இதயத்தின் மூளை
இதயத்தின் மூளை
உணர்ச்சிகளின் போராட்டம்
வணக்கம் 🙏
தாய் மொழி தமிழுக்கு முதல் வணக்கம் .
இத்தொடரின் பெயர் உணர்ச்சிகளின் போராட்டம் !!!
முதலில் உணர்வு என்றால் என்ன ? உணர்ச்சி என்றால் என்ன ? பார்ப்போம் ,
உணர்வு !
உணர்வு என்பது உள்ளுணர்வு அல்லது வெளிஉணர்வாக இருக்கலாம்.
அதாவது உங்களை தொடும் பொழுது அதை நீங்கள் அறிவது, அல்லது சுவையை நாக்கால் தொடும் பொழுது நீங்கள் உணர்வது , அல்லது நல்ல மணத்தை நுகர்வது
என இவை அனைத்தும் உங்களுடைய உணர்வுகள்.
உணர்ச்சி !
உணர்ச்சிகள் மனிதர்க்கு மனிதர் வேறுபடும்.
உணர்ச்சி என்பது நம் புலன்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தில், அதில் நம் மனம் கொள்ளும் விருப்பிலோ அல்லது வெறுப்பிலோ அமையும் உடலின் வெளிப்பாடு.
நவரசம் எனும் காதல், அழுகை, வியப்பு, கோபம், சிரிப்பு, கருணை, வீரம், பயம், சாந்தம் ஆகிய ஒன்பது வகையும் உணர்ச்சிகளின் கூறுகள் என்று சொல்லலாம்.
உணர்ச்சிகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் பாறாங்கல்லுக்கு சமம். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தலாம்.
இதை ஆங்கிலத்தில் எமோஷனல் இன்டலிஜென்ஸ் (Emotional Intelligence) என்று கூறுவார்கள். இதன் தமிழாக்கம் "உணர்ச்சி நுண்ணறிவு" ..
உங்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் அழகாக கையாண்டால் எந்த நிலைமையிலும் வெல்ல முடியும் !
அது உங்கள் கையில் தான் உள்ளது !
அது சரி !!!
மனித மனம் ஏன் நொடியில் மாறுகிறது.
ஒரு நொடி சரி என்கிறது, மறு நொடி தவறு என்கிறது ஏன்? என்று நீங்கள் சிந்தனை செய்து இருப்பிர்கள்.
நான் நினைக்கிறேன் 🤔
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று படித்து இருக்கிறோம் அல்லவா? (அது சரியா, தவறா என்ற விவாதத்துக்கு நான் போகவில்லை).
குரங்கின் சுபாவம், நொடிக்கு நொடி (கேள்விக்கு தோதாக இருக்கிறது என்று சிந்திங்கள் ஆராய்ச்சி வேண்டாம் ) ஓரிடத்தில் சும்மா இருக்காமல் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
எனவே, மனிதனும் தனது பூர்வ ஜென்ம பந்தத்தை மறக்காமல் இருப்பதனால் தான், செயலில் காட்ட முடியாததை, தன் மனதில் (அல்லது தனது எண்ணங்களில்) காட்டுகிறான் என்று எண்ணுகிறேன்.
இந்த உணர்வுகள், உணர்ச்சிகள், எண்ணங்கள், என இவைகளின் செயல்திறன்யை நம் உடலில் உள்ள மூளை மற்றும் இதயம் தான் கட்டுப்படுத்துகிறது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று .
இதயத்தின் மூளை ♥️🧠
இதயத்தில் ஓர் மூலை என்று தவறாக சிந்தனை செய்ய வேண்டாம் !!
நம்முடைய இதயப் பகுதியில் ஓர் மூளை இருந்தால் எப்படி இருக்கும் ??
( சற்று சிறிய ஓர் கற்பனை தான் )
நாம் அனைவரின் உடலில் உள்ள அனைத்து பாகங்களை விட இதயம் மற்றும் மூளை இந்த இரண்டு பாகங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் ? ஏன் ?
என்றாவது சிந்தனை செய்தது உண்டா ??
அப்படி நீங்கள் சிந்தனை செய்தால் நீங்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் வருகிர்கள் என்று அர்த்தம்.
ஒரு சில சமயங்களில் நம் அனைவரின் வாழ்க்கையிலும் இந்த தருணத்தை கடந்த வந்திருப்போம்,
இதயம் சொல்லுவதை கேட்கலாமா ???
மூளை சொல்லுவதை கேட்கலாமா ???என்ன சரிதானா !!!
அப்பொழுது அந்த தருணத்திறக்கு ஏற்றவாறு முடிவு எடுத்திருப்போம்.
நம் பிறப்பின் போது இந்த மூளை மற்றும் இதயம் எப்படி உருவம் பெறுகிறது என்று சற்று பார்ப்போம் !!
கருவுற்றிருப்பது என்பதை அறியும் முன்னரே மூளை வளர்ச்சி தொடங்கிவிடும். அதாவது மாதவிடாய் தள்ளிப்போவதை அறிந்து கொள்ள ஒரு கிழமையாவது தேவைப்படும்.
அப்பொழுது கருவுக்கு மூன்று வாரங்களாக இருக்கும்.
முதலில் உருவாகும் உறுப்பு மூளை. அதாவது தலை.
குழந்தை என்றாலே எல்லாருக்கும் பிரியம் . சின்னஞ்சிறு குழந்தையின் வளர்ச்சியைப் பார்ப்பது அதைப் பற்றி படிப்பது இவை அனைத்தும் பிரமிப்பாய் இருக்கும்.
அதை சிறிதளவு இங்கே பார்ப்போம் !
கருவில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சியானது ஆரம்பத்தில் இருந்தே சிறிது சிறிதாக தொடங்கும். மூளையின் வளர்ச்சியில் நரம்பு மண்டலம் பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது.
முதல் நான்கு வாரங்களில்,
நரம்பியல் திசுக்கள் ஒன்றாக இணைந்து, நரம்பியல் தட்டு அமைத்து, அதிலிருந்து பெருமூளை, சிறுமூளை மற்றும் தண்டுவடம் என்ற பல பாகங்களாக பிரிகிறது.
நான்கு முதல் எட்டு வாரங்களில்,
கருவானது வேகமாக வளர்ச்சியடைந்து, முகம் மனிதனை போன்று மாற்றமடைந்து, பக்கவாட்டில் இருக்கும் கண் சரியான இடத்தில் அமையப்பெற்று, பெருமூளை புரணியின் இரண்டு அரைக்கோளங்கள் உருவாகும்.
பெருமூளையே நினைவுகள், எண்ணங்கள் போன்ற சிந்திக்கும் திறனை செயல்படுத்துகிறது.
சிறுமூளை வளர்ச்சியடைந்து இதயத்துடிப்பு, சுவாசம், தசை இயக்கம் முதலானவைகளை செய்யும்.
பத்தாவது வாரத்தில்,
கருவின் மூளையானது 2,50,000 நியூரான்களை ஒரு நிமிடத்திற்கு உற்பத்தி செய்யும். இந்த நியூரான்கள் மூலம் தகவல் பரிமாற்றம் விரைவாக நடைபெறுகிறது.
14-ம் வாரத்தில் குழந்தை சுவாசித்தலை அறிந்து கொள்ளும் திறனை பெறுகிறது.
22-ம் வாரத்தில் கருவானது வெவ்வேறான ஒலிகளை வேறுபடுத்தி உணரும்.
24-ம் வாரத்தில் நரம்பு மண்டலம் முழுவதுமாக வளர்ச்சியடைந்து, கருவானது கேட்கும் மற்றும் பார்வை திறனை பெறும்.
26- ம் வாரத்தில், கருவின் மூளையில் உள்ள திசுக்கள் மென்மையாக இருக்கும் மூளையை மேடு பள்ளங்கள் போன்றதொரு அமைப்பினை உருவாக்கும். இது நரம்பிழைகள் மூலம் தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இச்சமயத்தில் கருவின் மூளை கனவும் காணும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
28-40 வாரங்களில் மூளை மற்றும் நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெறும்.
எனவே, கருவில் இருக்கும் சிசுவானது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வகையான சிந்திக்கும் திறனை பெறுகிறது.
சரி நம் கதைக்கு வருவோம்,
இப்படி பல போரட்டங்களை தாண்டி இந்த இதயம் மற்றும் மூளை வளர்ச்சி பெற்று ஓர் மனிதன் இந்த பூமியில் வாழ உதவி செய்கிறது.
இதயம் மற்றும் மூளை :-
இரண்டும் வெவ்வேறு துறை .
இரண்டும் எதிர் எதிர் திசையில் பயணம் செய்ய கூடியவை.
இரண்டுமே ஓயாது உழைப்பவை.
இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஆதாராமாக இருக்கும்போதும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்த முடியாதவை, ஆனாலும் ஒன்று இறந்தால் மற்றொன்றும் இறக்கும்.
இந்த இரண்டில் எது ஓய்வின்றி உழைக்கிறதோ அதுவே பலம் வாய்ந்தது !!!
செயல் - உணர்வுகள் - இதயம்.
எதிர்வினை - உணர்ச்சி - மனம்.
உங்கள் இதயங்கள் சொல்வதைக் கேளுங்கள், இதயமும் மனமும் ஒன்றிணைந்து செயல்படும்போது படைப்பாற்றல் என்று அழைக்கப்படுகிறது.
மனம் அதன் சுபாவம் எப்பொழுதும் சஞ்சலம் ! இதுவா? அதுவா ? பயமா ? தைரியமா ? கோபமா ? ஏக்கமா ? வேதனையா ? இப்படி உணர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும் ??
மூளை (மைண்ட் ) கூறுகிறது, வாழ்க்கையை பார்த்து
நகர்த்து போ அது முடிந்துவிட்டது.
இதயம் (ஹார்ட் )கூறுகிறது,
வாழ்க்கையை பார்த்து பிடி, விட்டு விடாதே காத்திரு இன்னும் ஒரு முறை முயற்சி செய்யலாம்.
விடமுயற்சி விஸ்வரூப வெற்றி.
உணர்வை உணருங்கள், உணர்ச்சியாக மாறாதீர்கள்.
உங்கள் கோபத்தை விளக்குங்கள், அதற்கு எதிர்வினையாற்றவோ அல்லது வெளிப்படுத்தவோ வேண்டாம், வாதங்களுக்கு பதிலாக
தீர்வுகளுக்கான கதவைத் திறக்கவும் அதுவே சிறந்த ஒன்று.
மனத்தில் தோன்றிய அனைத்தையும் பேசாதே !
ஒரு கவனக்குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும் !
ஒரு கடுமையான வார்த்தை அன்பை முறிக்கும் !
ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும் !
மற்றவர்களை அவமானப்படுத்தி இன்பம் கண்டால் அதுவும் ஒரு மன நோய் தான் மறவாதீர்கள் .
ஓர் சிறு உதாரணம் :-
இதயம் என்பது வீணை என்றால் அதிலிருந்து எழும் இசை மூளை என்று கொள்ளலாம் . வீணையில் ஏற்படும் கோளாறு அதன் இசையைப் பாதிப்பதைப் போல இதயத்தில் ஏற்படும் கோளாறு மனிதனின் சிந்தனைகளையும் , செயல்களையும் பாதிக்கும் .
மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அறிவு சொல்வதைக் கேட்டால் எண்ணம் போல நடைமுறை வாழ்க்கையை வாழலாம்.
மனது சொல்வதைக் கேட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
மூளை சொல்வதைக் கேட்டு மனம் சொன்ன பாதையில் சென்றால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் பெரியோர்.
இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.
மனம் உடைந்து போயிற்று என பலர் கூற நாம் கேட்டு இருப்போம்
உதாரணமாக
சிறு குழந்தைகளிடம் கேட்டால் விளையாட்டு பொருட்கள் வாங்கி தரவில்லை என்றும் !
இளம் வயதில் இருப்பவர்கள்
எதிர் கால வாழ்க்கையை கண்டும் !
நடுத்தர வயதினர் வாழ்க்கை ஏமாற்றத்தை கண்டும் !
முதியவர்கள் பலர் பெற்ற பிள்ளை சரிவர பாதுகாத்து கொள்ளாததால் என
வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும்
ஒரு முறையாவது நமது மனம் உடைந்து போகிருக்கும்.
மனம் உடையும் தருணத்தில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
இதை விட நல்லது ஒன்று நம் வாழ்வில் வரும் என்று காத்திருக்க பழகுங்கள்.
சில நேரங்களில் சில பிரிவினைகள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில கோபங்கள்
சில நேரங்களில் சில மன கஷ்டங்கள்
சில நேரங்களில் சில ஏற்றத்தாழ்வுகள்
சில நேரங்களில் சில குழப்பங்கள்
சில நேரங்களில் சில எதிர்பார்ப்புகள்
என பல….
இவைகள் அனைத்தையும் காலப்போக்கில் மாறும்.
ஆனால்,
நடைமுறை வாழ்க்கையில்
கால மாற்றத்தை மூளை ஏற்கும் !
இதயம் ஏற்காது !
யார் உங்களை காயப்படுத்தினாலும் நீங்களாக உங்களை சரிப்படுத்துங்கள்
யார் உங்களை தள்ளிவிட்டாலும் நீங்களாக நிமிர்ந்து நில்லுங்கள்
யார் உங்களை ஏறி மிதித்தாலும் நீங்களாக மீண்டு வாருங்கள்
யார் உங்களுக்கு கண்ணீர் தந்தாலும் நீங்களாக துடைத்து விடுங்கள்
யார் உங்களை அவமதித்தாலும் நீங்களே மறந்து விடுங்கள்
யார் உங்களை வெறுத்தாலும் ஒதுக்கினாலும் எவருமே உங்களுக்கு இல்லை என்றாலும்
மனம் உடைந்து விடாதீர்கள்.
வாழ்க்கையை மனதார ஏற்று மகிழ்ச்சியுடன் வாழ தொடங்கி விடுங்கள்.
எதுமே இல்லையென்றால் பிடித்த மாதிரி வாழலாம்.
ஆனால் இருந்ததை இழந்து விட்டால் நம்பிக்கை கை நழுவிப் போனால்
நிம்மதியாக வாழ முடியாது.
மனதால் எவ்வளவு தான் பலமாக இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டாலும் மறந்து விடாதீர்கள்
"அன்பால் அதை உடைக்க முடியும்"
மூளை சொல்வதை கேட்பது தான் சிறந்தது,
இதயம்உணர்ச்சி வசப்பட்டு முடுவு எடுக்கும். ஆனால் மூளை அனைத்தையும் யோசித்து தான் முடிவு எடுக்கும்.
யோசிக்காமல் செய்த சிறிய செயல் தான் பின்னர் பெரிய பிரச்சினை ஏற்படுத்தும்.
"முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் சிந்தியுங்கள் , ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்க கூடாது"
என்று அடால்ப் ஹிட்லர் கூறியதை நினைவில் வைத்து செயல்பாடுங்கள்.
""எண்ணம் போல் வாழ்க்கை ""
""" நல்லதையே சிந்தனை செய்யுங்கள்
நன்மை உண்டாகும்
நல்லதையே விதைங்கள்
நற்பயனை அறுவடை செய்வீர்கள்
மனதார நன்மை எண்ணுங்கள்
மன மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள்
உங்கள் முகம் மலர் போல் மலரும் """
சக மனிதனை மனிதனாக நேசிக்கும்போது மனம் மனிதனிடம் இருக்கிறது சக உயிர்களை உணர்கின்றபோது அது உயிரப்போடு உலவுகிறது.
எந்தவொரு சம்பவத்தையும், தெளிவான அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். பிறகு தேவைப்பட்டால் உணர்வு மூலம் அணுகலாம்.
எடுத்தவுடனே உணர்வு மூலம் அணுகுவதால்தான், உணர்வு தாறுமாறாகி,நம் மனஉறுதியைப் பலவீனமாக்குகிறது.
அடுத்து, எந்த ஒரு நிகழ்வை மேற்கொள்ளும்போதும், வெற்றியோ, தோல்வியோ,எது கிடைத்தாலும்,
அதிலிருந்து சில அனுபவங்களைக் கற்று, பின்பற்ற வேண்டும். இவை நம் அறிவைப் பரந்துபட்ட தன்மையும், பக்குவமும் உடையதாக மாற்றும். இதனால் மனஉறுதி,மனத் தெளிவு எளிதில் வசப்படும்.
சுக,துக்க நிகழ்வுகளில் பங்கேற்று, அவற்றுக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இயல்பாக இருக்க முயல வேண்டும். இதனால் இன்ப−துன்ப உணர்வுகளுக்கு, மனம் எளிதில் வசப்படாத நிலை கைகூடும்.
அதனால் தான் பலர் நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசை படுகிறாயோ அது வாகவே ஆகிறாய் என்கிறார்கள்.
உங்கள் மூளை சிந்திக்க உபயோகமான தகவல்களை தேடி கொடுங்கள். பயனற்ற சிந்தனையால் அதை மலடாக்கி விடாதீர்கள்.
பூமியில் கிடப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே…
இந்த உணர்ச்சி நுண்ணறிவு உடையவர்கள், தங்களது மற்றும் பிறரது உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.
தங்களது உணர்ச்சிகளை நன்கு கட்டுப்படுத்தவும் தெரிந்தவர்கள்.
இந்த அறிவு மூலம், சூழ்நிலைக்கேற்ப, சரியாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் கற்றுக் கொண்டவர்கள். மற்றும் தங்களது குறிக்கோள்களை நிறைவேற்ற வல்லவர்கள்.
(குறிப்பு :- நாம் இறந்த பிறகும் நம் உறுப்புகள் இவ்வுலகில் வாழ வேண்டும் எனில் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் )
நன்றி