அன்பின் வழி
அன்பின் வழி


வணக்கம் 🙏
தாய் மொழி தமிழுக்கு முதல் வணக்கம் .
இத்தொடரின் பெயர் தண்டவாளத்தின் வலி.
தொடர் வண்டி (Train), ரயில் (Rail) இவற்றில் ரயில் என்பது தண்டவாளத்தைக் குறிக்கும் சொல். நம்மில் பலரும் ரயில் வருகிறது என்று கூறுவது ஏன்? ரயில் நிலையம் என அழைப்பது சரியா?
ரயில் என்ற சொல் புகைவண்டி/தொடர் வண்டி என்றாகி விட்டது.
ஆங்கிலத்தில் ரயில் என்றால் தண்டவாளம் தான். ரயில் வண்டி என்று முதலில் வழக்கத்துக்கு வந்து காலப் போக்கில் ரயில் என்றால் புகை வண்டி என்றாகி இருக்கலாம் தமிழ் நாட்டில் தொடர் வண்டி என்று பயன்படுத்துவதே இல்லை. ஒரு வேளை மக்கள் தொலைக்காட்சி செய்தியில் சொல்லலாம்.
அது சரி இப்போது நம் கதையை பார்க்கலாம் !
பயணிப்பது தான் வாழ்க்கை.
எவ்வாறு பயணிப்பது?
நடந்தா, மிதிவண்டியிலா, இருசக்கர வண்டியிலா, மகிழுந்திலா, பேருந்திலா, தொடர்வண்டியிலா, நீர்வழிக் கப்பலிலா, வான்வெளிக் கப்பலிலா, மகிழுந்து,
பேருந்து எனில் சாதாரணமானதா அல்லது சொகுசா ?
தொடர்வண்டி எனில் இரண்டாம் வகுப்பா, முதல் வகுப்பா ?
கப்பல் எனில் சிக்கன வகுப்பா, சொகுசு வகுப்பா ?
இவற்றில்தான் வேறுபாடுகள், முயற்சிகள் அடைதல், திருப்தி, நிம்மதி, இன்னமும் வேண்டும் என்னும் பேராசை இவைகள்!
நம் அனைவரின் எதிர்பார்ப்பு அதிகம் !
ஒரு சிறு கதை
ஒரு படகில் நெருங்கிய 5 நண்பர்கள் பயணம் செய்து கொண்டு இருந்தனர். ஆற்றின் நடுவே படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது .யாராவது ஒருவர் படகில் இருந்து குதிக்க வேண்டும். இல்லையென்றால் படகு மூழ்கி விடும்.
நீங்கள் அதில் இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் .
ஒருவரை குதிக்க சொல்லுவீர்களா?
இல்லை தள்ளி விட்டு விடுவீர்களா?
நண்பர்கள் ஆயிற்றே?
இல்லை நீங்கள் குதித்து நண்பனுக்காக தியாகம் செய்வீர்களா?
அந்த 5 பேரும் என்ன செய்தார்கள் தெரியுமா?
முதலில் ஒருவர் படகில் இருந்து குதித்தார்.மற்றவர்கள் அவரின் கையை பிடித்து கொண்டனர்.சிறிது தூரம் சென்றதும் இன்னொருவர் குதித்தார்.முதலில் இரங்கியவர் படகில் ஏறி கொண்டார்.இவரின் கைகளை பிடித்து கொண்டே படகு சென்றது.
இது போல் கரை வரும் வரை ஒவ்வொருவரும் மாறி மாறி இறங்கி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
நீதி
யாரையும் நம் வாழ்கையில் வேண்டாமென்று நினைத்து விட கூடாது.ஏன் என்றால் யார் எப்போது நமக்கு உதவி செய்பவர் என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் மாறு படும்.
எந்த ஒரு முடிவும் சுயநலமாக எடுக்காமல் நம்மை சுற்றி உள்ளவரையும் நினைத்து பார்க்க வேண்டும்.
விட்டு கொடுத்து வாழுங்கள்.(ஆனால் ஏமார்ந்து போகாதீர்கள்)அப்போது தான் வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியான கரையில் கொண்டு வந்து சேர்க்கும்.
தாமரை இலையில் நீர் பட்டும் படாமல் இருப்பது போல் அன்பை அளவாக வையுங்கள்.எவ்வளவு தான் நேசித்தாலும் ஒரு நாள் அவர்களை பிரியதானே வேண்டும்.
வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி போல ரசிப்பதர்க்குள் பறந்து விடும்.
அதனால் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.
இழந்ததை நினைத்து
இருப்பதை விட்டு விடாமல் உள்ளதை கொண்டு நிம்மதியாய் வாழுங்கள்.
உங்களுக்கு உங்கள் வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ???
மனதை அமைதிப்படுத்திவிட்டு ஒரு பயணம் செல்லுங்கள்.
ஒரு ரயில் பயணம் ஒரே நாளில் போய் திரும்ப வருவது போல் இருக்கட்டும்.
மனதில் உள்ள எல்லாம் ஒரு ஓரமாய் ஒதுக்கி விட்டு பயணம் செய்யுங்கள்.
அங்கு உள்ள
மனிதர்களை கவனிக்க ஆரம்பியுங்கள்.
கையேந்தி பிச்சை கேட்கும் குழந்தை முதல், புதிதாய் வெளியான ஐஃபோன் பயனாளி வரை உங்கள் முன் தென்படுவார்கள்.
அப்போது
உங்கள் வாழ்கையில் எந்த இடத்தில் நீங்கள் உள்ளீர்கள் !
இருப்பவை என்ன ?
இல்லாதவை என்ன ?.
எது அத்தியாவசியம் ? என புரிய ஆரம்பிக்கும்.
எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் !
எவ்வளவு பின்தங்கியுள்ளீர்கள் !
இவை எல்லாம் வாழ்க்கை என்பது என்ன என புது பரிமாணம் கொடுக்கும்.
அப்போது மறுமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் !!!
எதற்கு வாழவேண்டும் என்று
பதில் தென்படலாம் ..!
ரயில் பயணம் ஒரு உதாரணம்
ஏழை மக்கள் சாதாரண டிக்கட் வாங்கி விட்டு நடைபாதையில் பேப்பரை விரித்து படுத்து தூங்கி விடுவார்.
நடுத்தர மகாஜனம்
அதிக பணம் கொடுத்து படுக்கை வசதி டிக்கட் எடுத்தால் வீண்செலவு என்ற நினைப்பு மேலோங்கும்
தரையில் படுக்க கெளரவம் இடம் கொடாது.
சாதா டிக்கட் எடுத்து சீட்டில் உட்கார்ந்தபடியே வசதியாக தூங்கவும் முடியாமல், விடிய விடிய அரைகுறை தூக்கத்துடன் பயணம் செய்வார்.
ரயில் பயணம் என்பது விமானமோ அல்லது பேருந்து காட்டிலும் குறிப்பிடத்தகுந்த நம்பக தன்மை கொண்டது.
பேருந்து, ஆங்காங்கே பழுது அடையலாம்.
விமானம், நடு வானில் நம் உயிருக்கு உலை வைக்கும் வண்ணம் அமையலாம்..
ரயிலில் பயணம் செய்யும் போது உடல் அலுப்பு அவ்வுளோவாக இருக்காது.
அது மட்டுமல்ல, சாலையாக இருந்தால் வளைந்தும் நெளிந்தும் செல்லும். ரயில் பாதையோ, நேராகவும் சீராகவும் அமைந்திருக்கும். இந்த காரணங்களால் தான் ரயில் பயணம் மிக நம்பகமான பயணமாக இருக்கிறது.
வந்தவழி அறியலையே
போரவழி புரியலையே
எந்த வழி போனாலும்
நம் இலக்கு தெரியலியே
வாழ்வே ஒரு ரயில் பயணம் தான்
அதில் நிறைய நிறுத்தங்கள்
நிறைய வழித்தடம் மாற்றங்கள்
அனைத்தையும்
ரசித்துக் கொண்டே
பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இலக்குகள் இல்லாத வாழ்க்கை , எங்கே போகிறது என்று தெரியாத ஒரு ரயில் வண்டி பயணம் போல ஆகிவிடும் ! ( அருமையான பயணமாக அமைந்தாலும் இலக்கு தெரியாமல் போனால் அர்த்தமே இல்லையே !)
முடிந்த வரை ஓர் ஆண்டுக்கான இலக்காவது நம்மிடையே காட்டாயம் இருக்க வேண்டும் !
தொடர்வண்டியின் இறுதியில் எக்ஸ் (X) அடையாளம் இருப்பது ஏன்?
கடைசி பெட்டி என்பதைக் குறிக்க.
ஒவ்வொரு நிலையத்தைக் கடக்கும்போதும், நிலைய அதிகாரி இதை கவனிப்பார். ஒருவேளை அவர் பார்க்கும் கடைசி பெட்டியில் X இல்லையென்றால், நடுவில் பெட்டிகள் எங்கோ கழண்டுவிட்டது எனப் புரிந்து கொள்வார். உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பார்.
இப்படி நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு எக்ஸ் போட்டு விட்ட வேண்டும் அதாவது முற்றுப்புள்ளி (.) வைக்க வேண்டும்.
பிறகு நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
தொடர்வண்டி கூறும் சிறு வார்த்தைகள் !!!
குறைவான பணத்தில்
நிறைந்த பயணத்தில்
உங்கள் அனைவரையும் இயற்கையை ரசிக்க வைக்கிறேன் !
உங்களுக்காக ஓடி உழைக்கிறேன் .
நான் உங்கள் நண்பன் !
என் முன் விழுந்து ஏன் உயிரை மாய்த்து கொள்கிறீர்கள் !
விரைந்து வருகிறேன் விபத்தில்லா பயணம் அமைவதற்கு உதவுங்கள் நண்பர்களே !
பல தோல்வியை சந்தித்து தான் பலர் வெற்றியை அடைந்திருக்கிறார்கள் ! நண்பர்களே வாழ்வது ஒருமுறை தான் அந்த வாழ்க்கையை நன்றாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
மாறக்கூடியதை மாற்றுங்கள் ,
மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள் . ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடம் இருந்து நீக்கிவிடுங்கள் .
கடந்து செல்ல வேண்டியவற்றைச் சுமந்து நின்று , வாழ்க்கையைப் பாரமாக்காதீர்கள்.
பயணங்கள் என்றும் நம்மில் பயணிப்பது உண்டு அது இன்பம் என்பதும் துன்பம் என்பதும் அவரவர் மனதிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று ..!
தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பயன்படுத்த காரணங்கள் ஏன் என்று என்றாவது நீங்கள் சிந்தனை செய்தது உண்டா ??
தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் அது வேகமாகவும் செல்லும். அப்போது அழுத்தம் அதிகம் இருப்பதால், தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் போடப்படுகின்றன.
மற்றொரு காரணம்,
பொதுவாக வெப்பத்தினாலும், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் இரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே தண்டவாளங்களில் கற்கள் உள்ளன.
ஜல்லிக் கற்களை மேல் எழுப்பி தண்டவாளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான் மற்றும் களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் தண்டவாளங்களில் போடப்படுகின்றன.
எனக்கு தெரிந்து நம் அனைவரின் வாழ்க்கை என்பது ரயில் தண்டவாளம் மாறி கல்லும் மண்ணும் தாறு மாறக கிடக்கும்
(சில இன்பங்கள், துன்பங்கள் போல் )
ஆனால் அதை எல்லாம் நாம் பொருட்படுத்தாமல் ரயில் மாறி சல்லுன்னு ஒட்டிட்டே போய்டணும் வாழக்கையை.
எனக்குத் தெரிந்து ஒன்றே ஒன்று தான்! சக மனிதர்களின் உறவு, நட்பு தண்டவாளங்கள் போல் தான். சேர்ந்தே செல்லலாம், ஆனால் எப்போதுமே கடைசி வரை இணைய முடியாது. அவரவர் பாதை தனி!
விருப்பங்கள் இருந்தும் சேர முடியாமல் தவிக்கும் இரு தண்டவாளம் போல்தான் நம்மில் இருக்கும் சில உறவுகள்
ஆனால்
நம்மில் பலர் அன்பு என்னும் இரயில் மட்டுமே தினமும் பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.
இரயில் தண்டவாளங்கள் போல அருகில் இருந்தாலும் இணைய வழியின்றி
ஒரே முகத்தில் இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்த்து கொள்ள வழியற்ற விழிகள் போல்
வாழ்க்கை தரும் வலிகள் பலவிதங்களில்
சேரவும் முடியாது
பிரியவும் முடியாது ஆனால்
ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல....,
சிலரின் அன்பு தான் ....!
கடந்த கால நினைவுகளையும்
எதிர் கால கனவுகளையும்
சுமந்து கொண்டு நிகழ்காலம் மறந்து பயணிக்கும் இத்தனிமைப் பயணம் எல்லோர் வாழ்விலும் மறுக்க (மறக்க) முடியா ஒன்று
ரயிலின் தொடர்ச்சியும், அதன் ஓட்டமும் நமக்கிருந்தால்,
வெற்றியின் இலக்கு
வெகு தூரமில்லை....!!!