STORYMIRROR

Rajini Benjamin

Inspirational

5  

Rajini Benjamin

Inspirational

தீராத சுதந்திர தாகம்

தீராத சுதந்திர தாகம்

6 mins
530



கதை சுருக்கம்.

தன் தாய் நாட்டின் சுதந்திரத்தில் ஆசை கொண்ட எண்ணற்ற தியாகிகள் வரிசையில் நம் கதையில் வரும் சின்ன சாமியும் சுதந்திர போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்கிறார்... ஆனால், அவரது ஆத்மா சாந்தியடையாமல், தற்காலத்தில் ஆவியாக இருப்பது போல... கதை நகர்வு.


இனி கதை...

'காந்திமங்களம்' அழகான ஊர். ஒரு சமயத்தில் ஊரின் நடுவே பெரிய குளம் ஒன்று இருந்தது 1960 - 70 என்று சொல்லலாம்.


அங்கு தான் கதை துவக்கம்.

இப்போது அதாவது 1990 - 20 ஆம் நூற்றாண்டில் அவ்வூரின் எழில்,

இப்போதோ கைம்பெண் போல் மங்களம் துறந்த நிலையில், வரட்சியின் பிடியில் இருந்துவரும் கிராமமாக உள்ளது.

அவ்வூரின் பெரியவரும் ஊர் தலைவருமான தங்கவேலு.

தன் கிராம் நலன் கருதி பஞ்சாயத்து கூட்டி பேச நினைத்து அனைவரையும் அழைத்தார்.

என்ன பெரியவரே, "எல்லாரையும் இங்ஙன கூட்டி நிக்க வெச்சிருக்கிங்க",

"வந்து அரைமணிநேரமாவுது ஒன்னும் பேச மாட்டிகிதிகளே".

"வேற வேல பொழப்பு பாக்கணுமில்ல" என்றான் ஊரின் VIP யாக மட்டுமே இருந்துவரும் சரவணன்.

அவனது இந்த பேச்சை கேட்டு. "ஆமா,இவுக பெரிய கலெக்டரு. இவுரு ஆபிசுக்கு போனா தான் வேலை நடக்கும்.

சும்மா அந்த ஓரமா நிப்பியா", என்றவர் அந்த கிராமத்தின் அடுத்த படி தலைமை தாங்க இருக்கும் 'மயில் சாமி' என்ற ஐம்பத்தைந்து வயதை கொண்ட ஊரின் அஞ்சலக பணியாளர்.

இவர்களின் இந்த சலசலப்பு பேச்சை அமைதிப் படுத்த நினைத்த தங்கவேலு தன் பேச்சை துவங்கினார்.

"எல்லாரும் மன்னிக்கணும் இவ்வளவு நேரம் கிராமத்தில் எல்லாரும் வருவதற்காக தான் காலதாமதம் ஆகிவிட்டது- தங்கவேலு

சரி இன்னும் கூட்டத்துக்கு வராதவங்களுக்கு நான் சொல்ல போரதை தெரிவிச்சிடுங்க", என்றவர் தன் எண்ணத்தைச் சொல்ல துவங்கினார்.

"பாருங்க மக்களே இந்த சுத்துபட்டி கிரமத்தில, நம்ம ஊர் போல் செழிப்பாக இருந்த கிராமம் இல்ல, நம் மூப்பாடனார் எல்லாம் செல்வச் செழிப்பா வாழ்ந்தாங்க,

அந்த அளவுக்கு வளமாக இருந்த கிராமம் காந்தி மங்களம், அதுக்கு காரணம் நல்ல தண்ணீரும், விவசாயமும் இங்க வாழ்ந்தவங்களோட உழைப்பும் தான் காரணம்,

ஆனால்,இப்ப நம் கிராமத்தில் இருந்த மரங்களெல்லாம் அழிஞ்சு போனதால், பொட்டல் காடா மாறி நிக்குது.

அதனால் இதோ இப்ப நாம எல்லாரும் கூடி இருக்கிற இந்த

ஒரு பெரிய ஆலமரம் மட்டும் தான் இன்னும் கம்பீரமாக நின்னு நமக்கு கொஞ்சமாவது சுத்தமான காத்து தருது.

அதனால் தான் நான் இந்த ஆலமரத்த பரமாரிச்சு அதோட விழுதுகளை மண்ணுல பதியவைக்க நினைத்து, மண்ணை கோபுரமா கட்டிவைக்கிறேன்.

அப்படி இருந்தும் ஊர் சின்ன வாண்டுங்க மண்ணை தளத்திவிட்டுடுதுகள்.

அதனால இங்க அம்மனுக்கு ஒரு கோவில் கட்டலாம்னு நினைக்கிறேன்.

அதோட நம் ஊர் சனங்க பயந்துகிட்டு இருக்கிற சின்ன போஸ் ஆவியும் மட்டுபடும்னு தான் இந்த யோஜனை" என்றார் நிறுத்தி நிதானமா.

தங்கவேலுவின் இந்த யோசனையை, ஒருமனதாக ஏற்றனர் கிராம மக்கள்.

அதனால் துரிதமாக கோவில் கட்டும் பணிகள் நடந்தது. அதோடு சேர்த்து, விநாயகர், முருகர் என்று கடவுளுக்கு சிறு கோவில் கட்டி வழிபடுகின்றனர்.

இப்போது ஆலமரத்தின் விழுதுகளை பரப்பி தாய் மரத்தை தாங்குகிறது.

சின்னஞ் சிறு உயிர்களுக்கு அடைக்கலம் தருவதோடு மட்டுமின்றி, அவ்வழியே செல்வோருக்கு நிழலும், தூய காற்று தந்தும் தன் நிலைத்தன்மையை, பெருந்தன்மையுடன் செய்துவருகிறது ஆலமரம்.

கிராம மக்கள் எத்தனை தான் தெய்வத்தன்மை அங்கு குடிக் கொள்ள செய்து, தங்களின் ஊரை பாதுகாக்க நினைத்தாலும்.

சின்ன போஸின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வரவில்லை .

அவ்வழியே இரவு நேரங்களில் யாரும் போக முடியாது.


அதற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது. இனிதான் ஆரம்பம்,.....

அது என்னவென்றால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன் அதாவது நம் தேசம் சுதந்திரம் அடைவதற்கான போராட்டக் காலம் அது.

சின்னசாமி என்ற இளைஞன். இவன் தான் தங்கவேலுவின் தலைப்புதல்வன்.

இவனது வாழ்நாளின் கனவும், லட்சியமும் ஒன்றே ஒன்று தான். அது தன் தாய் நாட்டை சுதந்திர காற்றை சுவாசம் பெறச் செய்வது.


அதற்கெனவே விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைச்சிறந்த தலைவர்களில் ஒருவரான "சுபாஷ் சந்திரபோஸ்" அவர்களை பற்றிய மற்றும் அவரது துடிப்பான பேச்சுகளை அறிந்து கொள்ள நேர்ந்தது சின்னசாமிக்கு.

அதுவும் அவனது பதினான்கு வயதில்.

"முத்துராமலிங்க தேவரை" அவனது ஊரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சின்னாவுக்கு.

அவரின் மூலமாக தான் அவரது நெருங்கிய நண்பரான, அச்சமயத்தில் சுதந்திரப் போராட்ட தலைவரான "சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் பற்றியும், தெரிந்து கொண்டான் சின்னசாமி.

தாய் நாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்து.

அதே காலக்கட்டத்தில் இருந்த நம் தேசபிதா காந்தியடிகள் அவர்களின் அகிம்சை கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையுடன் போராட்டங்கள் மூலமே நம் தேசம் விடுதலை அடையும் என்று வித்திட்டவர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

அவரது எழுச்சி மிக்க வீரமான பேச்சுகள் எல்லாம், இளைய சமூதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

"இளைஞர்களே உங்கள் இரத்தத்தை தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலை அளிக்கிறேன்" என்று ஊக்குவிக்கும் மொழிகளை கூறியவர்.

சுபாஷ் சந்திர போஸுன் வார்த்தைகள் சின்னாவின் மனதில் சுதந்திரத் தாக்கத்தை விதைத்தது.

சுபாஷின் கொள்கைகளை தமிழக இளைஞர்களாக இருந்த, நம் சின்ன சாமி போன்றோர் வெகு ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டனர்.

வெள்ளையர்களை வெளுத்துக் கட்டுவது என்று உறுதி பூண்டான் சின்னசாமி.

இங்கு முக்கியமாக ஒரு குறிப்பு கூற விழைகிறேன்.

இந்தியாவின் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் பிறந்து பள்ளிப் படிப்பும், கொல்கத்தாவில் பட்டப்படிப்பும் பெற்று வீரமிக்க இளைஞராக திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ்.


"ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர்‌ நம் விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களே".

நம் பாரத நாடு விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமும் இவர் என்றும் ஏற்கலாம்.

இவரது கொள்கைகளை பின்பற்றி, இவர் மீது கொண்ட பக்தியால் தன் பெயரை சின்ன போஸ் என்று மாற்றிக் கொண்டான் சின்னசாமி.

அதோடு அவனது நண்பர்களுக்கும் விடுதலை போராட்ட தாக்கத்தை உண்டாக்கி, அவர்களையும் சேர்த்து ஒரு குழுவை உருவாக்கி,

இதோ, எப்போதும் இந்த ஆலமரத்தடியில் தான் தங்கள் திட்டங்களின் வழி வகைகளை வகுத்து வந்தான் சின்ன போஸ்.

சின்ன போஸ் யோசனையில் வகுக்கப்பட்ட திட்டம் என்றும் தோற்றதில்லை.

ஆங்கிலேயர்கள் தன் மக்களுக்கு செய்துவரும் கொடுமைகளுக்கு தக்கபதிலடி கொடுத்து, அவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிப்படைத்தான்.

ஆனால் என்ன, எப்போதும் அவர்களின் பத்து பேர் கொண்ட குழுவில், வழமைப்போல் ஒரு எட்டப்பன்

இருந்து தன் பச்சோந்தி வேலையைக் காட்டினான்.அதுவே சின்ன போஸ் மரணத்திற்கு காரணமாகியது.

சின்னா, சுதந்திர இந்தியாவை காண முடியாமலே, தன் முப்பது வயதில் இறந்துவிட்டான்.

அதனால், இன்று ஆவியாக அந்த ஆலமரத்தடியில் இருந்து கொண்டு, இரவில் தீப்பந்தம் பிடித்து தன் தோழர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக,

ஊர் மக்களில் சிலர் நேரில் கண்டதாகவும் செய்தி பரவியிருப்பதால் அவ்வழியே ஊர் மக்கள் இரவில் செல்வதில்லை.

அப்படி தப்பித்தவறி செல்பவர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.

அப்படி தான் ஒரு முறை வீரா என்ற இருபத்தி இரண்டு வயது இளைஞன்,

சென்னையிலிருந்து

தன் நண்பனைக் காண காந்திமங்களம் வந்தான்

பயணத்தில் தாமதமாகிவிட்டதால் இரவுப் பொழுதே ஊர் வந்து சேர முடிந்தது.

தான் வந்து சேர தாமதமாகும் என தகவலை தெரிவிக்க நினைத்த வீரா, மதியமே நண்பன் செந்திலை கைப்பேசியில் தொடர்பு கொண்டான்.

ஆனால் இணையவசதி சரியில்லாமல் போனதால், பேச முடியாமல் போனது, அது தான் அந்த விபரீதத்திற்கு காரணமாகியது.


சரியாக பனிரெண்டு மணிக்கு ஆலமரம் உள்ள மண் சாலையில் சிறு டிராவல் பேக் தோளில் மாட்டிக்கொண்டு,

மனதுக்குப் பிடித்த பாடலான

வந்த நாள் முதல்

இந்த நாள் வரை

வானம் மாறவில்லை...

வான் மதியும்

மீனும், கடல் காற்றும்..

மலரும்,... மண்ணும்,...

கொடியும்,... சோலையும்,....

நதியும் மாறவில்லை.. (ம்ம்...)

இப்படி பாடலை முணுமுணுத்துக் கொண்டே நடந்தவன்.

மரத்தடியில் தீ பந்தம் எரிவதை பார்த்து அப்பாடா யாரோ ஒருவர் இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்ய இருக்கிறார்கள், என்று நினைத்தபடி அங்கு விரைந்து நடந்தவன் பார்த்தது.


தலையில் முண்டாசு கட்டி. கைகளில் அந்த கால துப்பாக்கி ஏந்தியபடி சின்ன, சின்ன விறகுகளில் தீ மூட்டி அதன் அருகே நான்கு பேர் அமர்ந்திருப்பதை பார்த்த வீரா.


அடடே இது என்ன இரவில் இங்கு என்ன செய்கிறார்கள்?.


இப்படி நாலு பேர் சேர்ந்தால் மது குடிப்பது தான் நான் இதுவரை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இவர்கள் கைகளில் துப்பாக்கி இருக்கிறதே!!!! ஏதும் கொள்ளையர்களா?,

இல்லையென்றால் தீவிரவாதிகளா?,

அடக்கடவுளே கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வைத்து நான்கு நாட்கள் முன்பு தான் இந்த ஐம்பதாயிரம் ஆப்பிள் ஐ ஃபோன் வாங்கினேன்.

அதுவும் இப்போது பறிகொடுக்கணுமா! இப்படியே திரும்பி ஓடிவிடலாமா? ஆனால் முடியாதே இவர்கள் நான்கு பேர் நிச்சயம் என்னை வளைத்துப் பிடித்து விடுவார்கள்.

என்று நினைத்து மெதுவாக அவர்களை கடந்து செல்ல நினைத்தான்.

சின்ன போஸ் குழுவில் இருந்த காசி என்பவன் வீராவைப் பார்த்துவிட்டான்.

"அதோ நம் இயக்க தோழர் 'சிவம்' அங்கு செல்கிறார் பாருங்கள்" என்று சொல்லவும்.

அனைவரும் வீராவைப் பார்க்க.

வீராவுக்கோ இருந்த கொஞ்சம் நஞ்சம் வீரமும் காற்றில் பறந்துவிட்டது.

காரணம் அங்கு இருந்தவர்களுக்கு கருவிழி இல்லாமல் இருந்த கண்கள் தான்.

ஏதோ ஜிரோவாட்ஸ் பல்ப் பொருத்தப்பட்டது போல்‌ விழிகள் வெண்மையாக இருந்தது,

அவர்கள் பேசும் போது எதிரொலி போல் மீண்டும் மீண்டும் செவிப்பறை எட்டி மீண்டது வீராவுக்கு.

கால்கள் நகர மறுத்து "மழையில் சிக்கிய சிறு பறவைப் போல் நடுங்கி கொண்டு நின்றிருந்தான் வீரா".

அவரை இங்கு வரச்சொல்லுங்கள். இத்தனை காலத்தாமதமாக்கிவிட்டீர்களே, தோழர் சிவம், நம் தலைவர் நேதாஜி அவர்களிடமிருந்து கடிதம் ஏதும் கொண்டு வந்திருக்கிறீர்களா?,

'ஜம்ஷாத்பூரில்' நிலவரம் என்ன? நம் தலைவரை ஆங்கிலேயர் சிறையில் வைத்திருக்கிறார்களாமே.

இப்படி கேள்விகள் அடுக்கிக் கொண்டே சென்ற சின்னா,

சட்டென்று நிறுத்தி, "என்ன செய்தி அனுப்பியிருக்கிறார் நம் தலைவர்" என்று ஆவலுடன் கேட்க,

சின்ன போஸின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினான் வீரா.

"என்ன?, தோழரே பதில் மொழி ஏதும் தராமல் அங்கே நின்று கொண்டு இருக்கிறீர்கள். இப்படி அருகில் வாருங்கள்" என்ற கட்டளைக்கு,

பதில் சொல்ல கண்களை இறுக்கி மூடி கொண்டு அவர்கள் அருகே சென்ற வீரா.

தன் பேண்ட் பாக்கேட்டிலிருந்து ஆப்பிள் மொபைலை எடுத்து சின்ன போஸிடம் தந்தான்.

அதை வாங்கி முன்னும், பின்னும் திருப்பிப் பார்த்த சின்னா, என்ன இது தோழரே சிறு பெட்டியைத் தந்திருக்கிறீர்கள்?,

என்ன விளையாட்டு இது, எங்கே நம் தலைவர் அளித்தக் கடிதம் என்று மிரட்டும் தொனியில் கேட்கவும்.

ஐயோ!,...அண்ணே என்ன விட்டுடுங்க, தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேன். என்னை விட்டுவிடுங்கள் என்று அலறிக் கொண்டே சொல்லவும்",

"என்னது பொய் உரைக்கிறாயா? எம்மிடம் பொய் உரைத்தால் நிகழும் விபரிதம் தெரியுமல்லவா?",

என்று மேலும் மிரட்டவும் ‌

"ஐயா நம் நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் முடிந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் இறந்துவிட்டீர்கள், தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் என்று அவன் சொன்னதும்.

என்ன?!!!! நம் நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதா? என்று நால்வரும் ஆச்சர்யமாக கேட்கவும்.

ஆமாம் தலைவா. இதோ இந்தப் பெட்டியில், நம் தேசம் சுதந்திரம் பெற்ற தினத்தின் நிகழ்ந்தவை அனைத்தும் பதிவுப் படங்களாக இருக்கிறது பாருங்கள்,

இதை வைத்து நிறையவே திரைப்படங்களும் இருக்கு பாருங்கள் என்று.

சின்னா கையில் இருந்த கைப்பேசியை வாங்கி,

அதில் இருந்து நம் நாடு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்திலிருந்து, காந்தியடிகள், நேரு, வல்லபாய் படேல் என்று நம் தேசத்தின் பெரும் தலைவர்கள் இருக்கும் காணொளிகளை காட்டினான்.

மேலும் ஆண்டு தோறும் நம் நாட்டுத் தலைநகரத்தில் நிகழும் சுதந்திர தின விழா காணொளிகளும் ஒன்றன் பின் ஒன்றாக காட்ட.

வியப்பு கலந்த அகண்ட அவர்களின் வெண்ணிற விழிகள். இரவின் கருமையில் மின்னியது,

ஆனால் வீராவுக்கு இதயம் தொண்டை குழி எட்டிவிட்டது.😭 

சின்னா குழுவினர் தங்களின் கோரமான விழிகளில் அந்த காணொளிகளைக் கண்டு, வியந்து, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இப்படி அவர்கள் பார்த்து முடிக்கவே அதிகாலை விடியலின் விடிவெள்ளி எழும்பி விட.

கோவிலில் பக்திப் பாடல் ஒலிக்க‌,

ஒன்றிரண்டு மக்கள் நடமாட்டமும் தெரியவும்.

ரொம்ப நல்லது வீரா, நீ கூறியது நிஜம் என்பதை நாங்கள் நேரில் காண வேண்டும்.

அதனால் நாளை இதே இடத்திற்கு வந்துவிடு நாம் அனைவரும் தலைநகர் தில்லி செல்லப்போகிறோம், இப்போது குழு களையட்டும் என்று அவர்களின் தலைவனான சின்ன போஸ் சொல்லவும்,

நான்கு ஆவிகளுடன் ஆலமரத்தின் வேர்களில் சென்று மறைந்தது.

வீரா பித்துப்பிடித்தது போல் அங்கேயே நின்றிருந்தான்.

அங்கு கோவிலுக்கு வந்த ஒரு வயதான நபர்,

எப்பா... தம்பி எந்த ஊரு?, என்று கேட்டதும்.

"நான் இந்திய தேசத்துப் பிரஜை, நான் இந்திய தேசத்துப் பிரஜை" என்று சொன்னவன் அப்படியே மயங்கி சரிந்தான் வீரா.

மீண்டும் வீரா கண்விழித்து அவன் நண்பன் செந்தில் வீட்டில் தான்

முற்றும் ‌🙏 ஜெய்ஹிந்த்

🌼🇳🇪🇳🇪🇳🇪🌼


Rate this content
Log in

Similar tamil story from Inspirational