நம் வாழ்க்கையை வாழ்வோம்
நம் வாழ்க்கையை வாழ்வோம்
சரவணன் ஆபிஸில் வேலைகள் செய்ய லெப்டாப்பை திறந்தான்.
ஆனால் அவனால் வேலை செய்ய முடியவில்லை.
அவன் யோசனைகள் அனைத்தும் அதற்கு முன் நடந்த எத்தனையோ சம்பவங்கள் அவனுக்கு மகிழ்ச்சி,சோகம்,வேதனை என அந்த சம்பவங்கள் நடந்த போது அவன் உணர்ந்த உணர்வுகளை நடந்தவைகளை பற்றி யோசிக்கும் போதும் உணர்ந்தான்.
சரவணன் அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை மாறாக அவன் மீதே கோபம் கொண்டான்.
முதலில்,
சரவணன் அமைதியை விரும்புபவன் மற்றும் வேலை செய்யும் போது சிறு சத்தம் வந்தாலும் அது அவனது மொத்த கவனத்தையும் சிதற வைத்துவிடும்.
அவன் தங்கும் இடத்தில் மிகவும் சத்தமாக தான் இருக்கும்.யாரேனும் டீ குடிக்கும் போது உறிஞ்சி குடித்தாலோ மற்றும் சாப்பாட்டை சொட்டாங்கு போட்டு சாப்பிட்டாலோ சரவணனின் கோபம் எல்லை மீறும்.
இரண்டாவது,
சரவணன் எப்பொழுதும் தன் பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் கூறுவான் அதில் பிரச்சனை செய்தவரிடம் நேரடியாக பேச முயற்சி செய்யாமல் அவர்களை பற்றி பிறரிடம் திட்டி கோபத்தில் பேசி விடுவான்.
புறம் பேசுதல் என்ற இந்த செயலை சரவணன் செய்து கொண்டே இருந்தான்.
மூன்றாவது,
சரவணன் அவனை யாராவது காயப்படுத்திவிட்டால் அவரை திரும்ப காயப்படுத்த வேண்டும்,அல்லது மற்றவரை விட தான் முதலில் எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டும்,தன்னை திட்டியவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை மற்றும் அவனுக்கு பிடிக்காதவரை கண்டுக்கொள்ளாமல் இருப்பது போல் அவனை காட்டிக்கொண்டு அவர்கள் கவனத்தை கவர ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருப்பான்.
ஏனெனில் அவன் தன் மீது உள்ள நம்பிக்கையை சில சமயம் இழப்பான் எப்பொழுது என்றால் வேறு ஒருவர் அவனை விட நன்றாக அல்லது சீக்கிரம் ஒரு செயலை செய்தால் சரவணன் பாராட்டுவான்,பொறாமை கொள்ள மாட்டான் ஆனால் தன்னால் ஏன் செய்யமுடியவில்லை என்று அவன் கடினமாக வேலைகளை செய்ய ஆரம்பிப்பான்,அவர்களை விட சீக்கிரம் வேலைகளை செய்து முடித்து விட வேண்டும் என வேகமாக வேலைகளை செய்வான்.
ஆனால்,
சில தினங்களாக சரவணன் ஒன்றை தான் யோசித்து கொண்டிருந்தான்,
“எத்தனை சத்தங்கள் எவ்வளவு சத்தமாக கேட்டாலும் தான் செய்யும் வேலையில் கவனம் மற்றும் அதனை கேட்டு அவனின் மனதில் வரும் கோபத்தையும் கட்டுப்படுத்த பழகிக்கொண்டான்.
ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி அவர்களிடமே பக்குவமாக சொல்லுவோம்.
ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதல் தவறு.
நாம் ஏன் அடுத்தவரை காயப்படுத்துவதிலும், அவர்கள் என்னிடம் பேசவில்லை என அவர்கள் கவனத்தை ஈர்ப்பதிலும்,மற்றவரை விட தான் தான் அனைத்திலும் முதலில் வர வேண்டும் என்பதிலும் தன் கவனத்தை செலுத்தி தன்னுடைய வேலையை சரியாக செய்யாமல்,கண் முன் உள்ள நண்பர்களை கண்டுக்கொள்ளாமல்,தன் வாழ்க்கையில் உள்ள சிறு சிறு விஷயங்களில் உள்ள சந்தோஷங்களை கண்டுக்கொள்ளாமல் உள்ளோம் என நினைத்தான்.
நம்முடன் பேசுபவருடன் பேசுவோம், நம்முடன் பேச விருப்பமில்லாதவரிடம் என்ன காரணம்? என கேட்போம் அப்படியும் அவர்கள் பேசவில்லை என்றால் அவர்கள் வந்து மீண்டும் பேசும் வரை பொறுமையுடன் இருப்போம்.
நேரம் நில்லாமல் சென்றால்தான் நாம் செய்த செயல்களை பற்றி நாம் உணர ஆரம்பிப்போம்,நம்மை பற்றி யோசிக்க ஆரம்பிப்போம்.
அதே போல் நம்மை விட திறமையானவர்களை மதித்து அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்,நம்முடைய பலம்,பலவீனத்தை நாம் தெரிந்து வைத்திருந்தால் நம்மை மேம்படுத்திக்கொண்டு,நம்முடைய திறமைகள் மற்றும் அறிவை கற்று வளர்த்து நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு இலக்கை அமைத்துக்கொண்டு அதை நன்றாக செய்து முடிக்க முடியும்”.
சரவணன் தான் யோசித்த யோசனைகள் படி தன் வாழ்க்கையை வாழ அந்த நொடியில் இருந்து அவன் மனதில் உறுதி எடுத்துக்கொண்டான்.
