ஒரு உண்மை.
ஒரு உண்மை.


எனது அப்பா மரணப் படுக்கையில் படுத்திருந்த போது என்னை அழைத்தார்.
ஏதும் கேட்கப் போகிறார் என நினைத்தால் உபதேசம் செய்தார்.
.இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பந்தபாசம் அற்ற நிலையில், நீ உனக்கு என சேர்த்து வைப்பது எல்லாம் பிறர்க்கு தான்
நீ பிறர்க்கு என தருவதெல்லாம் உனக்குத்தான் என்றார்
புரியவில்லையே என்றேன்.
உடனே அவர் புரியும்படியாக விளக்கமாகச் சொன்னார்.
நீ பேங்க் லாக்கரில் வைக்க இருக்கும் அனைத்து தங்கம்
வைரம் வெள்ளி பணம் எல்லாம் யாரோ அனுபவிக்க போகிறார்கள் .
நீ பிறருக்கு செய்யும் சிறு சிறு
உதவிகள், . தானதர்மம் எல்லாம் பின்னால் உனக்குத்தான் புண்ணியமாக வந்து சேரும் என்றார்.. நீ மற்றவர் களுக்கு என்ன செய்தாலும் அதுஉனக்கு மட்டுமே. புண்ணியமாகதிரும்ப வரும். யாரும் அதைப் பெறவும், திருடவும் யாராலும் முடியவே முடியாது. தொண்டு செய் என கூறினார்.
என்ன ஒரு உண்மை..நான்உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன்.
என்ன ஒரு ஞானம். கடவுள் தான் அவர் எங்களுக்கு. அவர் கூறியபடியே கண்ணை மூடினார்.