கொரோனாவில் மறைந்துள்ள கணிதம்
கொரோனாவில் மறைந்துள்ள கணிதம்
ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தாராம். அவன் அறிவிலும் வீரத்திலும் மிக சிறந்து விளங்கி ஆட்சி செய்தார்.
ஆட்சி சிறப்பாக சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
அவரது அமைச்சர்கள் உதவியுடன் அந்த பிரச்சனையை தீர்க்க முயன்றார் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
நாட்டிலுள்ள அறிவார்ந்த பல அறிஞர்கள் மூலம் முயற்சித்தார். பலன் இல்லை.
தண்டோரா மூலம் ஊர்மக்களுக்கு அறிவிக்க சொன்னார். " ராஜாவின் பிரச்சனையை தீர்ப்பவருக்கு கேட்கும் சன்மானம் தரப்படும் " என அறிக்கப்பட்டது.
நாட்டிலிருந்து ஒரு விவசாயி வந்தார் . இராஜாவின் பிரச்சனையை கேட்டார். நன்கு யோசித்து அதற்கு சரியான தீர்வையும் வழங்கினார்.
ராஜாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி ஆர்பரித்தபடி - விவசாயியை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் தரப்படும் என்றார்.
அரசே முதலில் ஒரு பெரிய சதுரங்க பலகை வேண்டும் என்றார். அரசனுக்கு எதற்கு என புரியாமல் சரி என கூறி தன்னுடைய மாளிகையில் இருந்த மைதான அளவிற்கு சதுரங்க பலகையை செய்தார்.
இப்போது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என கூறினார்.
" அரசே எனக்கு சதுரங்க பலகையின் முதல் கட்டத்தில் ஒரு தங்க காசு வையுங்கள்" என்றார்.
மன்னர் அவ்வளவுதானே என் ஒரு தங்க காசினை வையுங்கள் என்றார். காசு வைக்கப்பட்டது.
"மன்னா தற்போது அடுத்து வரும் கட்டங்களில் அந்த காசுகளின் இரட்டிப்பு அளவிற்கு காசு வையுங்கள் " என்றார்.
கூடி இருந்த மக்களும் , அரசவை பணியாளர்கள் கிண்டல் செய்து சிரித்தனர். எவ்வளவு அதிஷ்டமான வாய்ப்பு . இவனுக்கு பயன்படுத்த தெரியவில்லையே... இப்படி வாய்ப்பை வீணடிக்கிறானே இவன் என்று...
மன்னனும் அதில் மறைந்துள்ள கணிதம் புரியாமல் அப்படியே ஆகட்டும் என கூறினார்.
காசுகளின் எண்ணிக்கை 1, 2, 4, 8, 16, 32, 64, 128... என கூடி கொண்டே போனது.
முதல் வரிசை முடிவு 256 காசுகளை எட்டியது.
இரண்டாவது வரிசை முடிவு 65536 காசுகளை எட்டியது.
மூன்றாவது வரிசையின் முடிவு 16,777,216 காசுகளை எட்டியது.
அரசவையின் கருவூலம் பெரும்பான்மை தீர்ந்து போனது. நிலமையின் தீவிரத்தை தற்போது உணர முடிந்தது.
நான்காவது வரிசை முடிவு 4294967302 எட்டியது.
ஐந்தவாது
வரிசை முடிவு கணக்கிடவே பல நாட்களானது. அதன் மதிப்பு 1.09951163e12 யை எட்டியது.
தன்னுடைய முழு நாட்டையும் வழங்கினாலும் அதன் மதிப்பை எட்ட முடியாது என உணர்ந்தார்.
மன்னனால் 5 வரிசையே கடக்க முடியவில்லை.
8வது வரிசை இறுதியில் 64 வது கட்டத்தில் நிரப்ப 1.84467441e19 அளவிற்கு காசுகள் உலகையே விற்றாலும் கிடைக்காது என உணர்ந்தார் அரசர்.
விவசாயியின் மதிநுட்பத்தை உணர்ந்து அவரிடம் சரணாகதி அடைந்தார் மன்னர்.
--------------------------------------------------------------
இது தான் கொரோனா பரவல் முறை.
ஏறத்தாழ பரவுதல் 2.6மடங்கு . 2 என கொண்டால் 8 நாளில் 256 பேருக்கு பரவும்.
எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் சுதந்திரமாக பரவுவதாக கொண்டால்...
முதல் 8 நாட்களில் பாதிப்பு சிறிதாகவே தெரியும். பின்னர்
9ம் நாள் 512
10ம் நாள் 1024
11ம் நாள் 2048
12ம் நாள் 4096
13ம் நாள் 8192
14ம் நாள் 16384
....
20 நாள் 1,048,576
25 நாள் 33,554,432.
சரி இந்த கணிதத்தில் ஒரு சங்கிலியை உடைப்போம் . என்ன நிகழும் ?
8வது நாளில் 512 பேர் . இவர்களை தனிமைபடுத்தி முழுவதும் நாமும் தனிமைப்பட்டால் என்ன நிகழும்.
512 --- தனிமைபடுகிறது.
பரவ அடுத்த உடலம் கிடைக்கவில்லை.
பாதியாக பாதிப்பு குறைத்தால் .. வைரஸ் வளர்ச்சி எதிர்மறையாக குறைய துவங்கும் .
256, 128 , 64, 32, 16, 8, 4, 2, 1
என வரிசையை ரிவர்ஸ் செய்ய இயலும்.
இப்போது நாம் செய்ய வேண்டியது ... இதுதான்.
வைரஸ் பரவ அதற்கு தேவையான உடலத்தை வாய்ப்பாக தராமல் தடுப்பது தான்.
தனிமைபடுங்கள் - நோயை கண்டறியுங்கள் - மருத்துவம் எடுங்கள் - சங்கிலியை உடைக்க துணை நில்லுங்கள்.
மக்கள் துணை இருந்தால் இதுவும் சாதாரண நோயாக கடந்து போகும்.
மக்கள் விழிப்பின்றி தொடர்ந்தால் உலக அழிவின் தொடக்க புள்ளி இதுவே.
இது புதிதல்ல 1918 - 1920 ல் ஸ்பேனிஸ் ஃப்ளு நோயால் 1.5 கோடி பாதிப்பும் 40 மில்லியன் உயிரிழப்பும் நடந்துள்ளது. அந்த கட்டத்திலும் தனிமைப்படுதலே தீர்வாக சொல்லப்பட்டது. அதை மக்கள் சரியாக பின்பற்றவில்லை. இதனாலே அவ்வளவு பெரிய இழப்பு.
கட்டுப்படுவோம் ... கட்டுப்படுத்துவோம் ....