Rajini Benjamin

Drama

4.2  

Rajini Benjamin

Drama

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

4 mins
231


அந்த எஸ்டேட் ஃபார்ம்ஹவுஸ்க்கு வந்து இன்றோடு முப்பது நாட்கள் முடிகிறது நந்திதாவுக்கு.


இன்று வரை, தினம் மாலை நான்கு மணியிலிருந்தே துவங்கிவிடும் காற்று அது.


காற்று என்றால் அன்னையின் தாலாட்டாக துவங்கி, புரட்சி வெள்ளத்தின் சீற்றமாக உருமாறும் காற்று அது.


இன்னும் சொல்வதானால் மனதை வருடும் தென்றலாய் துவங்கி,பின் போகப் போக குளிர் தரும் காற்றாக உடலில் ஊடுருவி உறையச் செய்யும் குளிர் காற்று அது.


அந்த தென்றல் காற்றின் துவக்கத்தை வழமைப்போல் அன்றும் மாலை நடைப்பயணத்துடன் ரசித்தபடி நடந்தாள் நந்திதா.


ஆம் அவள் தான் இங்கு வசிக்க விரும்பி இந்த சில பைன் மரங்களும் தோட்டங்களும் நிறைந்த, அதிலும் அருகில் வீழும் அருவியும், வெள்ளி எடையுடன் கூடிய அந்த சூழலும் நந்திதாவின் மனதை கொள்ளைக்கொண்டதில் வியப்பில்லை.


அதிகப்படியான வசதிவாய்பு என்றெல்லாம் இல்லை அவளுக்கு.


தன்னை அனாதை ஆசிரமத்திலிருந்து எடுத்துவந்து தங்கள் வாரிசாக வளர்த்த கார்த்திக், யமுனா தம்பதியரை சேரும் இன்று நந்திதாவின் வான் முட்டும் வளர்ச்சியின் காரியகர்த்தாக்கள் அவர்களே.


வரிசையாக நன்கு பட்டப்படிப்பு முடித்து சொந்தமாக துவங்கிய விளம்பர கம்பெனி,

இன்று உலகளவில் பிரபலமாக்கிய பெருமை அவளையும் அவளுடன் பணி செய்யும் அவளின் கல்லூரி தோழர்களான சரத்,கமலி,மனு இவர்களே இவளின் நல்ல நட்பும் தொழில் ரீதியான சகாக்களும் .


நந்திதாவுக்கு திருமணத்தில் ஈடுபாடு கிடையாது.


வருடம் முழுவதும் தன் நிறுவன வளர்ச்சிக்கு உழைப்பவள்.


ஒவ்வொரு வருடமும் முழுதாக ஒரு மாதம் இந்த ஃபார்ம் ஹவுசில் செலவிடுவாள்.


அது தான் தன்னை வளர்த்த தாய் தந்தையர் வாழ்ந்து வசித்த தான் வளர்ந்த இடம்.


என்பதால் மட்டுமே அந்த இடத்திற்கு வருவதில்லை நந்திதா.


இந்த ஹவுஸிக்கு பின் ஒரு பெரும் கதை உள்ளது அது என்னவென்றால்.


அவளின் தந்தையான கார்த்திக் தொழில் முறை நண்பனும் பார்ட்னருமான சச்சின் என்பவர் அனைத்து பணத்தையும் மோசடி செய்து நஷ்ட கணக்கு காட்டி கார்த்திக்கை ஒன்றுமில்லாதவராக விரட்டிவிட்டதில் கடைசியாக மிஞ்சிய இந்த ஃபார்ம் ஹவுசை தான் விற்று அவளை படிக்க வைத்து இந்த நிலைக்கு கொண்டுவந்தார்கள் நந்திதாவின் வளர்ப்பு பெற்றோர்கள்.


இந்த நம்பிக்கை துரோக செயலுக்கு நந்திதாவின் மனதை நெருப்பாக தகிக்க. அவளின் முதல் குறிக்கோள் அவர்களின் இந்த அழகிய வீடு மீண்டும் வாங்குவதாக இருந்தது.


இன்று அவளின் வளர்ப்பு பெற்றோரை முக்கிய நகரத்தில் அரண்மனை போன்ற வீட்டில் வசிக்க செய்தாலும்.


இருவரும் ஒரே சமயத்தில் ஒரு மாதம் கூட அங்கு தங்கள் வாழ்க்கையை தொடராமல் மறைந்தது அவளின் மனதில் ரணங்கள் உண்டாக்க.



இன்று இந்த ஃபார்ம் ஹவுசில் அதிலும் குளிர் காற்றுடன் தன் பெற்றோர்களின் தாலாட்டாக அமைதிகொள்கிறாள்.


காற்றுக்கேது வேலி என்பது போல், தன் பாசத்திற்கும் ஏது வேலி என்று தன் தற்போதைய ஒரே ஆறுதல் இங்கு இந்த இல்லத்தில் கண்டு ரசிப்பது.


நீளும் தனிமையில் நந்திதாவின் வாழ்க்கையில் என்று தான் நானும் நினைத்தேன்.


ஆனால் அவளுக்கென்று பிறந்தவன் அவளைத் தேடி வரயிருப்பதை அப்போது நந்திதாவும் அறிந்திருக்கவில்லை.



ஏன் என்றால் இனி இன்று இந்த நடைப்பயிற்சி முடித்து வீட்டு வாசலை அடைந்ததும் தான் அவனை பார்க்க போகிறாள்.


அவன் தான் முரளி நெடுநெடுவென வளர்ந்து, மாநிறத்தில், சுருள் கேசமும் அழுத்தமான முகபாவம் கொண்டிருந்தான்.


காரணம் அவன் செய்யும் காவல் துறைப்பணி. அதற்காக அவன் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் என்று அவனை இந்த வகையான உருவத் தோற்றம் தந்திருந்தது.



நந்திதா அவனைப் பார்த்ததும் புருவங்கள் சுருக்கி கேள்வியாகப் பார்க்க,


அவன் அணிந்திருந்த உடையிலிருந்து காவல் துறையில் இருக்கிறான் என்பது தெரிந்துக் கொண்டாள்.


இருப்பினும் தன்னைத் தேடி இங்கு வந்திருப்பது பற்றி யோசனை இருந்தது அவளிடம்.


ஹாய்,.. "ஐ.எம் முரளி அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் பழமுதிர் சோலை டிவிஷன்" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.


அவளும் "எஸ் சார் ஹவ் எ சீட் "என்று கூறி, மரியாதை நிமித்தம் கைக்குலுக்கி அமரச் சொன்னாள்.


பின்...

ஐ.எம் நந்திதா, யமுனா நிறுவனத்தின் எம்.டி என்று சொல்லவும்.


மெல்லிய புன்னகையுடன் அது தெரிந்துதானே நந்தி நான் இங்கே வந்தேன் என்று முரளி உரிமையுடன் பெயர் சொல்லியபடி,


அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


அவளுக்கு திடீர் அதிர்வுகளுடன்,கேள்விகளும்!.. காரணம் எப்படி இப்படிப் பார்த்ததும், பெயர் சொல்லி அழைக்கிறான் என்று நினைத்து கேள்வியானப் பார்வையை அவன் மீது செலுத்தவும்.


எஸ் நந்திதா, நான் தான், உன்னுடைய கார்த்திக் அப்பாவின் தங்கையின் முதல் மகன்.


சின்ன வயதில் அப்பா அடித்தார் என்று வீட்டைவிட்டு ஓடிப்போன உன் அத்தை மகன் முரளி நான் தான் என்று அவன் சொன்னதும்,


அவள் நம்பாதப் பார்வை ஒன்றை அவன் மீது செலுத்த.


ம்ம்.‌தெரியும் நீ அத்தனை எளிதில் நம்ப மாட்ட .


இதோ இங்கே பார் எங்கள் குடும்ப போட்டோ என்று சொல்லியபடி, தன் சட்டை பேக்கேட்டிலிருந்து ஒரு புகைப்படத்தைக் காட்டவும்.



அதைப் பார்த்தவள் முகம் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.


ஆம்,...முரளி அப்படியே தன் அத்தை மீராவின் முகசாடையில் இருந்தான்.


அதுவுமில்லாமல் முரளியின் சிறு வயது புகைப்படங்கள் அவளும் பார்த்திருக்கிறாள்.


எனவே முழு நம்பிக்கையுடன் அவன் சொல்ல வருவதை கேட்கலாம் என்று சிறு முறுவலுடன் அவன் முகத்தை பார்த்தாள் பின்.


ம்ம்...சொல்லுங்க மிஸ்டர் முரளி, என்னை பார்க்க வந்ததின் காரணம் என்ன ?,


முரளியும் சொல்றேன் சொல்றேன் அதுக்கு தானே வந்திருக்கேன் என்று ஆரம்பித்தான்.



நான் சின்ன வயசிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போனது உனக்கும் தெரியும் இல்லையா, என்று அவளை பார்க்க,


ம்ம்..என்றாள்.


அப்படி நான் ஓடி போன பிறகு தான், எனக்கு வீட்டின் அருமை தெரிந்தது,


ஆனால் திரும்பி அங்கு போக மனமில்லாமல் சுற்றித் திரிந்தேன்.


உன்னை எப்படி அத்தை மாமா தத்தெடுத்து வளர்த்தாங்களோ, அதே போல் எனக்கும் ஜாஹிர் என்ற ஒரு அப்பா கிடைத்தார்.


யாரும் இல்லாமல் தவித்த அவருக்கு என்னை அவருடைய மகனாக ஏத்துக்கிட்டார்.


நான் எப்படிபட்ட அப்பாவின் பாசத்தை எதிர்ப்பார்த்தேனோ, அந்த வகை அன்பும் அரவணைப்பும் கிடைத்தது எனக்கு அவரிடம்.


அதனால் இப்போது இந்த உடையில் உன் முன் நிற்கிறேன் என்றவனின்,


முகத்தை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தள் நந்தித,


என்ன அப்படிப் பார்கிற.என்னடா திடீர்ன்னு வந்தான் நான் தான் உன் அத்தைப் பையன் என்கிறான் ஏதேதோ கதையெல்லாம் சொல்றான்னு பார்க்கிறாயா?,


இரு முழுவதும் சொல்றேன்


அவளுக்கும் ஆர்வமாக இருந்தது அவனை பற்றி அறிந்து கொள்ள

ம்ம்... என்றாள்.


சென்ற வாரம் தான் நான் டிரைனிங் முடிந்து இங்கே போஸ்டிங் கிடைத்து வந்தேன்.


அப்போ முதலில் அம்மாவைப் பார்க்கனும்னு வீட்டுக்குப் போனேன்.


ஆனால் அம்மா இறந்தது கூடதெரியாமல் என்று சொன்னவன் சற்று நேர அமைதிக்கு பின் மீண்டும் தொடர்ந்தான்.


வீட்டில் தம்பி மட்டும் தான் இருந்தான்.


மாமா, கடைசியாக எங்கள் வீட்டுக்கு வந்த போது ஒரு கடிதத்தை அம்மாவிடம் தந்திருக்கிறார்.


ஆனால், கார்த்திக் மாமாவும் யமுனா அத்தையும் இறந்துப் போனபின், அடுத்த இரண்டு மாதத்திலேயே அம்மாவுக்கும் ஹாட் அட்டாக் வந்ததால் அவங்களும் போயிட்டாங்க.


அதனால் மாமா, அம்மாவிடம் கொடுத்தக் கடிதம் பற்றி விபரம் ஏதும் தெரியவில்லை.


சமீபத்தில் தான் தம்பி பிரகாஷ் அம்மாவின் திங்ஸ் எடுத்துவைக்கும் போது இந்த கடிதத்தைப் பார்த்திருக்கிறான்.

அவன் தான் இந்த லட்டரை என்னிடம் தந்தான்.


மாமா என்ன எழுதியிருக்கார்னு படி என்று சொல்லி ஒரு கடிதத்தை அவளிடம் நீட்ட,


அவசரமாக அதை வாங்கிப் படித்தவள்.


கார்த்தி தன் தங்கை மீராவுக்கு எழுதியது.


மீரா நான் வாய்வார்த்தையா சொல்லியிருக்கலாம்.


ஆனால் எனக்கு சமீப காலமா நந்திதா விடம் திருமணபேச்சு எடுக்கும் போதெல்லாம், நந்திதா அந்த பேச்சை தவிர்த்துவிடுகிறாள்


ஒரு வேளை எனக்கு எதாவது ஆகிட்டா இந்த கடிதத்தை என் மகளிடம் காட்டி. உன் மகனை திருமணம் செய்து கொள்வது தான் என் கடைசி ஆசை என்பதை எடுத்து சொல்.


கட்டாயம் என் மகள் என் விருப்பத்தை நிறைவேற்றுவாள் மா.


இப்படிக்கு


உன் பாசமான அண்ணன்

கார்த்திக்.

என்று கடிதம் முடித்திருந்தார்.


கடிதத்தின் வரிகளில் தந்தையின் பாசத்தைக் பார்த்தவள்.


தன்னை குறித்து அப்பா எத்தனை சிந்தித்திருக்கிறார்.


உண்மை தானே எத்தனை சாதனைகள் எத்தனை பணம் சம்பாதிக்கும் தனக்கு மகிழ்ச்சி இல்லாமல் தனிமையுணர்வு வாட்டுவதை அவளும் உணர்ந்திருந்தாள்,


இப்போதெல்லாம் மனம் விட்டு பேச யாருமில்லை என்ற நினைப்பு வரத்தானே செய்கிறது நமக்கும்.


இதற்கு தான் அப்பா இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருப்பார் என்று கண்கள் நீர் திரள.


முரளி மாமா கல்யாணம் பண்ணிக்க லாமா? என்ற அவளின் கேள்வியில்.


உறவின் உரிமை தெரிந்தது.


காற்றுக்கென்ன வேலி என்பது போல் பாசத்திற்க்கென்னவேலி.

என்பதாக நந்திதா, முரளி திருமணம் முடிந்து வாழ்க்கை துவங்கினர்.


யமுனா கார்த்திக் போல் ஆதர்ஷ் தம்பதியாக.


முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Drama