Vadamalaisamy Lokanathan

Drama

4.8  

Vadamalaisamy Lokanathan

Drama

மோகனா..

மோகனா..

5 mins
492



மோகனா..நானும் ஒரு பெண் தான்.


இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பணியை செய்து பெயரும் புகழும் அடைவது எளிதான காரியம் அல்ல.

ஒரு பத்திரிகை அல்லது தொலைகாட்சி நிறுவனம் அல்லது பண்பலை வானொலி எதை நடத்துவதாக இருந்தாலும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.நாட்டு நடப்புகளை துல்லியமாக ஆராய்ந்து செய்திகளை அல்லது விவாதங்களை கொண்டு செல்ல வேண்டும்.சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய உண்மை தகவல்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

அப்படி பட்ட தொழிலில் முன்னணியில் இருக்கும் ஒரு முதன்மை செயல் அலுவலர் தான்

மோகனா.வயது நாற்பது,திருமணம் செய்து பிரிந்தவள் அப்புறம் அதை பற்றி நினைக்க நேரமும் இல்லை.செய்திகள் சேகரிக்கவும் அதை பற்றி ஆராயவும்,நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கள நிலவரம் அறியவும் அவளுக்கு நேரம் போதவில்லை.இதில் திருமணம் பற்றி நினைக்கவே அவளுக்கு நேரமும் அமையவில்லை.ஈடுபாடும் தெரியவில்லை.

ஒரே குறிக்கோள் அவளிடம் கொடுத்த அந்த பொறுப்பை முதல் இடத்தில் தக்க வைத்து கொள்வது.

அதில் இது நாள் வரை வெற்றியும் கண்டு வந்தாள்.


ஒரு வெளிநாட்டு பத்திரிகை அவளுடைய வளர்ச்சியை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பி அவளிடம் ஒரு நேர்காணல் நிகழ்ச்சிக்கு நேரம் கேட்டு இருந்தார்கள்.


அதில் அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்,வந்த கோரிக்கையை மறுக்க மனம் விரும்ப வில்லை.அந்த நேர்காணலைநேரலையாகவும்,செய்தியாக வும் வெளியிட விருப்பம் தெரிவித்து இருந்தனர்.



அந்த நேர்காணலுக்கு வேண்டி எதுவும் தயார் செய்யவில்லை.

வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் வாழ்வில் நடந்தது தான் அவளுக்கு நடந்து இருக்கும் என்று எண்ணி கொண்டாள்.


அந்த நாளும் வந்தது.அவளுடைய இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடியில் தான் அந்த நேர்காணல் நடப்பதாக இருந்தது.

வந்தவர்கள் படப்பிடிப்பிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு முக்கால் மணி நேரம்,அதற்கு பிறகு வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்து

உபசரிப்பு.


பேட்டி துடங்கியது.


கேள்வி:வணக்கம் நாற்பது வயதில் எழுபது வயது அனுபவத்தை உணர்ந்து பேசுகிறீர்கள் எப்படி.


மோகனா பதிலுக்கு வணக்கம் கூறி விட்டு பேச துடங்கினாள்:

வேறு ஒன்றும் இல்லை,சந்தித்த அவமானங்கள்,நிறைய கற்று தந்தது.பிறரை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம், வாழ்வாதாரம்,எதிர்காலத்தை பற்றி சரியான வழி காட்ட யாரும் இல்லாதது.ஒரு பெண்ணாக அனுபவித்த கொடுமைகள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.


கேள்வி:நீங்கள் அதிகம் படிக்கவில்லை,ஆனால் ஐந்து மொழியில் சரளமாக உரையாட முடிகிறது,எப்படி சாத்தியம்?


மோகனா:கண்ணீர்,அழுகை,சிரிப்பு, வலி இது இந்த உலகிற்கே பொதுவானது.இதை வெளிப்படுத்தவும்,புரிந்து கொள்ளவும் முடிந்தால் எந்த மொழியும் கற்று கொள்ளலாம்.


கேள்வி:உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?


மோகனா:தோல்விகள்,நீங்கள் சந்திக்கும் தோல்விகள் பின்னாடி வெற்றியாகமாறுகிறது.தோல்வி

களை பற்றிய ஆராய்ச்சி,அதை வெற்றியாக மாற்றுகிறது.யாரும் முதல் முயற்சியில் வெற்றி பெறுவது இல்லை.ஆராய்ச்சியும் பயிற்சியும் மிகவும் தேவை.கூடவே விடாமுயற்சி.


கேள்வி:தோல்விகள் என்று கூறும் போது எந்த மாதிரி தோல்விகள்,எதில் உங்களுக்கு தோல்வி?


மோகனா: பிறப்பில் இருந்து தோல்வி தான்.


கேள்வி: புரியவில்லை


மோகனா: நான் அம்மாவின் கருவில் இருக்கும் போது என்னை வேண்டாம் என்று கருகலைப்பு செய்ய என் தாய் முயன்றார்கள்,ஆனால் ஏனோ அதில் அவர்களுக்கு வெற்றி பெற முடியவில்லை.


கேள்வி:என்ன காரணம்?


மோகனா: என்னுடைய அம்மா காதலித்து ஒருவரை திருமணம் செய்தார்.என் அப்பாவின் வீட்டில் ஏதோ கூறி என் அம்மாவை விட்டு விலக சொன்னார்கள்.என் அப்பாவும் அதற்கு சம்மதித்தார்.அந்த நேரத்தில் என் அம்மா என்னை கருவில் சுமந்து கொண்டு இருந்தார்கள்.இரண்டு மாத கர்ப்பம்.அப்பா விட்டு விலக போவது அறிந்து என் அம்மா என்னை சுமக்க விரும்பவில்லை, அவரை பொறுத்தவரை அந்த நேரத்தில் சரியான முடிவு தான்.


கேள்வி: அப்புறம் என்ன நடந்தது?


மோகனா:என் அம்மா என் தாத்தா பாட்டியிடம் கெஞ்சி வீட்டில் சேர்த்து கொள்ள அனுமதி கேட்டார்கள். குழந்தை பிறக்கும் வரை வீட்டில் இருக்கலாம்,அதற்கு பிறகு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவோம் என்று கூறி விட்டார் கள்.அம்மாவும் வேறு வழி தெரியாமல் சம்மதம் தெரிவித்தார்கள்.ஆனால் நான் பிறந்ததும் என்னை மூன்று மாதத்தில் தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார்கள்.

இன்றைக்கு வரை என் தாயை தேடி கொண்டு தான் இருக்கிறேன்.


கேள்வி:உங்கள் குழந்தை பருவம்?


மோகனா:என்னுடைய குழந்தை பருவம்,அப்புறம் பள்ளி படிப்பு முடியும் வரை தாத்தா பாட்டியிடம் இருந்தேன்.ஆடை தயாரிப்பில் பட்டம் வாங்கும் வரை தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன்.அந்த நேரத்தில் என்னுடைய துணை அவர்களுக்கு தேவை பட்டது.எனக்கு அவர்கள்

கொடுத்த அன்பும் பாசமும் என்னால் மறக்க முடியாது.


கேள்வி:அப்புறம் என்ன நடந்தது.?


மோகனா: தாத்தா பாட்டியிடம் இருக்கும் போது நெருங்கிய உறவினர் என்னை பாலியியல் ரீதியாக சீண்டினார்.அப்போது அது பற்றி எனக்கு போதுமான அறிவு இருக்க வில்லை.சில நேரங்களில் அவரது அன்பும் சீண்டலும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.அதனால் அதை நான் தவறாக நினைக்கவில்லை.


கேள்வி:அது உங்களை எவ்வாறு பாதித்தது?


மோகனா:பாதிததா என்று தெரியாது.ஆனால் அந்த உறவினர் எனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுத்தார்.அதற்கு பிறகு அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டார். என்னுடைய திருமணமும் தோல்வி அடைந்த போது அந்த உறவினர் தான் எனக்கு பெரிதும் உதவினார்.ஒரு வேளை அவர் செய்த தவறுக்கு பிராய சித்தம்

தேடி கொண்டாரா தெரியவில்லை.

ஆனால் அந்த பருவத்தில் ஒரு ஆணின் அரவணைப்பு ஒரு இனம் புரியாத நிம்மதியை கொடுத்தது.

நமக்கென்று ஒருவர் இருக்கிறார் என்ற தைரியம் மனதில் தோன்றியது.அவர் நினைத்து இருந்தால் என்னை மேலும் சீரழித்து இருக்கலாம்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.ஒரு வேளை சந்தர்ப்ப சூழ்நிலை அவரை என்னிடம் தவறாக நடக்க தூண்டி இருக்கலாம்.இன்னும் அவர் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்.

இப்போதும் அவர் தான் எனக்கு குரு,வழிகாட்டி,ஆலோசகர்.


கேள்வி:வேறு என்ன நடந்தது உங்கள் வாழ்க்கையில்?


மோகனா:ஆதரவாக இருந்த தாத்தா பாட்டி இறந்து போனார்கள்.அம்மா வை கண்டு பிடிக்க முடியவில்லை.

அப்பாவை தேடி ஒரு நாள் போனேன்.

அவர் குடிக்கு அடிமை ஆகி அவரை கவனிக்கவே ஆள் வேண்டி இருந்தது.இந்த நேரத்தில் என்னிடம் தவறாக நடந்த உறவினர் எனக்கு மும்பையில் ஒரு வேலை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.இங்கு வந்து freelancer ஆக வேலை செய்து வந்தேன்.என்னை போல வாழ வழியில்லாமல் வந்த பெண்களை சந்தித்தேன்.சிலர் வறுமை,கல்வி காரணமாக விபசாரத்தில் இருந்தார்கள்.சிலர் வங்கியில்,சிலர் சுய தொழில் என்று வாழ்க்கையை ஒட்டி கொண்டு இருந்தார்கள்.

மாதம் ஒரு முறை இவர்கள் எல்லோரையும் சந்திக்க ஏற்பாடு செய்வேன்.அதில் பரஸ்பரம் பேசி கஸ்டபடுவர்களுக்கு உதவி செய்து கொள்வார்கள்.விபசாரத்தில் இருந்த பெண்களை அதில் இருந்து விடுவித்து,வீட்டு வேலைகளை செய்ய சந்தர்ப்பம் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.அவர்களும் அந்த மறு வாழ்வையை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர்.


கேள்வி:நீங்கள் ஏன் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை?


மோகனா:அப்படி செய்து இருந்தால் 

இந்த நேர்காணல் இருந்து இருக்காது.90% திருமணம் ஆண் பெண் கலவி யின் வடிகாலாக தான் உள்ளது.திருமணம் ஆன பெண் குழந்தை பெற்று கொள்வது, குழந்தை வளர்ப்பு,கணவனின் காம இச்சைக்கு வடிகால்,சமையல், விழாக்களில் ஒரு அலங்கார காட்சி பொம்மை,மூத்தோர் நலனுக்கு ஒரு செவிலி என்ற ரீதியில் தான் வாழ்க்கை ஓடுகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ,இது தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.

பெண்களின் மேம்பாட்டிற்கு யார் வந்து துணை புரிவார்கள். வேலைக்கு செல்லும் பெண் ஒரு இயந்திரத்தை விட மோசம். மின்சாரம் நின்று விட்டால் அந்த இயந்திரதிர்க்கு கூட ஓய்வு உண்டு.மின்சாரம் போனால் பெண்ணிற்கு கூடுதல் வேலை பளு.துணி துவைக்க,மாவு அரைக்க என்று பணி சுமை கூட தான் செய்கிறது.

Marriage is for legal sex,sometimes financial security for the men.

பொண்டாட்டி சம்பாத்தியத்தில் இன்று எத்தனை ஆண்கள் சுகம் அனுபவிக்கிறார்கள்.

இப்படி மன ரீதியாக துன்பம் அனுபவிக்கும் பெண்களுக்கு போராட என்னை போன்ற வாழா 

வெட்டிகள் தேவை பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.திருமணம் செய்யாத ஒரு பெண்ணை இந்த சமுதாயம் ஒரு வாழா வெட்டியாக தான் பார்க்கிறது.ஆணுக்கு அடிமையாக இருக்கும் வரை பெண்

எல்லோருக்கும் அழகானவள்,குடும்ப குத்து விளக்கு.என்னை போல் இருந்தால் அடங்கா பிடாரி,திமிர் பிடித்தவ,இன்னும் எத்தனையோ பட்டங்கள்.இன்னும் ஏதாவது கேள்வி?


கேள்வி:உங்கள் எதிர்காலம்?


மோகனா:என்னுடைய அம்மா ஒரு கோழை.அவரை மாதிரி பெண்கள் இருக்கும் வரை என்னை மாதிரி பெண்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை.பெண்கள் வாழ பிறந்தவர்கள்.எங்களிடம் இருந்து உடல் சுகத்தை ஆண்கள் பலவந்தமாக எடுக்கலாம்.எங்கள் உயிரை எடுக்க முடியாது அப்படி நடக்கும் ஒவ்வொரு வேளையும்

ஒரு காளி உருவாகிறாள் என்று அர்த்தம்.அழிவில் இருந்து தானே

ஆரம்பமும் உருவாகிறது.ஒரு பெண்ணை அழித்தால் பத்து பெண்கள் உருவாகி வருவார்கள்.


தேவலோகம் முதல் பர லோகம் வரை பெண் ஒரு போக, மோக பொருள் ஆகவே பார்க்க பட்டு உள்ளாள்.

ஆணுக்கு ஆக்கும் சக்தி, பெண்ணுக்கு படைக்கும் சக்தி,

பெண் எந்த விதத்தில் தரம் தாழ்ந்து விட்டாள்.

அவளும் பெண் தான் ,அவளும் 

எனக்கு நிகர் ஆனவள் என்று ஆண்கள் நினைக்கும் காலம் வர வேண்டும்.

ஆண்களால் கை விட பட்ட அத்தனை 

பெண்களும் தற்கொலை செய்து கொண்டு செத்து போவது இல்லை.

வாழ்ந்து தான் வருகிறார்கள்.ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதவன்

தன்னை எப்படி ஒரு ஆண் என்று சொல்லி கொள்ள முடியும்.

இப்போது எப்படி ஆண்கள் பெண்களை கை விடுகிறார்கள்.அது போல பெண்கள் ஆண்களை கை விடும் காலம் வரும்.

அப்படி ஒரு நிகழ்வு வருவதும் வராமல் இருப்பதும் இந்த ஆண்கள் கையில் தான் இருக்கிறது.

இன்னும் கேட்க கேள்விகள் உண்டா


கேள்வி:ஏன் இவ்வளவு கோபம்?


மோகனா: கோபம் அல்ல.ஆண்கள் ஆண்களாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் தான்.


கேள்வி: மிக்க நன்றிங்க மோகனா

சிறப்பாக பதில் கூறி உள்ளீர்கள்.

தேவை பட்டால் பிற நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளி இட உங்கள் அனுமதி தேவை.


மோகனா: தாராளமாக.பெண் உலகிற்கு பொதுவான வள்

எல்லோருக்கும் இது சென்று சேரட்டும் வணக்கம்.


கேள்வி:நீங்க நேரம் ஒதுக்கி சிறந்த கருத்துக்களை சொன்னதுக்கு மிகவும் நன்றி வணக்கம்.


நேர்காணல் முடிந்தது.










Rate this content
Log in

Similar tamil story from Drama