Vadamalaisamy Lokanathan

Drama

5  

Vadamalaisamy Lokanathan

Drama

மகன்

மகன்

5 mins
514


அதிகாலை பொழுது விடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கு.இப்போது எழுந்து தயார் ஆனால் மட்டுமே பள்ளிக்கு செல்லும் முன் பணியை முடிக்க முடியும்.

விமலன் பிளஸ் டூ படிக்கிறான்.அவனுடைய அப்பா அம்மா ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கிறார்கள்.விமலன் அவன் கூட ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்.

பெற்றோரின் வருமானம் எல்லோரையும் படிக்க வைக்க போதுமானதாக இல்லை.பெற்றோருக்கு உதவ வேண்டி காலை நேரத்தில் விமலன் வீடு தோறும் பேப்பர் போட போகிறான்.மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.அதில் 1500 ரூபாய் வீட்டில் கொடுத்து விடுவான்.மீதியை தன்னுடைய சேமிப்பாக வைத்து கொள்வான்.

பணம் சேமித்து மேலே படித்து ஒரு பட்டம் வாங்கி வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது அவனுடைய இலக்கு.

மாலை வேளைகளில் ஏதாவது ஒரு கடையில் பகுதி நேர வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்தான்.ஆனால் மாலை நேர வேலை எப்போதும் கிடைக்காது.பண்டிகை நாட்களில் அவ்வப்போது கிடைக்கும் இத்தனைக்கும் நடுவில் அவனும் தன் படிப்பையும் கவனித்து கொண்டு,தம்பி தங்கைக்கு பாடம் சொல்லி கொடுத்தும் வந்தான்.

மூன்று பேர் படிக்க எப்படியும் வருடம் ஒரு லட்ச ரூபாய் தேவை பட்டது.ஆனால் அவன் என்ன பாடுபட்டாலும் ஐயாயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்க முடியவில்லை.

அப்பா அம்மா சம்பளத்தில் வாடகை கடன் தவணை கட்டியது போக ஆயிரம் ரூபாய் கூட அவர்கள் படிப்பிற்கு கொடுக்க முடியவில்லை.

தம்பி மூர்த்தியை எப்படியாவது ஒரு கணினி பொறியாளர் ஆக்கி வேலைக்கு சேர்த்து விட்டால் பண பிரச்சினை சமாளித்து விடலாம் என்று நினைத்து,தன்னுடைய படிப்பை பிளஸ் டூ வோடு நிறுத்தி கொண்டு,முழு நேர வேலைக்கு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தான்.

அது ஒரு ஃபேன்ஸி கடை நல்ல வியாபாரம் நடக்கும் கடை.காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை வேலை செய்வான்,மாதம் பத்தாயரம் சம்பளம் கிடைத்தது.

இதன் நடுவே அம்மா உடல் நலம் சரியில்லாமல் போக அவர் வேலைக்கும்செல்லவில்லை,கூடவே மருத்துவ செலவும் செய்ய வேண்டி இருந்தது.

இவன் சம்பாதிக்கும் பணம் அம்மா சம்பளத்தை ஈடு கட்டவும்,தம்பியின் படிப்பிற்கும் சரியாக இருந்தது.தங்கை பத்தாவது முடித்துவிட்டு அவளும் வேலைக்கு சென்று வந்தாள்.அவளுடைய சம்பளம் அவள் திருமணத்திற்கு உதவும் என்று அதை சேமித்து வந்தார்கள்.

அதை வைத்து ஐந்து பவன் நகை சேர்த்து வைத்தார் அம்மா.இருந்த ஒரே நம்பிக்கை தம்பிதான்.ஆனால் பள்ளிவரைநன்றாகபடித்தவன்,கல்லூரிக்கு செல்ல மற்றவர்களுடன் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தவில்லை.

பணக்கார பசங்க கூட சேர்ந்து போதைக்கு அடிமை ஆகி,படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கும் போகும் தங்கையிடம் பணத்தை பறித்துகஞ்சா வாங்கி வியாபாரம்செய்துவந்தான்.அடிக்கடி போலீஸ்பிடித்துசிறைக்குசென்று வந்தான்.என்ன சொல்லியும் திருந்தவே இல்லை.அதனால் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டான்.

விமலன் தொழிலை கற்று கொண்டு வீட்டிற்க்கு பக்கத்தில் ஒருசிறியகடைஆரம்பித்தான்.

அதை அம்மாவிற்கு சொல்லி கொடுத்து,கடையை கவனிக்க சொல்லி விட்டு அவன் எப்போதும் போல வேலைக்கு சென்று வந்தான்.

இதன் நடுவில் அவன் வேலை பார்த்த கடையின் முதலாளி ஒரு விபத்தில் காலமாகி விட,கடையை கவனிக்க முதலாளியின் பெண் அகிலா தினமும் வர ஆரம்பித்தாள்.வந்து கணக்கு பார்க்கும் போது தான் தெரிந்தது,முதலாளி நிறைய கடன் வாங்கி இருப்பது.அதை எப்படி திருப்பி அடைப்பது என்று திணறும் போது விமலன் கவலை பட வேண்டாம்,வியாபாரம் நன்றாக போகிறது,இரண்டு வருடத்தில் கடனை அடைத்து விடலாம் என்று சொல்லி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைத்து கொடுத்தான்.கொடுத்து விட்டு தான் ஆரம்பித்த கடையை கவனிக்க விரும்பினான்.ஆனால் அகிலாஅதற்குசம்மதிக்கவில்லை.விமலன் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும்,இன்னும் சொந்தமாக பாடு பட்டு சம்பாதித்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்று கூற, அகிலா கடையில் வரும் லாபத்தில் ஒரு பங்கும்,இன்னும் அதிக சம்பளம் கொடுக்கிறேன்.தங்கை திருமணத்திற்கு தேவையான உதவியும் செய்வதாக வாக்கு அளித்தாள்.விமலன் வேறு வழியின்றி சம்மதம் சொன்னான்.

அந்த வருடமே தங்கைக்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தான்.மாப்பிள்ளையும் ஒரு சிறு வியாபாரி தான்.

அகிலாவும்  விமலனை விரும்பி திருமணம் செய்ய சம்மதம் கேட்க,விமலன் பெற்றோர், விமலனை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தனர்.சில ஆண்டுகள் செல்ல,மீண்டும் வியாபாரம் குறைந்து போதிய வருமானம் இல்லாமல் போனது.

அப்போது தங்கையின் மாப்பிள்ளை நன்றாக சம்பாதித்து வசதியாக இருந்தார். அகிலா அவரிடம் சென்று உதவி கேட்க அவர் மறுத்து விட்டார்.அகிலாவுக்கு மிகவும் சங்கடம் ஆகி விட்டது.விமலனுக்கு தெரியாமல் தான்போய்கேட்டுஇருந்தாள்.இப்போது என்ன செய்வது,இருந்த சேமிப்பு தங்கை திருமணத்திற்கு செலவாகி விட்டது.அடமானம் வைக்க கூட சொத்து எதுவும் இல்லை.விமலன் நண்பன் செய்தி தாளில் வந்த ஒரு விளம்பரத்தை காண்பிக்க,அங்கு போன் செய்து விவரம் கேட்டான்.

சொத்து இருந்தால் அதன் மீது கடன் கொடுப்பார்கள் என்று அறிந்தான்.ஒரு பெண்ணின் பெயரும் தொலைபேசி எண்ணும் இருந்தது. அகிலா தன்னுடைய வீட்டு பத்திரத்தை கொடுத்து அதன் மீது கடன் வாங்க சொன்னாள்.விமலனுக்கு மிகவும் தயக்கம்.இருந்தாலும் வேறு வழியின்றி அந்த பெண்ணை தேடி பக்கத்துநகரத்திற்குசென்றான்.

அந்த விலாசத்தில் ஒரு பெரிய வீடு இருந்தது.பக்கத்தில் ஒரு அலுவலக அறையும் இருந்தது உள்ளே மேனஜர் போல ஒருவர் இருந்தார்.ஒரு தாளில் அவனை பற்றிய விவரம்,விலாசம் தேவை படும் கடன்,அதற்கு ஈடாக கொடுக்கும் சொத்தின் மதிப்பு போன்ற விவரங்களை எழுதி கொடுத்தான்.அந்த மேனஜர் அதை எடுத்து கொண்டு உள்ளே சென்றார்.அங்கு அமர்ந்து இருந்த பெண்மணி அதாவது முதலாளி அந்த காகிதத்தை பார்த்து சற்று யோசிக்க ஆரம்பிக்க,அதை எடுத்து கொண்டு தன் கணவரிடம் பேச,வீட்டிற்கு சென்றார்.அடுத்த ஐந்து நிமிடத்தில் விமலன் கேட்கும் கடனை கொடுக்கமுடியாது.போதிய சொத்து இல்லை என்று கூற அவனும் இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் கை விட்டு போகிறது என்று நொந்து கொண்டு வெளியில் வந்தான்.

கேட்டை திறந்து வெளியில் செல்லும் போது, வசதி ஆன ஒரு பையன் ஓடி வந்து தடுத்து, அப்பா உங்களை வீட்டிற்கு வர சொன்னார் என்று கையை பிடித்து அழைத்து சென்றான்.உள்ளே நுழைந்ததும் அந்த பையனின் தாயார் விமலனை வரவேற்று உட்கார சொல்லி என்ன சாப்பிடகொடுக்கட்டும் என்று கேட்க,கொஞ்சம் தண்ணீர் மட்டும் போதும் என்று கூற,குளிர்ந்த மோர் கொண்டு வந்து கொடுக்க எதற்கு தன்னை இப்படி உபசரிக்க வேண்டும் என்று வியந்த படி அமர்ந்து இருந்தான்.சற்று இருங்கள் என்று கூறி விட்டு அந்த பெண்மணி ஒரு அறைக்குள் நுழைந்து சற்று நேரத்தில் ஒருவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து வந்தார்.

அவரை பார்த்ததும் விமலன் தன்னை அறியாமல் எழுந்து ஆச்சரியத்துடன் பார்க்க,சக்கர நாற்காலியில் இருந்தவர் விமலனை பார்த்து அழ ஆரம்பித்தார்.

விமலன் ஒரு கணம் யோசித்து விட்டு தம்பி என்று கூறி கொண்டு பக்கத்தில் ஓடினார்.

மூர்த்தி வீட்டை விட்டு போன பின் அவனை பற்றி யாரும் கவலை படவில்லை.இத்தனை நாளும் எந்த தொடர்பும் இல்லை.சிறைக்கு சென்று அங்கு படும் அவதியை பார்த்து மனம் திருந்தி ஒரு டிரைவர் ஆக வேலை பார்த்து,ஒரு காரை வாங்கி வாடகைக்கு ஒட்டி,அதில் கிடைத்த வருமானம் வைத்து வாகனம் வாங்க கடன் கொடுத்து முன்னேறி இப்போது பெரிய கம்பெனிகளுக்கு இவனுடைய கார்கள் வாடகைக்கு அனுப்பி வைத்து வசதியாக வாழ்ந்து வந்தான்.சிறையில் ஒரு பெரியவரை பார்க்க வரும் அவருடைய மகளுக்கு அவர் கேட்டு கொண்டபடி வாழ்வு தந்து ஒரே ஒரு மகனுடன் திருந்தி வாழ்ந்து வருகிறான்.அவனுடைய குற்ற உணர்வு மீண்டும் தான் பெற்றோரையும் அண்ணனையும் தங்கையும் சென்று பார்க்க தடுத்து நிறுத்தியது.

கஞ்சா வியாபாரம் செய்யும் போது ஏற்பட்ட முன் விரோதம்,அவனுடைய கூட்டாளிகள் இவன் திருந்தி வாழ நினைக்கும் போது, திரும்பவும் அந்த தொழிலில் ஈடுபட வற்புறுத்தினர்.இவன் மறுக்க அதில் ஏற்பட்ட கைகலப்பு,அடிதடி சண்டையில் மூர்த்தியின் காலை வெட்டி விட்டார்கள். காயம் ஆளாமாக பட,அது பழுத்து வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதன் விளைவு இன்று சக்கர நாற்காலியில் வாசம்.

இது அவனுடைய கதை.அதை கேட்ட விமலன் கண்ணீர் விட்டு வருத்த பட்டான்.மூர்த்தி அண்ணனிடம்,இப்போது என்னிடம் உள்ள பணம் நல்ல வழியில் சம்பாதித்தது.உன் கஷ்டம் தீர எவ்வளவு வேண்டுமோ எடுத்து செல்.

தம்பி நீ திருந்தி நல்ல வாழ்கையை வாழ்ந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது.அதுவே போதும்.

என்னுடைய கஷ்டம் என்னோடு போகட்டும்.அப்பா அம்மாவை போய் ஒரு முறை பார்த்து வா.

அவர்களும் உன்னை எதிர்பார்த்து கொண்டுஇருக்கிறார்கள்.

உனக்கும் தங்கைக்கும் செலவு செய்வது என்னுடைய பழக்கம்.ஒரு போதும் உங்களை எனக்காக செலவு செய்ய விட மாட்டேன்.நான் சமாளித்து கொள்வேன் என்று கூறி விட்டு,கையில் இருந்த இரு நூறு ரூபாயில்,ஒரு நூறு ரூபாயை தம்பி மகன் கையில் கொடுத்து விட்டு,அங்கு இருந்துகிளம்பினான்.

வெளியில் வர வர அகிலா வின் போன் வந்தது.என்னங்க அப்பா என் பெயரில் காப்பீடு செய்து வைத்துஇருக்கிறாராம்,அடுத்த

மாதம் என்னுடைய பிறந்த நாளுக்கு அது முதிர்வு அடைந்து 25 லட்சம் கிடைக்குமாம்.அதை வைத்து நம் வியாபாரத்தை லாபகரமாகநடத்திகொள்ளலாம்.

இனி பணத்திற்கு வேண்டி எங்கும் அலைய வேண்டாம்.என்னுடைய குழந்தை பருவம் முதல் அதற்கு பிரீமியம் கட்டி உள்ளார் என் அப்பா.

இப்போது தான் அந்த ஏஜென்ட் எனக்கு போன் செய்து சொன்னார்.எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று இவ்வளவுநாள் சொல்லவில்லையாம்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வரிகளை நினைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பினான் விமலன்.

              சுபம்


.




















Rate this content
Log in

Similar tamil story from Drama