ஆயத்த ஆடை
ஆயத்த ஆடை


ஆயத்த ஆடை
அருணா புவனா இரண்டும். பெரும் இரட்டை சகோதரிகள்.இருவரும்
ஆடை வடிவமைப்பு பற்றி படித்து பட்டம் வென்றவர்கள்.தற்போது இருவரும் அனுபவம் பெற வேண்டி
ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிர்வாகத்தில் பணிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இருவருக்குமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி முன்னுக்கு வர வேண்டும் என்று தீராத ஆசை.
பணம் அவர் தந்தை கொடுப்பார்,ஆனால் அதை நிர்வகிக்க அறிவும் திறமையும் வேண்டும்.ஏற்ற தாழ்வு வரும் போது அந்த வியாபாரத்தை கையாளும் திறன் வேண்டும்.கூடவே தேங்கும் சரக்குகளை விற்பனை செய்யும் வரை முதலீடு செய்ய பணம் தேவை.
அதை பற்றி தெரிந்து கொள்ள தான் இருவரும் பணிக்கு செல்கிறார்கள்.
இந்த நேரத்தில் அவர்களது தந்தை உடல் நலம் சரியில்லாமல் அவர் செய்து வந்த இரும்பு வியாபாரத்தை சரியாக கவனிக்க முடியவில்லை.
இந்த காரணத்தால் அருணா அப்பாவின் தொழிலை கவனிக்க தொடங்கினாள்.புவனா அப்பா கூட இருந்து அவருக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தாள்.
அப்பாவிற்கு தன்னால் பழைய நிலைக்கு வர முடியாது என்று உணர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.
ஒரு மாப்பிள்ளையை வீட்டோடு வைத்து கொண்டால் வியாபாரத்தையும் கவனிக்க முடியும்
மகளும் தனக்கு உத
வியாக இருப்பாள் என்று எண்ணினார்.
அருணா வை பார்க்க வந்த பையன் ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பதால்,இந்த இரும்பு வியாபாரத்தை கவனிக்க முடியாது, என்று கூறி விட்டான்.புவனாவை பார்க்க வந்த பையன் ஒரு பெரிய கம்பனியில் முக்கிய பதவியில் இருக்கிறான்.அவர்கள் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனத்தை வரும் மருமகள் கவனித்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.
புவனா அப்பாவை நன்கு கவனித்து
பழக்கம் ஆகி விட்டது.அதனால் அவள் அப்பாவை விட்டு வர முடியாது,ஆனால் அவளுக்கு ஆயத்த ஆடை நிறுவனத்தை நிர்வாகம் செய்ய விருப்பம் தான் என்று வெளிப்படையாக கூறினாள்.
அப்பாவிற்கு இந்த பிரச்சனையை எப்படி கையாளுவது என்று குழப்பம்.
அருணா புவனா இருவரும் ஒரு முடிவிற்கு வந்தனர்.அப்பாவின் இரும்பு வியாபாரத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை,புவனா மாமனாரின் ஆயத்த ஆடை நிர்வாகத்தில் பங்கு தா ராரக சேர்ந்து,வியாபாரத்தை அருணா கவனித்து கொள்ளட்டும்.
புவனா எப்பவும் போல அப்பாவுடன் தங்கி அவரை பார்த்து கொள்ளட்டும்
என்று கூறி இரு மாப்பிள்ளை களிடம் பேச அவர்களும் அதை ஒப்பு கொண்டனர்.
திருமணம் ஆகி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இருவருடைய விருப்பமும் நிறைவேறியது புவனாவிற்கு தன் கணவனின் கம்பனி,அருணா அதில் பங்கு தாரர் ஆகி அவள் விருப்ப படி வியாபாரம் செய்ய அவளுக்கு அதிகாரம் கிடைத்தது.எப்படியோ இருவரது விருப்பும் நிறைவேறியது என்று அருணா புவனா அப்பா மகிழ்ச்சி அடைந்தார்.