anuradha nazeer

Classics

4.9  

anuradha nazeer

Classics

பாவங்கள் போக்கும் தை அமாவாசை

பாவங்கள் போக்கும் தை அமாவாசை

1 min
1.7K



(31.01.2022)நாளைய தினம்.


தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஏழைகள், இயலாதோருக்கு

தானம் கொடுப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் நீங்கும். அன்னதானம், வஸ்திரதானம் செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.


இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.


ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.


தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். புனித தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம்.


தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும். அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும்.

முன்னோர்களுக்குத் தவறாமல் அமாவாசை தர்ப்பணம்/ திதி கொடுப்பது குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் நடக்கும்.


அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் ஆடை தானமாகக் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும். ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும். காரிய தடை உள்ளவர்கள் காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம்.


மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம். தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும்.


Rate this content
Log in

Similar tamil story from Classics