சுதந்திர போராட்ட தியாகி
சுதந்திர போராட்ட தியாகி
அருண் விடுமுறைக்கு வந்தவன்,தான் தாத்தைவை பார்த்து நலம் விசாரித்து விட்டு,எப்போதும் போல சுதந்திர போராட்டம் பற்றிய சம்பவங்களை அவரிடம் கேட்டு அறிந்துqரு கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவன்.
அருணுக்கு பதினாறு வயது.அந்த வருடம் தான் நாடு தன்னுடைய எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினத்தை கொண்டாடி முடித்து இருந்தது.
அதற்கு அடுத்த நாளில் வந்த செய்தி தாளில்
அந்த மாகாணத்தின் முதல்வர்,சுதந்திர போராட்ட தியாகிகளை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து,ஒவ்வொருவருக்கும்
பணமுடிப்பும் பரிசாக வழங்கினார் என்ற செய்தியை அருண் படித்து பார்த்தான்.இது நடந்தது சென்னையில்.அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அந்த மரியாதையை செய்ய முதல்வர் ஆணை இட்டு இருந்தார் என்றும் குறிப்பிட பட்டு இருந்தது.
மாகாணத்தில் உள்ள அத்தனை தியாகிகளும்
அந்த நாளில் தவறாது கௌரவிக்க படுவார்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டு இருந்தார்.
அருண் சந்தேக பட்டு செய்தித்தாளில் தன்னுடைய தாத்தாவின் பெயரை தேடி பார்க்க,அவருடைய பெயர் எங்கும் காணப்படவில்லை.
"ஏன் தாத்தா உங்க பெயர் விடுபட்டு போய் விட்டதா உங்களை ஏன் கௌரிவிக்க மறந்தார்கள் "
என்று அருண் தாத்தாவிடம் கேட்க," நானும் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியரிடம் தியாகிகள் ஓய்வூதியம் வேண்டி,மனு கொடுத்து வருகிறேன்.
ஆனால் எந்த பதிலும் இது வரை கிடைக்கவில்லை"என்று சொன்னார்.
இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து அருண் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு வந்த
ஆட்சியர் மாணவர்களுக்கு சுதந்திரம் பற்றி எடுத்துரைத்து,சுதந்திர போராட்ட தியாகிகளை தவறாமல் கௌரவித்து வருகிறோம் என்று சொன்னார்.
அப்போது அந்த கூட்டத்தில் நடுவில் இருந்த அருண் எழுந்து நின்று,"ஐயா ஒரு விண்ணப்பம்" என்றான்.ஆட்சியர் பேசும் போது நடுவில் குறுக்கிட்ட அவனை ஆசிரியர்கள் அதட்ட,
ஆட்சியர் அவனை அடையாளம் கண்டு,அவண்டி மேடைக்கு அழைத்து அவனிடம் விவரம் கேட்டார்.
அவனும் இதுவரை அவனுடைய தாத்தாவுக்கு
தியாகிகள் ஓய்வூதியம் கிடைக்கவில்லை,இது வரை ஒரு முறை கூட அவரை யாரும் கௌரவித்தது கிடையாது என்று சொல்ல,ஆட்சியர்
அவனிடம் அடுத்த நாள் தாத்தாவை அழைத்து கொண்டு நேரில் வந்து சந்திக்கும் படி கூறினார்.
அடுத்த நாள் அருண் தாத்தாவை அழைத்து ககொண்டு,அவர் இது வரை அனுப்பிய விண்ணப்பங்களின் நகலையும் எடுத்துக்கொண்டு ஆட்சியரை சந்திக்க,,அவரும்
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி தாத்தாவிடம் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
ஆட்சியர் சம்பந்த பட்ட அதிகாரிகளை கேட்க,
அவர்களும் ஏதேதோ காரணங்கள் சொல்ல,ஆட்சியர் அவர்களை கடுமையாக எச்சரித்து உடனே பென்ஷன் வழங்க ஏற்ப்பாடு செய்தார்.
அருண் தாத்தாவை துருவி துருவி கேட்க,சம்பந்த பட்ட அலுவலக அதிகாரி தன்னிடம் பணம் எதிர்பார்த்து ஒவ்வொருமுறையும் அவருடைய விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு விட்டார் என்று சொன்னார்.
"தாத்தா ஆட்சியரிடம் நேரில் சந்தித்த போது சொல்லி இருக்கலாமே "என்று கேட்க,அதற்கு தாத்தா,"அப்படி சொன்னால்,ஆட்சியரின் நிர்வாகத்தை குறை சொன்னது போல ஆகி விடும்,
அதனால் ஒவ்வொருமுறையும் ஆட்சியரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் வந்து விட்டேன் "என்று கூறினார்.
அருணுக்கு அதை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.நாடு உண்மையில் சுதந்திரம் பெற்று விட்டதா.அப்படி பெற்று இருந்தால்,ஒவ்வொரு பணிக்கும் கையூட்டு கொடுத்து காரியம் சாதிக்க,சுதந்திரம் வாங்காமலே இருந்து இருக்கலாம் என்று நினைத்து வருத்த பட்டான்.
