Arul Prakash

Drama

5  

Arul Prakash

Drama

குடும்பத்தில் நாலு சகுனிகள் 07

குடும்பத்தில் நாலு சகுனிகள் 07

5 mins
465


மூணு நாள் திருவிழா கழிச்சு நடக்கறது.

ஆதித்யா அம்மாவும், அசோக் அம்மாவும் பேசிக்கிறாங்க.


அசோக் அம்மா : அக்கா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.


ஆதித்யா அம்மா : சொல்லு டி யம்மா.


அசோக் அம்மா : நீங்க முதல் மருமகளா வந்த அப்போ கிழவி என்னலாம் தொல்லை கொடுத்தா.


ஆதித்யா அம்மா : அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவா, நாங்கலாம் அந்த காலத்துல எப்படி வேல செய்வோம்னு தெரியுமா, நீங்களும் தான் இருக்கீங்கலேனு சொல்லிட்டே இருப்பா. ஆனா பழைய ஆளுங்க கிட்ட விசாரிச்சா நம்ம கிழவி எந்த வேலையும் செஞ்சது இல்லனு சொல்லுவாங்க.


அசோக் அம்மா : கிழவி நல்லா வேல செஞ்சேன்னு நம்ம கிட்ட பொய் கூட சொல்லுவா.


ஆதித்யா அம்மா : அதான் உண்மை. ஆமா உன்னை என்னலாம் பண்ணி இருக்கா கெழவி.


அசோக் அம்மா : என்கிட்ட முதல் மருமகளே பருவா இல்ல, இவ தேற மாட்டா போலன்னு சொல்லும் கிழவி. நீங்க கிழவி கை அமுக்கி கால் அமுக்கி கெழவிய புடிச்சிட்டீங்க. அது மட்டும் இல்ல, கிழவியோட முதல் பையனோட பொண்டாட்டி இல்லையா நீங்க , உங்க மேல கொஞ்சம் அந்த பாசம் இருக்க தான் செய்யிது.நான் கிழவி மனுசுல இடம் பிடிக்க நாட்கள் ஆச்சு.


ஆதித்யா அம்மா : நம்ம கதை பருவால மூணாவது மருமகள, கிழவி இப்படி ஒதுக்கிட்டாலே.


அசோக் அம்மா : அவன் நிலம யாருக்கும் வர கூடாது.


ஆதித்யா அம்மா : அது என்னமோ உண்மை தாண்டி. அவ கிட்ட யாரும் பேசாத மாதிரில பண்ணிட்டாங்க.


அசோக் அம்மா : உண்மைய சொல்லனும்னா, அவ நல்ல பொம்பள தான் கா அவளால ஒரு கெட்டது இந்த வீட்ல நடந்தது இல்லை. எனக்கும் அவ கிட்ட பேசணும் ஆசை தான் ஆனா பேசுனா எங்க நம்மளயும் ஒதுக்கி வச்சிடுமோ இந்த குடும்பம்னு பயந்தே பேசல.


ஆதித்யா அம்மா : பேசாம இருக்கறது தான் நல்லது. நம்ம அவளுக்கு பாவம் பாக்க போய், நம்ம அவ பாவத்தை சுமக்குற மாதிரி ஆகிட கூடாது.


அசோக் அம்மா : ஆமா அக்கா, நீங்க சொல்றது சரி தான்.நம்ம நாத்தனார்ங்க எப்படி நீ கல்யாணம் ஆன புதுசுல.


ஆதித்யா அம்மா : முதல் நாத்தனா, கொஞ்சம் வினை தான், ரெண்டாவது நாத்தனா எந்த பிரச்னையும் இல்ல, அது யாருகிட்டயும் பேசாது.


அசோக் அம்மா : முதல் நாத்தனா என்ன பண்ணுவா.


ஆதித்யா அம்மா : எல்லா உனக்கும் தெரிஞ்சது தான், அவங்க பெரிய அண்ணன ஐஸ் வச்சி காரியம் சாதிச்சுப்பா.


அசோக் அம்மா : அது வரைக்கும் பெரிய தொல்லைங்க இந்த வீட்ல இல்ல.


ஆதித்யா அம்மா : எல்லாத்துக்கும் சேத்து கெழவி இருக்காளே, போதாதா.


அசோக் அம்மா : சரியா சொன்னிங்க. கெழவி ஒரு ஆள் பத்து பேருக்கு சமம். என்னமா ஆண்டு இருக்கா வீட்ட.


ஆதித்யா அம்மா : சரி தான்


அசோக் அம்மா : சரி கிழவி படுத்த படுக்கையா ஆகிட்டா, இனி அடுத்த கிழவி நீங்க தானா.


ஆதித்யா அம்மா : என்ன பாத்தா இந்த வயசுலயே கிழவி மாதிரி இருக்கா.


அசோக் அம்மா : அக்கா, வயசுல கிழவி இல்ல, ஆளுமைல கிழவின்னு சொல்ல வந்தேன்.


ஆதித்யா அம்மா : கிழவி போய்ட்டானா, அப்பறம் இந்த வீட்ல நடுக்குற கூத்தே வேறயா இருக்கும்.


அசோக் அம்மா : சரி விடுங்க. கிழவி சாமி ஆடுறது உண்மையா அக்கா.


ஆதித்யா அம்மா : ஏண்டி யம்மா உனக்கு இந்த சந்தேகம்.


அசோக் அம்மா : இல்ல கிழவி மேல ரெண்டு மூணு சாமி வருதே என்னால நம்ப முடியல.


ஆதித்யா அம்மா : ஏன்.


அசோக் அம்மா : கடவுளே ஒருத்தர் தான்னு நம்புற ஆளு நான் அதனால தான் எப்புடி இத்தனை சாமி ஒருத்தர் மேல வரும்னு பாத்தேன்.


ஆதித்யா அம்மா : அது கடவுள் மேல அதீத நம்பிக்கை வச்சா ஒரு சாமியாவும் வரும், பல சாமியாவும் வரும்.


அசோக் அம்மா : இன்னொரு சந்தேகம் கூட இருக்கு.


ஆதித்யா அம்மா : சொல்லு.


அசோக் அம்மா : கிழவி மேல வெறும் பொம்பள சாமியே வருதே, ஆம்பள சாமி ஏன் வரமாட்டுது.


ஆதித்யா அம்மா : உன்ன இப்படி எல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்றா.


அசோக் அம்மா : தானா வருது.


ஆதித்யா அம்மா : தெய்வ குத்தம் ஆகிட போகுது டி.


அசோக் அம்மா : அதெல்லாம் ஒன்னும் இல்ல கா.


ஆதித்யா அம்மா : உனக்கு கிழவி சாமி ஆடுறது மேல ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கு.


அசோக் அம்மா : எனக்கு மட்டும் இல்ல.


ஆதித்யா அம்மா : அப்பறம்.


அசோக் அம்மா : ஊர்ல சில பேருக்கும் கூட இருக்கு.


ஆதித்யா அம்மா : என்ன சொல்ராங்க ஊர்ல.


அசோக் அம்மா : கிழவி சாமி ஆடுறதே, மரியாதை கிடைக்கறதுக்குனு சில பேரு சொல்ராங்க. திருவிழா அவ சொல்ற தேதியில நடுத்துறாங்கள, அது மட்டும் இல்லாம, திருவிழா நடத்தி, மீதி நிக்குற காசு ஊர்ல ரொம்ப கஷ்டபடுறவங்களுக்கு கொடுக்கணும்ல.


ஆதித்யா அம்மா : ஆமா எந்த குடும்பத்துக்கு காசு கொடுக்கறமோ, அந்த குடும்பத்தை பத்தி வெளிய சொல்லக்கூடாதுனு முறை இருக்கு.


அசோக் அம்மா : அந்த கஷ்ட படுறவங்க குடும்பத்துக்கு கொடுக்குற காச, கெழவியும், பூசாரியும் ஆட்டைய போடுறதா பேசிக்குறாங்க.


ஆதித்யா அம்மா : இந்த வாட்டி அது உண்மையா இல்லையானு கண்டுபிடிக்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.


அசோக் அம்மா : என்ன ஐடியா.


ஆதித்யா அம்மா : எங்க அப்பா இந்த வாட்டி ஊரு திருவிழாக்கு வந்த அப்போ, ஒரு கிரைண்டர் வாங்கி, அது கஷ்ட படுறவங்களுக்கு குடுக்குற காசோட சேத்து இந்த கிரைண்டரையும் கொடுத்துருங்கனு கொடுத்துட்டு போனாரு.


அசோக் அம்மா : சரி எப்படி கண்டுபிடிக்கறது, யாரு வீட்ல இந்த கிரைண்டர் இருக்குனு.


ஆதித்யா அம்மா : மொத்தம் எத்தனை கஷ்ட படுற குடும்பம் நம்ம ஊர்ல இருக்காங்க.


அசோக் அம்மா : நிறைய.


ஆதித்யா அம்மா : ரொம்ப கஷ்ட படுற குடும்பம் எத்தனை பேரு இருப்பாங்க.


அசோக் அம்மா : ஒரு 5 குடும்பம் இருக்கும்.


ஆதித்யா அம்மா : அந்த 5 குடும்பத்தையும் வீட்ல போய்ட்டு நோட்டம் விட்டுட்டா போகுது.


அசோக் அம்மா : நல்ல ஐடியா அக்கா.


ஆதித்யா அம்மாவும், அசோக் அம்மாவும் அந்த கஷ்ட படுற வீட்ல ஒவ்வொரு வீடா போய் தண்ணி குடிக்கிற மாதிரி போறது, சும்மா நலம் விசாரிக்க போறது மாதிரி எல்லார் வீட்டையும் செக் பண்ணிட்டாங்க. ஆனா எங்கையும் அந்த கிரைண்டர் இல்ல.


ஆதித்யா அம்மா : நீ கிழவி மேல சந்தேகப்பட்டது கரெக்ட் போல தாண்டி தெரியுது. எந்த கஷ்டப்படுறவங்க வீட்லயும் எங்க அப்பா கொடுத்த கிரைண்டர காணுமே.


அசோக் அம்மா : கிழவியும் பூசாரியும் வித்து காசு ஆக்கி இருப்பாங்க.


ஆதித்யா அம்மா : அப்போ கஷ்ட படுறவங்களுக்கு காசு கொடுக்குறோம்னு சொல்லி அதையும் ஆட்டைய போடறாங்க போல.


அசோக் அம்மா : நம்ம வீட்ல தான் அவ்ளோ காசு இருக்குல்ல, கெழவிக்கு ஏன் இந்த வேல.


ஆதித்யா அம்மா : அது ஏன் இந்த வேலையோ.


அடுத்த நாள்.


அசோக் அம்மா : அக்கா,அக்கா.


ஆதித்யா அம்மா : ஏண்டி பதட்டமா இருக்க.


அசோக் அம்மா : பூசாரி வீட்டு வழியா வந்தேன், அவங்க வீட்ல பெயிண்ட் அடிக்குறதுனால, வீட்டு பொருள எல்லாம் வெளிய வச்சு இருந்தாங்க, அதுல உங்க அப்பா வாங்கி கொடுத்த கிரைண்டர பாத்தேன்.


ஆதித்யா அம்மா : பாத்தியா கெழவியும், பூசாரியும் சேர்ந்து தான் காச ஆட்டைய போட்டு இருக்காங்க.


அசோக் அம்மா : வா கா பூசாரிய போய் விசாரிக்கலாம்.


ஆதித்யா அம்மாவும், அசோக் அம்மாவும், பூசாரிய பாக்க போய்ட்டாங்க.


ஆதித்யா அம்மா to பூசாரி : இந்த கிரைண்டர் எப்படி இங்க வந்தது.


பூசாரி : அது வந்து.


ஆதித்யா அம்மா : நீங்களும் எங்க மாமியாரும் சேர்ந்து கஷ்ட படுறவுங்களுக்கு கொடுக்க வேண்டிய காச ஆட்டைய போடுறிங்களா.


பூசாரி : நான் இல்ல மா உங்க மாமியார் தான்.


ஆதித்யா அம்மா : மாமியாரா.


பூசாரி : எல்லா வருஷமும் திருவிழா காச கிரிஜா குடும்பத்துக்கு கொடுக்கும்.


ஆதித்யா அம்மா : அது ஏன் அந்த ஒரே குடும்பத்துக்கு கொடுக்குறாங்க.


பூசாரி : அத உங்க கிட்ட எப்படிம்மா சொல்றது.


ஆதித்யா அம்மா : ஏன் என் கிட்ட சொன்னா என்ன.


பூசாரி : உங்க புருஷன் தான் கிரிஜாவ பத்து வருஷம் முன்னாடி வச்சிக்கிட்டு இருந்தாரு.


ஆதித்யா அம்மா அதிர்ச்சி ஆகுறாங்க.


பூசாரி : இந்த விஷயம் உங்க மாமியார்க்கு தெரியும், கிரிஜா இனி என் பையன் கூட தொடர்புல இருக்க கூடாதுனு கண்டிச்சாங்க.கிரிஜா எனக்கு சாப்பிட கூட காசு இல்லனு சொன்னா உங்க மாமியார் கிட்ட. உங்க மாமியார் என் பையன் உன் கூட இருந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுனு சொல்லி மாசா மாசம் காசு தராங்க உங்க குடும்பத்துக்கு தெரியாம. உங்க புருஷனையும் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுல இருந்து உங்க புருஷன் கிரிஜா வீட்டுக்கு போறது இல்ல.


ஆதித்யா அம்மா அழுத்திட்டே இருக்காங்க.


அசோக் அம்மா : இந்த கிரைண்டர் எப்படி உங்க வீட்டுக்கு வந்துது.


பூசாரி : கிரிஜாக்கு தான் கிரைண்டர கொடுக்க போனாங்க, ஆன அவ வீட்ல ஏற்கனவே கிரைண்டர் இருந்ததால, என் வீட்டுக்கு கொடுத்துட்டாங்க.


ஆதித்யா அம்மா மனசு ஒடஞ்சு போய்ட்டாங்க.


அடுத்த நாள்.


யாரோட கெட்ட நேரம்னு தெரில, ஆனா கிரிஜாவோட குழந்தைக்கு உடம்பு முடியாம போகுது. டாக்டர் ஆபரேஷன் பண்ணனும் சொல்லிட்டாரு,10 லட்சம் செலவு ஆகும்னு சொல்லிட்டாரு. கிரிஜா வேற வழி இல்லாம எல்லா செலவும் ஆதித்யா அப்பா மேல விழுது. ஆதித்யா அப்பா ஆபரேஷன் செலவ பன்றாரு.


இந்த விஷயம் எல்லாம் வீட்ல இருக்குறவங்க கேள்வி பட்டு, ஆதித்யா அப்பா மேல கோபமா இருக்காங்க.



Rate this content
Log in

Similar tamil story from Drama