இடிந்த கோபுரம்
இடிந்த கோபுரம்
ஐ..டாடி வந்தாச்சு டாடி வந்தாச்சு கைத்தட்டி சிரித்தபடி வாசல் கதவருகே ஓடினாள், இப்போது தான் கிண்டர் கார்டன் செல்லும் மூன்று வயது குழந்தை ஐஸ்வர்யா.
அவள் அண்ணன், இரண்டாம் வகுப்பு படிக்கும் தருண் தன் உயரத்துக்கு மேல் இருந்த கதவின் தாழ்ப்பாளை ஏக்கி திறக்கவும்,
சசிதரன் ஓட்டிவந்த கருநீல நிறத்தில் ஹூண்டாய் வெர்னா முன் புற போர்டிக் கோவில் வந்து நின்ற்கவும் சரியாக இருந்தது.
அவன் கார் கதவை திறந்து வெளியே வருவதற்குள் தருண் கார்கதவை திறந்துவிட.
டாடி என்றபடி குழந்தை ஐசுவும் அவனிடம் செல்ல.
வாங்க வாங்க குட்டி செல்லம் என கொச்சிய படி ஒரு கையால் அவளை தூக்கி தோளில் சாய்த்து கொண்டு மறு தோளில் தன் மடிகனிணியை எடுக்க.
அதற்குள் தருண் வீட்டினுள் ஓடி சென்று கிச்சனில் ஏதோ சிற்றுண்டி தயாரித்து கொண்டிருந்த மீனாட்சியிடம் பாட்டி பாட்டி டாடி வந்தாச்சு என்று சொல்ல.
உன் அப்பா இன்னைக்கு சீக்கிரம் வந்தாச்சா....சரி சரி இதோ வரேன்,
மாதவா அந்த இட்லி மாவை கிரைண்டரில் இருந்து எடுத்து பாதி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜில் வச்சுடு என்று சொல்லி விட்டு, சிற்றுண்டியாக தயாரித்த பக்கோடாவை ஒரு தட்டில் வைத்து, டீயும் எடுத்து கொண்டு ஹாலுக்கு வர,
(மாதவன் அந்த வீட்டின் நெடுநாளைய விசுவாசமான வேலையாள்).
ஹாலில் குழந்தைகளுடன் பேசி சிரித்தபடி தன் கழுத்து டையை தளர்த்தி கொண்டிருந்த தன் மகன் சசிதரனின், முகத்தில் அத்தனை சோர்வு அதை பார்த்ததும் மீனாட்சியின் மனமும் வலித்தது.
வாழ வேண
்டிய வயதில் இப்படி இரண்டு பிள்ளைகளை தந்துவிட்டு போய்ட்டா மகராசி என்று சமீபத்தில் அகால மரணமடைந்த தன் மருமகள் மதுமிதா வை நினைத்தபடி.
அவர் எடுத்துவந்த டீயும் ஸ்னாக்சும் டீ பாயில் வைக்க.
குழந்தைகளின் க்ரீச் குரல் ப்பா ப்பா இன்னைக்கும் பீச்சுக்கு போலாம் ப்பா..
போன தடவை மாதிரி பெரிய கோவில் கட்டலாம் மணல்ல.
தேய்... அண்ணா நீ அதை இடிக்க கூடாது என்றது மழலையில் ஐசு.
ம்ம்..சரி டா..என்று சொல்ல,
ஹே.. அன்னிக்கு நீ கட்டுனது கோவிலா...ஹா...ஹா...
என்று சிரித்தான் தருண்.
அவர்களின் கவலை அற்ற புன்னகையில் தன் அலுப்பு மறந்து இருவரின் பேச்சை கேட்டுகொண்டே தன் காலனிகளை கழற்றி அப்புற படுத்தினான் சசி.
அங்கு வந்த மீனாட்சி,டேய் பசங்களா பாருங்க அப்பா எவ்வளவு டயார்டா இருக்காங்க எல்லாம் நாளை கழிச்சு பீச் போகலாம் இப்ப போய் ஹோம் வெர்க் முடிங்க போங்க என்று குழந்தைகளிடம் சொல்ல,
தன் குழந்தைகளின் முகம் வாடுவதை பார்த்த சசி.
என்ன ஹோம் வெர்க் முடிக்கலையா?..
சரி இன்னும் ஆஃப் ஆன ஹவரில் எல்லா ஹோம் வெர்கையும் முடிந்துவிட்டால் நாம பீச் போகலாம்.
இல்லை ன்னா சண்டே தான் என்று கராராக சொல்லவும்.
டாடி டாடி நான் முடிச்சிட்டேன்.
இன்னைக்கு ஒரு டாயிங்( ட்ராயிங்) கூட வரஞ்சேனே என்று தான் வரைந்த படத்தை எடுத்து வந்து காட்டியது ஐசு.
அது ஒரு தாறுமாறான இடிந்த கோபுரம் போல் இருந்தது.
இருந்தாலும் பாராட்டே கிடைத்தது ஐசுவுக்கு.
முற்றும்.