குரல்.
வெளியே வந்த வீட்டுக்காரர் அண்ணே பேசுன பணம் இந்தாங்க என தர பிச்சை சிறிய சிரிப்புடன் அந்த பணத்தை வாங்கி கொண்டு பொருளை எடுத்து வைக்க கிளம்பினார்.
பிச்சை அவரும் பொருள்களை இறக்கும் வேளையில் ஈடுபட்டார்.
அன்று மாலை குடி போதையில் வீட்டிற்கு வந்த பிச்சை மனைவியிடம் மீதி காசை தந்து விட்டு ரோட்டிற்கு வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் அன்று நடந்த சம்பவங்களை பற்றி நினைத்து நினைத்து கத்தி புலம்பினார்.
அவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் சுகு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் ருக்மணி வெளியே வந்து அவரை கட்டுப்படுத்தி வீட்டின் உள்ளே இழுத்து சென்றனர்.
அடுத்த நாள் தெருவில் பிச்சை மனைவியிடம் உன் புருஷனை ஒழுங்கா இருக்க சொல்லுமா என அனைவரும் புத்தி கூற, அவரது மகன் சுகு மற்றும் ருக்மணியுடன் தெருவில் உள்ள பிள்ளைகள் ஒருவர் கூட ஒன்று சேர்ந்து விளையாடவில்லை.
அப்பொழுது சுகுவின் பள்ளியில் அவனது நண்பன் தங்கு அவனது அப்பா உட்கொள்ளும் ஒரு பவுடரை தான் உட்கொண்டதும் அது ஒரு புது உணர்வு என பேசி கொண்டு இருந்தான்.
சுகு அது எனக்கு கிடைக்குமா? என கேட்க, தங்கு 20 ரூபாய் ஒரு பொட்டலம் என கூற சுகு யோசித்தான்.
சரி 10 ரூபாய் பாதி என் நண்பனுக்காக என தங்கு கூற சுகு அவனை கட்டிப்பிடித்தான்.
மாலை வீடு வந்த சுகு அம்மா கோயிலுக்கு வைத்திருந்த உண்டியலில் இருந்து முப்பது ரூபாய் எடுத்தான்.
10 ரூபாய் தவிர அனைத்துக்கும் பொட்டலம் வாங்கி வந்து இரவு தூங்க போகும் போது அதை பயன்படுத்தி தூங்கினான்.
அடுத்த நான்கு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்திய சுகு அதை மகிழ்ச்சியாக நினைத்து அளவுக்கு அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தான்.
வேண்டுதல் உண்டியலில் இருந்து இன்னும் அதிகம் பணம் எடுத்தான்.
அதை உட்கொள்ள உட்கொள்ள அதன் கேடுகள் அவனை சிறிது சிறிதாக தாக்க ஆரம்பித்தது.
சுகுவின் கண்கள் வீங்க ஆரம்பித்தது.
படிப்பில் இருந்து கவனம் விலக ஆரம்பித்தது.
அவனது அம்மா உண்டியல் பணம் காண போவதை உணர்ந்து சுகு மற்றும் ருக்மணி இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
சுகு அடுத்து கோயில் உண்டியலில் பணம் எடுக்க போவதை பார்த்த அவனது அம்மா அவனை அடிக்க போக அவனது அம்ம
ாவை வேகமாக கீழ தள்ள அவரது மண்டை சுவரில் போய் மோதி ரத்தம் வர ஆரம்பித்தது.
அன்று மாலை போதையில் வந்த பிச்சை மனைவியின் தலையில் இருந்த கட்டை பார்த்து ருக்மணியிடம் கேட்க அவள் சுகுவை பற்றி கூற பிச்சை சத்தம் போட்டு அவனை கூப்பிட்டார்.
பக்கத்து வீட்டு ஆட்கள் என்ன பிரச்சனை? என எட்டி பார்க்க வீட்டு வாசலுக்கு வந்த சுகு அவனது அப்பாவை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி நீ என்ன ஒழுங்கா? என்னை கேள்வி கேட்கிற? என அடிக்க போக அருகில் இருந்தோர் இருவரையும் விலக்கி வைத்தனர்.
பிச்சை கண் கலங்கி "என் குடும்பம் அவ்வளவு தானா? படிச்சு முன்னேறுற பிள்ளை இப்படி போயிட்டானே" என சத்தமாக அழ, அவரது மனைவி என் வாழ்க்கை மாதிரியே என் பொண்ணு வாழ்க்கையும் இந்த மாதிரி போயிறுமே என அழ,சுகுவை பிடித்கு நிறுத்திய ஒரு நபர் அவனது மூக்கு,வாய் பகுதிகளில் இருந்த பவுடரை பார்த்து அவனது அம்மாவிடம் "அவன் எதோ போதை மருந்து எடுக்குறான் போல,டாக்டர் கிட்ட போமா,அவனை மீட்டு எடு" என தனக்கு தெரிந்த ரீஹெப் இடம் தகவலை தந்து சென்றார்.
பிச்சை அவரது மனைவி சுகுவை வம்புடியாக அங்கு அழைத்து சென்று டீரிட்மென்ட் தந்து அவர்கள் தரும் மருந்துகளை அவனை சாப்பிட வைக்கின்றனர் .
அதே நேரம் கவுன்சிலிங் தந்து சுகுவை திருத்தவும் முயல்கின்றனர்.
அரசாங்க ரீஹெப் அங்கு இல்லாததால் பிரைவிட்ல் ரீஹெப்ல் பார்த்த பிச்சை குடும்பம் அவர்கள் நிலையை பார்த்த மருத்துவர்கள் குறைந்த விலைக்கே மருத்துவம் பார்த்தனர்.அந்த செலவிற்காக சுகுவின் அம்மா,தங்கை நகையை விற்றனர்.
பிச்சை குடிப்பதை நிறுத்தி வைத்து அதிக வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.
சுகுவின் சண்டையை பார்த்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல அவனை பிடித்து விசாரித்து அந்த போதை மருந்து கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.
இதை அறிந்த அந்த கும்பல் சுகுவை கொன்று விட்டால் சிறிது நாட்கள் கடத்தலாம் அதற்குள் ஆதாரங்களை அழித்து விடலாம் என ஆட்களை ஏவி விடுகின்றனர்.
இந்த கும்பல் பள்ளி விட்டு கிளம்பிய சுகுவை துரத்த ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் ஓட முடியாத சுகு கீழே விழ அவனது தங்கை அவனை பின் தொடர்ந்து ஓடி வந்தவள் அவனை அழைத்து கொண்டு பிச்சை இருக்கும் இடம் அழைத்து செல்ல அவர் இருவரையும் தட்டு வண்டியில் உட்கார வைத்து கொண்டு வேகமாக ஓட்ட ஆரம்பித்தார்.
வீட்டிற்கு வந்த பிச்சை,குழந்தைகள் போலிஸை பார்த்தனர்.
போலீஸ் சுகுவை விசாரனைக்கு அழைத்து சென்றனர்.
சுகு அவனது அப்பாவை கண்ணீருடன் பார்த்து விட்டு ஸ்டேஷன் சென்றான்.
12 வருடங்கள் கழித்து,
சுகு ரீஹெப் மற்றும் அவனது நம்பிக்கையுடன் போதையில் இருந்து மீண்டு வந்தான்.
இப்பொழுது படித்து நல்ல வேளையில் உள்ள சுகு மற்றும் படித்து முடித்து கம்பெனியில் நல்ல பணியில் இருந்த ருக்மணி இருவரும் சொந்த வீடு கட்டி அவனது அப்பா, அம்மாவுடன் அவர்களை தாழ்வாக நினைத்தவர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர்.