என் கட்டுரை - 2
என் கட்டுரை - 2
இந்தப் பதிவு சாதாரண வாழ்க்கையிலிருந்து தன்னை மாறுபடுத்திக் காட்டும் அசாதாரணமான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்கு.
எவ்வளவு கவலை, எவ்வளவு அவமானம், எவ்வளவு வேதனை பட்டிருக்கிறாய் மனமே! வானில் பறந்து போட்டி போட நினைக்கும் உன் மனது, கால்களை சங்கிலியால் பூட்டி கீழே போட நினைக்கும் சூழ்நிலைகள். பணக் கஷ்டம் கூட ஒரு பெரிய தடைக்கல்லாக இருந்திருக்கும் உன் இதயம் சொன்ன பாதையை தேர்ந்தெடுத்த வழியில்.
மனது சொல்ற பாதை எப்போதும் சுலபமானதல்ல ரொம்ப கஷ்டமானதாக இருக்கும். இருப்பினும் அது தான் சரியானதாக இருக்கும். சொந்தக்காரன் சொல்லுவான் கனவுலேயே கோட்டை கட்டி வாழுறான்னு. உன்னை உன் கனவுகளை நம்ப மாட்டாங்க. சில பேர் ஏளனம் செய்வாங்க. இன்னும் சில நேரங்களில் உன் சொந்த குடும்பம் கூட உன்னுடைய திறமையை சந்தேகிப்பாங்க. ஒரு கட்டத்தில உனக்கே கூட நம்பிக்கை இல்லாம போகும்.
மனம் தளராதே. முயற்சியிலிருந்து பின் வாங்காதே. யாருக்காகவும் உன் கனவோட மதிப்பைக் குறைச்சிறாதே. "கனவுகள் நிஜமாக காலங்கள் பொறுத்திரு."
உன் கனவை சென்றடையும் பாதை கஷ்டமாக இருக்கலாம். ஆனா அது எளிதாக இருந
்தால் உன்னை போல திறமைசாலிக்கு என்ன மதிப்பு? அதை எல்லாரும் அடையலாமே. உன் திறனை உலகுக்கு காட்ட அது உன்கிட்ட இருந்து எல்லா விதமான முயற்சியும் கேட்கும். உன்னால அது முடியும். உன்னால கனவு காண முடிஞ்சா அந்தக் கனவை நிறைவேற்றவும் உன்னால முடியும். உன்னால மட்டும்தான் முடியும்.
மனது துவண்டு விடாதே. உன் கதையோட நாயகன் நீ. ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும், நாயகன் இறுதியில் ஜெயிப்பான். நீயும் ஜெயிப்பாய். நாளை என்றும் வராது. இன்றே உன் கனவை நோக்கிய பயணம் தொடரு. பட்ட அவமானம், வேதனை, கவலை எல்லாத்தையும் சேர்த்து உன்னோட வலிமையாக மாற்று. அந்த அவமானம் நினைவுக்கு வரும் போதெல்லாம் நான் சாதிச்சே தீரணும்னு சொல்லி எழு. உலகம் அவ்வளவு மோசமானதல்ல. உன்னை விழ வைக்க 100 பேர் நினைச்சா, தூக்கி விட 1000 பேர் வருவாங்க.
உன் கனவை நோக்கி முன்னேறு. அதற்கான பாதையை அதுவே வகுத்து உன்னை சாதிக்க வைக்கும். உன்னை விட சிறந்தவன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. உன்னை நம்பு. உன் கனவை நம்பு. வெற்றி இலக்கு வெகு தூரம் இல்லை நண்பா!! ❤️
"பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!" 🔥