Rajini Benjamin

Others

5.0  

Rajini Benjamin

Others

ஏழுகடல் ஏழுமலை

ஏழுகடல் ஏழுமலை

1 min
530


என்னை நானே

எதிர்கொள்ள

ஏழு மலை ஏழு கடல்

தாண்டியும் பார்த்தேன்//


நொடிப்பொழுதில்

நீ எதிரே தோன்றும் வரை//


சூரியனாய் சுட்டுவிட்டாய்,

பனிதுளியாய் சிதறிவிட்டேன்//


சிந்திக்கவும் இல்லை 

சிறகிருந்தும் 

சிறைப்பட்டு விட்டேன்

மீளவும் விரும்பாமல்,


சிறு மனதில் 

ஆலம் விழுதாகி

என்னுள்ளே 

ஊன்றிவிட்டாய்


விழுங்கிவிடும் நினைவுகளோடு

சொற்கள் தொலைந்த

தொடர் நீட்சியின்,


வியப்பில் கற்பனை

உலகொன்று உள்ளுக்குள் 

உருவாக பேதையவள் அறியாயோ


விந்தை மிகு உலகமிது

உன்னில் தொலைந்துவிட்டால்

மீட்சியில்லா நிலையிது வென்று.



Rate this content
Log in