அனைத்து உயிர்களும் இங்கு சமமே
அனைத்து உயிர்களும் இங்கு சமமே
சசி அவனது வீட்டில் இருந்து வாக்கிங் செல்ல காலை நேரத்தில் கிளம்பி கொண்டிருந்தான்.
அவனது அம்மா கோலமாவு டப்பாவுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
அவர்கள் வீட்டு வாசற்படியில் இருந்த எறும்புகள் அந்த கோலத்தை தாண்டி சென்று மறுபக்கம் சிதறி கிடந்த உணவு பொருட்களை எடுத்து வந்தது.
அரிசி மாவு கோலம் போட்டு எறும்புகளும் பசியாற்றி வந்தோம் ஆனால் இப்பொழுது?
அவனுடைய அம்மா டிவி ஆன் செய்து பக்தி பாடல்கள் சேனலை சசியை போட சொல்ல, சசி சேனல்கள் மாற்றும் பொழுது ஒரு செய்தி சேனலில் குப்பைகளை உண்டு அதில் உள்ள பிளாஸ்டிக் மூச்சுக் குழாயில் அடைத்து மாடு ஒன்று இறந்ததை பற்றி கூறினர்.
சசியின் அம்மா அவனது கையில் குப்பைகள் போட்ட கவர் ஒன்றை குடுத்து தெருமுனையில் உள்ள குப்பைத்தொட்டியில் போட சொன்னார்.
சசி கையில் போனை எடுத்து பார்த்து கொண்டு குப்பைத்தொட்டி இருக்கும் இடத்தை தாண்டி சென்றதை உணர்ந்து சிறிது தூரத்தில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்திற்கு சென்று குப்பையை போட்டுவிட்டு சென்றான்.
அந்த தெருவில் உள்ள நாய்கள் அதை பார்த்து விட்டு அந்த கவரை ரோட்டிற்கு கொண்டு வந்து பிரித்து விட்டு அதில் உண்ண எதுவும் இல்லை என சென்றன.
அப்படி சசி போட்ட கவரில் இருந்த இலைகளை உண்ண வந்த மாடுகள் அதனுடன் பிளாஸ்டிக்கையும் உண்டு விட்டு சென்றன.
அந்த மாடுகள் சசி செல்லும் வழியை கடந்து செல்லும் போது சசி அந்த மாடுகளை பார்த்தான்.
அவை கடந்து செல்லும் வரை நின்றுவிட்டு பின்பு நடந்தான்.
வீட்டிற்கு திரும்பி வந்த சசி அவனது நாயிற்கு டாக் புட் வாங்கி வந்து இருந்தான்.
சசி அவனுடைய நாயை அழைத்து அதை குளிப்பாட்டி விட்டு நல்ல உணவாக அந்த நாயிற்கு வைத்தான்.
பின்பு சசி அவனது அம்மாவிடம் வேலைக்கு போயிட்டு வரேன் என கூறிவிட்டு அவனது நாயிற்கும் போயிட்டு வரேன் என சொல்லிவிட்டு கிளம்பினான்.
இரவு வேலை முடித்து வந்த சசி அவனது நாயை வாசலில் கொஞ்சி விட்டு அவனது அம்மாவிடம், அம்மா வெளியில் சாப்பிட்டேன் என கூறினான்.
உனக்கு இதே வேலை டா என அவனது அம்மா மீதம் இருந்த அனைத்து சாப்பாட்டையும் ஒன்றாக போட்டு தெருமுனையில் இருந்த நாய்களை கூப்பிட்டு கொட்டி விட்டு வந்தார்.
அங்கு இருந்த நாய்கள் அனைத்தும் அந்த சாப்பாட்டை முந்தி அடித்து கொண்டு வந்து சாப்பிட்டன.
அடுத்த நாள், அதே போல் அந்த நாய்கள் வர அதை விரட்டினார் சசியின் அம்மா.
“இங்கு நாய்க்கு சாப்பாடு வைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் அதை அந்த நாயின் பசியாற்ற வேண்டும் என இவர்கள் மட்டுமல்ல பலரும் நினைப்பதில்லை, மிந்து போன சாப்பாடு, வீணாய் போன சாப்பாடு என நம்மிடம் இருக்கும்பொழுது தான் தெரு நாயிற்கு போடுவார்கள்.
ஒரு நாள் அந்த நாய்களின் பசி ஆற்ற நாம் சாப்பிடும் போதே நாம் சாப்பாடும் சாப்பாட்டை வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்”.
சசியின் அம்மா ஒருநாள் சசியை மாடிக்கு அவசரமாக கூப்பிட்டு காய வைத்திருந்த தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்த புறாக்களை விரட்டி விட சொல்ல சசி அதை விரட்டினான்.
ஆனால் சசியின் மனதில் அவன் வீட்டில் அவர்கள் தெரியாமல் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் செய்யும் தீங்குகள் என்ன? என யோசித்து கொண்டிருந்தான்.
அடுத்த நாள் காலை, சசியின் அம்மா மாட்டிற்கு அரிசி,அகத்துக்கீரை தருவதை பார்த்து சசி மகிழ்ச்சி அடைந்தான்.
என்ன அம்மா? என சசி கேட்க, இன்னைக்கு மாட்டிற்கு அரிசியும்,அகத்துக்கீரையும் தந்த புண்ணியம் டா என கூற, சசி தினசரி அவன் மாடுகள் குப்பைகளையும் அதில் உள்ள பிளாஸ்டிக்கை உண்பதையும் அவன் பார்ப்பதை நினைத்து கொண்டான்.
சசி அவனது அம்மாவிடம் “நீ உண்மையாவே இந்த மாட்டோட பசி தீர்க்க இத பண்ணியிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்” என கூறிவிட்டு சென்றான்.
சசி அன்று மாலையே ஒரு சின்ன டப்பா மற்றும் சின்ன பாத்திரம் ஒன்றை எடுத்து கொண்டு மாடிக்கு எடுத்து சென்று சின்ன டப்பாவில் தண்ணீரும், சின்ன பாத்திரத்தில் சிறிது தானியங்களும் வைத்தான்.
நிறைய நாட்கள் அது அப்படியே இருந்தாலும், சிறிது நாட்கள் கழித்து புறாக்கள்,காகங்கள் சில அந்த தானியங்களை உண்டு தண்ணீரை குடித்தது.
சசி அவனது நாயிற்கு டாக் புட் வைக்கும் பொழுது தெரு நாய்களுக்கும் சிறிது டாக் புட் வைக்க ஆரம்பித்தான்.
சசி அவனது அம்மாவிடம் மாட்டிற்கு அரிசி, அகத்துக்கீரை தருவதை மனசார செய் மா என கூறி அதை எப்பொழுதும் செய்ய சொன்னான்.
2 குப்பைத்தொட்டிகளில் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து வைத்த சசி அதை சரியான குப்பைத்தொட்டியில் போடுவதிலும் கவனம் செலுத்தினான்.
2 மாதங்கள் கழித்து, சசியின் வீட்டில்
டேய் சசி ஏன் டா இப்படி பண்ற? கோல மாவு டப்பா எங்க? என அவன் அம்மா கேட்க, சசி அதெல்லாம் என் மா யூஸ் பண்ற? நான் அரிசி மாவு கரைச்சு வச்சிருக்கேன் என கூற, டேய் அந்த டப்பா தேடியே நேரம் போயிருச்சு இன்னைக்கு நீ கோலம் போடு அப்ப தான் உனக்கு போய் சாப்பாடு செய்ய முடியும் என அவனது அம்மா கூறி விட்டு செல்ல, சசி கோலம் போட அரிசி மாவு எடுத்து கொண்டு வாசலுக்கு சென்றான்.
அவனது அப்பா எங்க டா நான் இங்கு வச்சிருந்த பிளாஸ்டிக் கவர்? என கேட்க, சசி கோலம் போட்டு கொண்டே சிரித்தான்.
சசியின் அம்மா அடுப்படியில் இருந்து உங்க புள்ளை வேலைதான், என்ன திட்டலாம் அப்படினு பார்த்தா இவன் நல்ல வேலைதான் செய்யுறான் என கூறிவிட்டு வேலையை தொடர்ந்தார்.
“மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்”.
