Vinotha GandhiRajan

Inspirational others

3.7  

Vinotha GandhiRajan

Inspirational others

வாழ்க்கை கதை

வாழ்க்கை கதை

2 mins
2.2Kவணக்கம் 🙏

தாய் மொழி தமிழுக்கு முதல் வணக்கம்.

இக்கதையின்‌ பெயர் வாழ்க்கை கதை !!!

யார் வாழ்க்கை கதை ? ‌என்று சிந்தனை செய்ய தேவையில்லை.

ஏன் என்றால் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஓர் வாழ்க்கை கதை இருக்கும். ஒவ்வொருவரின் வாழ்க்கை வினோதமானவை ! வித்தியாசமானவை !

இக்கதை படிக்கும் உங்களுக்கு கூட ஓர் வாழ்க்கை கதை இருக்கும் ! நீங்கள் எப்பொழுதாவது வாழ்க்கை என்றால் என்ன ? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று சிந்தித்தது உண்டா?

இப் பிரபஞ்சத்தின் நம் பிறந்ததின் நோக்கம் என்ன ? ஏன்?

சற்று சிந்தனை செய்தால் இப்படி ‌பல கேள்விகள் ‌நமக்குள் தோன்றும்!!!

வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைத்தையும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.

நாம் அதில் கற்றதை விட அந்த வாழ்க்கை நமக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் அதிகம்.

வாழ்க்கை என்பது இரண்டும் மாறி மாறி வருபவை:

இன்பம் - துன்பம்

இனிப்பு- கசப்பு

இலாபம்- நஷ்டம்

வரவு- செலவு

பிறப்பு - இறப்பு

இப்படி இரண்டு கலவைகளை கொண்டதுதான் வாழ்க்கை.

அன்பு❤️ - அம்மா, அப்பா, உடன்பிறப்புகள், நண்பர்கள், உற்றார், உறவினர், குழந்தைகள், பெரியோர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்கள்,பறவைகள், விலங்குகள்,சிறு சிறு உயிரினங்கள் என‌ இவ்வுலகில் இருக்கும.

அனைத்து உயிர்களின் மேலும் நாம் அன்பு செலுத்துகிறோம்.

அன்பு ‌மட்டும் இன்றி நம்பிக்கை, உதவி, நேசம், பாதுகாப்பு, அறிவு,பாசம், காதல், என‌ பல....

பின் ஏன் இந்த கோபம்,வெறி, பழிவாங்கும் குணம், பொறாமை,தீய செயல்கள் ????

உங்கள் மனது எதை உட்கொள்கின்றதோ அது தான் உங்களை கட்டுப்படுத்தும் (what consumes your mind control your life). நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ, அதை தான் நிச்சயமாக அறுவடை செய்வீர்கள் என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கை பயணத்தை பயணம் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையில் உளவியலாக சில ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அதை அனைத்தும் மன வலிமையுடனும் உடல் தைரியமாகவும் கொண்டு எதிர் கொள்ள வேண்டும். வேண்டும்.

தோல்வியை கண்டு தலைக் குனிவதைவிட வெற்றி என்னும் நாளை எதிர் கொண்டு தலை நிமிர்ந்து ஓட வேண்டும்.

உன் செயலில் கடுமையான உழைப்பும் முயற்சிகளும் இருந்தால் இந்த உலகம் உன் கால் அடியில்.

இந்த வாழ்க்கையில் நாம் கற்ற அனைத்தையும் மனதார கற்க வேண்டும்.

இன்பம் துன்பம் இரண்டையும் மனதளவில் ஏற்க தயாராக இருந்தால் போதும் இவ்வுலகம் வாழ்வது மிக எளிமை.

உண்மைக்கு ‌உரியவனாய் நீ இரு !

உன்னை உலகம் உன்னதமாக பார்க்கும் !

அதனால் வரும் சோதனைகள் நீ தாங்கி கொள்ள வேண்டும்.

உண்மையை உரக்கச் சொல்லுங்கள்!

உண்மை பேச சிறு காலதாமதம் ஆகும்.

காத்திருந்தால் தான் கடல் அளவு கொண்ட இந்த உலகில் பயணம் செய்ய முடியும்.

உன் முதுகிற்கு பின் பேசுபவர்களிடம் உன் செவியை சாய்காதே !

உன்‌ முகம் பார்த்து பேசுபவர்களிடம் தலை நிமிர்ந்து பதில் சொல் !

தலைகணம் தேவையில்லை !

பெரியோர்களை தலை வணங்கி நடந்தால் போதும் !

மனசாட்சிக்கு உண்மையாக ‌இரு !

பிறர் மனம் வருந்தும் படி நடக்காதே !

இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர் பலர்!

சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.

சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.

சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.

சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது.

மகிழ்ச்சியான தருணங்களில் ஏழைகளுக்கு உன் கரத்தினால் உதவி செய் !

துயரமான சமயத்தில் மழலையின் அழகை ரசிக்க கற்றுக்கொள்ள !

அனைத்து இடங்களிலும் தன்னம்பிக்கை என்ற உடலுடன் , புன்னகை என்ற உயிருடன் சேர்ந்தே ‌பயணம் ‌செய் !

ஆயிரம் ,கோடி என‌ பல பேர் நம்மை ஏமாற்றினாலும் பிறரை ஏமாற்றாத எண்ணம் நமக்கு வராதவரை நாம் கடவுளின் படைப்பில் உன்னதமானவர்கள்தாம் !!!!

இந்த உலகில் எதுவும் ‌நிரந்திரம் இல்லை

அது நீ அனுபவிக்கும் சந்தோஷமாக இருந்தாலும் சரி !!!

நீ அனுபவிக்கும் கஷ்டமாக இருந்தாலும் சரி !!!

இதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே என்று கடந்து சென்று விடு !

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல…

வாழ்கின்ற நாட்களில் முடிந்தளவு பிறர்க்கும், சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாய், பயன் தரக்கூடியவர்களாய் வாழ்ந்து செல்வோம்….


வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்
Rate this content
Log in

Similar tamil story from Inspirational