Vadamalaisamy Lokanathan

Drama

5  

Vadamalaisamy Lokanathan

Drama

விவசாயி

விவசாயி

3 mins
531



விவசாயி


நாட்டின் முதுகெலும்பு விவசாயி.அவன் ஒரு நாள் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோறு சாப்பிட முடியாது என்பது ஒரு பழைமையான சொல்லாக இருந்தாலும் உண்மை அது தான்.


கோவிந்தன் படித்து பட்டம் வாங்கி இருந்தாலும்,அந்த அறிவை விவசாயம் செய்ய பயன் படுத்தி கொள்ளலாம் என்று நினைத்து,பூர்வீகமாக பாட்டன் காலத்தில் இருந்து செய்து வரும் விவசாயத்தை இவனும் தொடர்ந்து செய்து வர முடிவு செய்தான்.

திருமண வயதில் இவனுக்கு திருமணம் முடிக்க பெண் தேடும் போது எந்த பெண்ணும் இவனை கட்டிக்க விரும்பவில்லை.காரணம் இக்காலத்து கிராமத்து பொண்ணு கூட நகரத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை பட்டாள்.

கோவிந்தன் மனம் சளைக்க வில்லை.

தன் பெற்றோருடன் நிலத்திற்கு சென்று ஏர் கலப்பை பூட்டி நிலத்தை உழுது வந்தான்.கூடவே ஒரு ஐந்து மாடுகளை வைத்து ஒரு பால் பண்ணையும் நடத்தி வந்தான்.

அவனுடைய குறிக்கோள்,இயற்கை விவசாயம்,இயந்திரங்களை பயன் படுத்த கூடாது,பசுந்தாள் உரம் தான் நிலத்திற்கு,விஷம் நிறைந்த பூச்சி கொல்லி மருந்து கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவனுடைய கொள்கைகளை பல தொலைகாட்சி நிறுவனங்கள் வந்து பேட்டி எடுத்து சென்றனர்.

இப்போது பெற்றோர்களால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு வயோதிகம்.அதனால் எந்த வேலை யாக இருந்தாலும்,இவன் ஒருத்தனாக நின்று செய்து கொண்டு இருந்தான்.கூடவே சமையல் வேலையும் செய்ய வேண்டி இருந்தது.

இதற்கு தீர்வு அவன் திருமணம் செய்து கொள்வது தான்.இவனிடம் ஒரு TV'S 50 வண்டி கூட கிடையாது.என்ன அவசரம் ஆனாலும் ஒரு பழைய சைக்கிள்.,அல்லது காளை மாட்டு வண்டி.

இந்த கிராமத்தான் கொள்கையை மாற்றுவதாக இல்லை,அதன் விளைவு அவனுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.

அன்று வேலைக்கு வந்து இருந்த பெண்களோடு சரி சமமாக இவனும் சேர்ந்து களை பிடுங்கி கொண்டு இருந்தான்.

காலையில் எதுவும் சாப்பிடவில்லை.வெய்யில் உக்கிரம்,தண்ணீர் தாகம் சோர்வு எல்லாமே சேர்ந்து விட,மெதுவாக கண்ணை மூடி கொண்டு பக்கதில் இருந்த ஒரு பாட்டியின் கையை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தான்.

அந்த முத்தம்மா பாட்டி,ஓடி சென்று தான் கொண்டு வந்து இருந்த நீர்மோரை கொண்டு வந்து,தண்ணீரால் அவன் முகத்தை கழுவி,நீர் மோர் கொடுத்து குடிக்க சொல்ல,அதை குடித்ததும் அவனுக்கு சற்று தெம்பு வந்தது.

வயதான பாட்டியிடம் தோற்று விட்டோம்,அவர் முன்னாடி மயங்கி இருக்க கூடாது என்று அவமானத்தால் கூனி குறுகினான்.


அதற்கு பாட்டி சொன்னார்,காலா காலத்தில் திருமணம் செய்து இருக்க வேண்டும்.அவள் உன்னை பட்டினியாக வயகாட்டுக்கு அனுப்ப மாட்டாள் என்றார்.

யாரு பாட்டி எனக்கு பொண்ணு தர தயாராக இருக்கா என பதிலுக்கு கேட்க

பாட்டி புலம்பி தள்ளி விட்டார்கள்.பிழைக்க பட்டணம் போகிறோம் என்று மகளும் மருமகனும் பேத்தியும் போனார்கள்.என்னமோ பிழைப்பு நடத்தி நாலு காசு சம்பாதித்து,வீடு வாங்கி கார் வாங்கி,சந்தோசமா தான் இருந்தாங்க,பேத்திக்கு கல்யாணம் செய்து முடித்து எல்லோரும் குல தெய்வம் கோவிலுக்கு காரில் போக, பாழாய் போன லாரிக்காரன் வந்து காரில் மோதி,பேத்தியை தவிர எல்லோரும் இறந்து போனார்கள்.என் தலையில் பாரத்தை வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டாங்க.

அவளை என்ன செய்வது என்று தெரியாமல் இந்த கூலி வேலை செய்து அவளை காப்பாத்தி வருகிறேன்.எனக்கு அப்புறம் அவளுக்கு யார்.கல்யாணம் ஆகி அறுத்து விட்டு வந்த பொண்ணை யார் கட்டிக்கவா என்று சொல்லி அழுதார்கள்.அந்த பொண்ணும் விவசாய நிலத்தில் எல்லோருக்கும் சமமாக களை பிடுங்கி கொண்டு இருந்தாள்.அவளும் படித்து பட்டம் பெற்றவள் தான்.

அடுத்த நாள் அதி காலையில் கோவிந்தன் பெற்றோரை அழைத்து கொண்டு அந்த பாட்டி வீட்டுக்கு போனான்.

தாமதம் ஆனால் வயல் வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.என்னையா வீடு தேடி வந்து இருக்கீங்க என்று கேட்க,உங்க பேத்தியை பொண்ணு கேட்டு வந்து இருக்கோம் பாட்டி.நான் உங்க பேத்தியை கட்டிக்குறேன்,உங்கள் இருவரையும்

காலம் பூரா வைச்சி காப்பாத்த்வேன் ஆத்தா என்று கோவிந்தன் சொல்ல,அடுத்த முகூர்த்தத்தில் கோவிந்தன் திருமணம் நடந்து முடிந்தது.

கோவிந்தன் சிறந்த விவசாயி என்று அரசாங்கம் பட்டம் கொடுத்து பாராட்டியது.

தொலைகாட்சி அவனை நேர்காணல் நடத்தி கொண்டு இருந்தது.

உங்கள் வெற்றிக்கு காரணம் என்று கேட்ட போது தன் மனைவியை கை காட்டினான்….

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Drama