STORYMIRROR

Rajini Benjamin

Inspirational

5.0  

Rajini Benjamin

Inspirational

உரிமையுள்ள உடன்பிறப்பு.

உரிமையுள்ள உடன்பிறப்பு.

1 min
526



ஒரு கிளையின்

பூக்களாய் கிள்ளை மொழி

பேசி மகிழ்ந்தோம்//


எதற்கென தெரியாமல் எப்போதும் வரும்

சின்னஞ்சிறு சண்டைகளும்

பாசத்தில் பிணைய//


வெவ்வேறு ரசனையிருந்தும்

உன் விருப்பம் இதுவென

உள்ளமுவந்து பரிசளித்து

வாழ்த்தும் உடன்பிறப்பே//


உன் வாழ்க்கை வளம் பெற

நீண்ட ஆயுளுடன் உடன்வர//


துன்பங்களை துட்சமென

தூர நிறுத்தி துவளாமல்

முன்னேற்றம் காண விழையும்//


அன்பு உள்ளங்களே

சகோதர சகோதரிகள்//


ஒன்றாக ஒருமித்த

சொந்தமிது என்றும்//


அதற்கென்றே ஓர் விழாவென

வண்ண வண்ண அலங்காரத்தில்


காவலென கயிறு திரித்து//

பாசமுடன் அணிவிக்கும்

நாளதுவும் ரக்ஷா பந்தன்.


✍️

பிரியா . பென் 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational