STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

பண்ணையார் வீடு

பண்ணையார் வீடு

3 mins
566


பண்ணையார் வீடு


பசுமையான கிராமம்.பார்க்க எழில் கொஞ்சும் வயல் வெளிகள்,தென்னந்தோப்பு.இன்னும் நகரத்தின் தாக்கம் எட்டி பார்க்காத அந்த கிராமம்.ஒரு ஆரம்ப பள்ளி,காலை,மதியம்,சாயங்காலம் மூன்று வேளை வந்து செல்லும் பேருந்துகள்.அங்கு வசிக்கும் பெரும்பாலோனோர் மிராஸ்தார்கள்.

நூற்று கணக்கில் ஏக்கர் உள்ள நிலசுவாந்தார்கள்.


ஆனால் ஏழை,மற்றும் நடுத்தர குடும்பங்கள் உண்டு.பணக்காரர்களுக்கு வேலை செய்ய ஏழை மக்கள் வேண்டும் அல்லவா.

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் ராமு. எங்கு சென்று வேலை தேடுவது என்று தெரியாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது,அவர் வீட்டில் தங்கி உண்டு உறங்கி,அவர் சொல்லும் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.

ஒரு மிராஸ்தார்  தோட்டத்தில் பண்ணை வேலைகள் நிறைய நடக்கும்,அதை மேற்பார்வை செய்ய கேட்டு இருந்தான்.மிறாஸ்தார் இவனுடைய சுறுசுறுப்பை பார்த்து பண்ணையில் ஒரு சூப்பர்வைசர் வேலை கொடுத்து உணவும் செலவிற்கு தேவை படும் பணமும் கொடுத்து வந்தார்.அது ராமுவின் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்க,24மணி நேரம் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தான்.

மிராஸ்தாருக்கு மனைவி கிடையாது,ஒரு வேலைக்கார பெண்,சாப்பாடு செய்து கொடுத்து வீட்டு வேலைகளையும் கவனித்து வந்தாள்.அவள் திருமணம் ஆகாத பெண்.அந்த பெண்ணின் அப்பா அம்மா பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர்.

அந்த பெண் பெரும்பாலான நேரம் பண்ணை வீட்டில் தான் இருப்பாள்.

இரவு தூங்க மட்டும் பெற்றோரின் இருப்பிடத்திற்கு செல்வாள்.


மிராஸ்தார்க்கு குழந்தைகள் கிடையாது.அவருடைய தம்பி மகனை எடுத்து வளர்த்தி வந்தார்.அவன் பெயர் சீனு.

வாலிப வயது,ஊர் சுற்றுவது,குடிப்பது போன்ற பழக்கங்கள் நிறைய உண்டு.

ராமு இருக்கும் போதே,சீனு

அந்த பெண்ணை சீண்டி கொண்டே இருப்பான்.கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது என்று பொழுது போய் கொண்டு இருந்தது.ராமு சீனுவைஉயர்வாக நினைத்து கொண்டு இருக்கும் வேளையில்

சீனு அந்த பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வது அவ்வளவு பிடிக்கவில்லை.சீனுவிடம் பல முறை எடுத்து கூறியும் சீனு  கேட்பதாக இல்லை.எப்படியும் அ

ந்த பெண் வேறு யாரையோ மணம் முடித்து போகும் பெண்.அதை போய் சீண்டி சில்மிஷம் செய்யலாமா,நீ நினைத்தால் வசதியான பெண்ணை விரும்பலாம் அல்லவா என்று சொல்லியும் சீனு கேட்பதாக இல்லை.


நடுவில் சீனு தன் பெரியாப்பாவிடம் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்தார்.பண்ணை நிர்வாகத்தை தன்னிடம் கொடுக்குமாறு கேட்க,அவரும் ஏதோ காரணங்கள் சொல்லி கொண்டு ,

சீனுவை  இன்னும் மேல் படிப்பு படிக்க சொல்ல,சீனும்  மறுத்து விட்டு,பண்ணையில் பொழுதை போக்கி கொண்டும் பக்கத்து ஊருக்கு சென்று,நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதும் ஆக இருந்தான்.


நாட்கள் செல்ல செல்ல சீனுவிர்க்கும் பெரியஅப்பாவிற்கும் இடையே சண்டை வலுத்து கொண்டே இருந்தது.குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.

உறவினர் இருவரிடமும் சமாதானம் பேசியும்  சண்டை நிற்பதாக தெரியவில்லை.


ராமு, அந்த நேரத்தில் வேறு வேலை கிடைக்க பண்ணையில் இருந்து வெளியில் போக வேண்டிய நிலை ஏற்பட்டது.அங்கு பணி புரியும் எல்லோரிடமும் சொல்லி கொண்டு 

வேலைக்கு சேரும் நாளில் அங்கு இருந்து புறப்பட தயார் ஆனான்.,


அந்த வேளையில் சமையல் செய்யும் பெண்ணை பார்த்து சீனிவிடம் பழகியது போதும்,பெரியஅப்பாவிற்கு தெரிந்தால் உனக்கு  தான் பிரச்சினை என்று கூற,அதற்கு அந்த பெண் கூறிய பதில் அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.சீனுவின் பெரியப்பாவும் அந்த பெண்ணிடம் பழகி வந்து உள்ளார்.இதை தெரிந்து கொண்டு தான் சீனு அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டு வந்து உள்ளார்.இதை கேட்ட ராமு ,அந்த பெண்ணிடம் ஏதாவது காரணம் சொல்லி இந்த இடத்தை விட்டு போய் விடும் படி கூறினான்.

மேலும் அது உன் விருப்பம் மேற்கொண்டு சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டாம் என்று கருதி சொன்னேன் என்று கூறி விட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டான்.


பெண்களின் ஏழ்மையை பலகீனமாக பயன் படுத்துவது எவ்வளவு தவறு.ஆனால் பண்ணையார் நிறைய உதவிகள் செய்து உள்ளார்.

அவருடைய பொழுது போக்குற்கு 

பெண்ணை சீண்டுவது பிடிக்கவில்லை,அவரை திருத்த முடியாது,ஆனால் அவர் செய்த தவறை தான் செய்ய கூடாது,வாழ்க்கையில் எந்த பெண்ணையும் ஏமாற்ற கூடாது என்ற முடிவை எடுத்து இன்று வரை காப்பாற்றி வருகிறான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract