anuradha nazeer

Abstract

4.4  

anuradha nazeer

Abstract

காதலுடன்

காதலுடன்

2 mins
1.5K


தியாகம்தான் வாழ்க்கை இது இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம். சூரியன் பூமியின் மின்காந்த அலைகளால் ஈர்க்கப்பட்டு கவரப்பட்டு பூமியை நேசிக்க ஆரம்பிக்கிறான்.அவர்களுக்கும் பூமி மீது காதல் கனிந்து விடுகிறது என்ன காரணம் என்றே தெரியாமல் காதல் வருகிறது. ஏன் என்று எவருக்குமே புரியாத புதிர்தான் காதல்.


சூரியனுக்கும் பூமியின் மேல் காதல். ஆனால் பூமி சூரியனை லட்சியம் பண்ணவே இல்லை. பொதுவாக நம் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒன்றுதானே. விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி தானாகவே வரும். இதுதான் மனித வாழ்க்கையின் லட்சியம். அப்படியே நமது பெண்கள் யாரேனும் பின்னாலே சுற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். ஆனால் அவனோ பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து தன் உண்மையான காதலை எப்படி எல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் வெளிப்படுத்த துடிதுடித்து விடுவான்.


இதுபோல் தான் நம் சூரியனின் சன்னதியில் பல நாட்கள் துரத்தித் துரத்தி உண்மையான காதல் செய்து கொண்டு இருந்தான். அதிகாலையிலேயே உதயமாகி பூமியை ரசிப்பது பூமியை பார்த்து பூமியைப் பார்த்து ஏங்குவது பிறகு பூமி ஏறெடுத்தும் பார்க்காததால் வருத்தமுற்று மாலை அஸ்தமனம் ஆகிவிடுவான். எப்போதும் எப்போது நாம் உதயம் ஆகலாம் என்று இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து காதலி பூமியை நினைத்து துடித்தான்.


மறுபடி காலை உ திப்பது மாலை மறைவது என்று பல வருடங்கள் கண்ணாமூச்சி போல் ஓடிக் கொண்டே இருந்தன. பூமி கடைக்கண் பார்வையை கூட சூரியனில் காட்டவில்லை. இப்படியே நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் பூமிக்கு மனதில் தோன்றியது. இன்னமும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம் . இந்த பூலோக மக்கள் நம்மை எவ்வாறு மாசு படுத்துகிறார்கள். மரத்தையெல்லாம் வெட்டுகிறார்கள்.


எங்கு நோக்கினும் குப்பை கூலங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மக்காத குப்பை. பூமியை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கின்றனர். இந்த மக்கள் என்று பூமி மனம் நொந்தாள்.பெண்ணென்றும் மதிக்கிறார்களா இந்த மா மனிதர்கள்! என்ன கொடுமை செய்கிறார்கள்! நாம் எவ்வளவுதான் தங்குவேன் ஒருமையில் சின்னம் என்று கூறுகிறார்களே தவிர என்னை கொஞ்சம் கூட மதிப்பதே இல்லை.


நதி நீரை எல்லாம் மாசு படுத்துகிறார்கள் அங்கங்கே கழிவுகளையும் ரசாயனங்களையும் தோல் பொருட்களை எல்லாம் கலந்து பூமியை நாசம் செய்கிறார்களே என்று வேதனைப்பட்டது.எவ்வளவுதான் தாங்குவேன். பொறுமையின் சின்னம் பூமாதேவி என்று என்னை போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் என்னை மதிக்க தெரியவில்லையே ?என்ன செய்வேன்?


இவ்வாறு நாமும் சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறோமே! நமக்கென்று யார் இருக்கிறார்கள்? நம்மை இவ்வாறு தீவிரமாக காதலிக்கும் சூரியனை நாமும் திரும்ப காதலித்து பார்த்தால்தான் என்ன? என்று பூமி மனதில் நினைத்தது.


நினைத்ததுதான் தாமதம்! தென்றல் வந்து தாலாட்டு பாடியது. மலர்களெல்லாம் பூமியின் மனதை மகிழ்வித்தது. மழையோசிறுசிறு துகள்களாக பூமியை சிலிர்க்கச் செய்தது. இவ்வாறு பஞ்சபூதங்களும்பூமியை தோழி போல் அலங்கரித்தன. அதனால் வந்தது வசந்தம் மலர்களும் பூத்துக் குலுங்கின பறவைகள் எல்லாம் வீசினஅணில்களும் அங்குமிங்கும் ஓடிக் அளித்தனகாமதேவன் காம பானம் தொடுக்கப்பட்டது பூமியின் மீது வீசப்பட்டது பூமியோ வெட்கத்தினால் தலை குனிந்தாள்சூரியன் தனது கிரணங்களை குறைத்துக் கொண்டான் பலவருட நீங்கள் சூரியனை காக்க வைத்ததால் அவனது சீக்கரம் அவனது வெப்பம் தணிய இன்னும் பல வருடங்கள் ஆகும்அந்த வெப்பத்தினால் பூமிக்கும் சற்று கஷ்டம் தான் மன வருத்தம் தான்.


பறவைகள் எல்லாம் கிச்சுகிச்சு என்ன மங்களவாத்தியம் வாசித்தன. அணில்கள் இங்கும் அங்கும் ஓடி நாதஸ்வரம், மத்தளம் வாசித்தன. மரமும் பூத்துக்குலுங்கி அதன் இதழ்களை பூமியின்மேல் தூவினர்.மலர்கள் எல்லாம்மணம் வீசி மகிழ்வித்தனர்.தென்றலும்பன்னீர் சொரிந்து, பன்னீர் தெளித்து மகிழ்வு ஊட்டியது.பூமிக்கு மகிழ்ச்சி அளித்தது.

வாழ்க பூமியின் காதல்!!!!!!!

வளர்க என்றும் அதன் காதல் சரித்திரம்!!!!!!


இக்கதையை படித்தவர்களும் கேட்டவர்களும் காதலுடன் வாழ்க என்றும்!!!


Rate this content
Log in

Similar tamil story from Abstract