Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 02

மர்ம மரணம் 02

5 mins
525


ப்ரீத்தி அவளோட க்ளோஸ் friends, வர்ஷினி, ஜானகி , வினய், ஆகாஷ் கூட பேசிட்டு இருக்கா.

வினய் குண்டா இருப்பான்

ப்ரீத்தி to வினய் : டேய் மாப்ள.

வினய் : சொல்லுங்க மாமியாரே.

ப்ரீத்தி : டேய் ஆகாஷ் உன்ன மாப்ளனு கூப்ட்டா மட்டும் மாமான்னு திரும்ப கூப்புடற, நான் மாமியாரா.

வினய் : உன்னையும் ஆசையா மாமான்னு கூப்புடுறன், உன் friend ஆஷாவ மட்டும் எனக்கு லவ்வரா செட் பண்ணிவிடு.

ப்ரீத்தி : நீ என்ன மாமியார்னே கூப்பிடு பரவால.

வினய் : சரி என்ன விஷயம் எதுக்கு என்ன கூப்பிட்ட .

ப்ரீத்தி : டேய் மொதல்ல சோத்த கம்மி பண்ணு டா.

வினய் : இப்போ லாம் டிபன் மட்டும் தான் சாப்புடுறன், இட்லி தோசை.

ப்ரீத்தி : அப்பறம் ஏன் உடம்பு குறையில.

வினய் : தெரில பா வெறும் 25 இட்லி தான் காலைல சாப்பிடுறேன்.

ப்ரீத்தி : ரைட்டு விடு, ஏன் நீ ஸ்லிம்மா இருக்கேன்னு தெரிஞ்சுப்போச்சு.

வினய் : என்ன உருவ கேலி பண்றது எதுக்குனு தெரிஞ்சுக்கலாமா.

ப்ரீத்தி : சாதாரணமா உருவம் பெருசா இருக்கறவங்களுக்கு மூல சிறுசா இருக்கும்னு சொல்லுவாங்க. அது கரெக்டா தான் இருக்கு.

வினய் : என் மூல சைஸ எட்டி பாக்குற அளவுக்கு நான் என்ன பண்ணேன்.

ப்ரீத்தி : உன்ன மதிச்சு, நம்ம culturals போட போற நாடகத்துக்கு உன்ன ஸ்கிரிப்ட் எழுத சொன்னா நீ என்ன பண்ணி இருக்க.

வினய் : அதான் எழுதி நேத்தே குடுத்துட்டேனே.

ப்ரீத்தி : அத படிச்சேன், அதுல வில்லன், ஹீரோவ ஒரு இடத்துக்கு வர சொல்றான், அந்த இடத்தோட பேர டைரக்டடா சொல்லாம, ஒரு hint ஒன்னு கொடுக்குறான், அது என்ன hint னா முட்டையும் மோரும். அத ஹீரோ egmoreனு கண்டுபிடிச்சிடுறாரு.

வினய் : இந்த சீன் மட்டும் ஸ்டேஜ்ல வரட்டும். காலேஜ் பசங்க விசில் அடிச்சு கொண்டாடுவாங்க.

ப்ரீத்தி : டேய் குண்டு பயலே, நம்ம மதுர முத்து காமெடி பண்றோம்னு நம்மள ஓட்டுவாங்க டா.

வினய் : அப்படியா சொல்றா.

ப்ரீத்தி : இவன வச்சிக்கிட்டு, இதா நான் எழுதுன ஸ்கிரிப்ட் படிச்சு பாரு.

இப்போ ப்ரீத்தி,வர்ஷினி கூட பேசுறா. வர்ஷினி ப்ரீத்தி வீட்டுக்கிட்ட இருக்குற பொண்ணு, இப்போ first இயர் அவ காலேஜ்ல தான் படிக்கிறா.

வர்ஷினி : ப்ரீத்தி, ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைக்கிறன்.

ப்ரீத்தி : என்ன டி அது, மனசு குள்ள ஏன் வச்சிட்டு இருக்க, கக்கு.

வர்ஷினி : நீ எப்படி இந்த காலேஜ்ல மாஸ் ஆன, உன்ன எப்படி எல்லாருக்கும் தெரியுது.

ப்ரீத்தி : அதுவா நீ தான் இந்த வர்ஷம் தான் காலேஜ்ல ஜாயின் பண்ணல, அதுனால தான் உனக்கு தெரியல. சொல்றேன், நம்ம காலேஜ் எப்போ மத்த காலேஜ் culturals போனாலும் ஒரு கப் கூட ஜெயிச்சது இல்ல. அது இந்த காலேஜ்க்கு வருத்தமா இருந்தாச்சு, அப்போ தான் நானும் நிஷானு இன்னொரு பொன்னும் கலந்துகிட்டு பாட்டு டான்ஸ், அது இதுனு 5 கப் ஜெயிச்சுட்டு வந்தோம். அப்பறம் காலேஜ் full ah என்ன தெரிஞ்சிடிச்சு.

வர்ஷினி : நீ சொல்றது ஓகே தான், ஆனா ஏன் உன் கூட ஜெயிச்ச நிஷான்ற பொன்னுக்கு அவ்ளோ மாஸ் கிடைக்கல.

ப்ரீத்தி : இது ஒரு நல்ல கேள்வி, ஆனா பதில் சிம்பிள் தான், அந்த பொண்ணுக்கு மத்த பசங்க கூட பேச விருப்பம் இல்ல, எனக்கு மத்தவங்க கூட பேச விருப்பம்.அது மட்டும் இல்ல அந்த பொண்ணு நிஷா, தேவதை போல இருப்பா, நான் தேவாங்கு போல இருப்பேன்,ஆனாலும் இந்த காலேஜ் பசங்க என் friendship ah ரொம்ப மதிச்சாங்க.

வர்ஷினி : இதுல இருந்து என்ன தெரியுது, பசங்க அழக பாத்து பேசமாட்டாங்க.

ப்ரீத்தி : கரெக்ட் தான் friendship னா அழக பாக்க மாட்டாங்க, லவ்னா அழகு ரொம்ப முக்கியம்.

வர்ஷினி : ஏன் அப்படி சொல்றிங்க.

ப்ரீத்தி : எனக்கு கிட்ட தட்ட இந்த காலேஜ்ல இருக்க பசங்க எல்லாரையும் தெரியும், ஆனா எவன னா லவ் லுக் விட்டனா, அவன் 20 நாள் என் கண்ணுல படவே மாட்டான், ஓடி ஒளிஞ்சுப்பான், அவளோ அழகா என்ன கடவுள் படைச்சி இருப்பான்.

வர்ஷினி : ப்ரீத்தி நீயும் அழகா தான் இருக்க.

ப்ரீத்தி : என் அழக பத்தி எனக்கு தெரியாதா.

வர்ஷினி : நான் என்ன சொல்ல வறேனா, நீ பாக்க நல்லா இல்லனு கூட வச்சிக்கோ, நிறைய ஜோடிகள் பாத்தனா, பொண்ணு அழகா இருந்தா பசங்க இருக்க மாட்டாங்க,பசங்க நல்லா இருந்த பொண்ணுங்க நல்லா இருக்க மாட்டாங்க. இது தான் வாழ்க்கை. அதனால உனக்கு ஒரு ஆணழகன் உறுதியா இருக்கான்.

இவங்க பேசிட்டு இருக்கும போதே ஆகாஷ் வரான்.

ஆகாஷ் to ப்ரீத்தி : ஹே ப்ரீத்தி.

ப்ரீத்தி : வா டா காலேஜ் handsome.

ஆகாஷ் : அட கலாய்காத மாஸ் girl

ப்ரீத்தி : உன் வெயிட் உனக்கு தெரியாது, உன் மேல நிறைய பேருக்கு கண்ணு.

ஆகாஷ் : அட ஜானகி முன்னாடி சொல்லிராத. இத வச்சி ஒரு சண்டை போடுவா.

ப்ரீத்தி : ஓகே ஓகே எங்க உன்னோட herione ஜானகிய காணோம்.

ஆகாஷ் : வந்துட்டே இருக்கா.

ப்ரீத்தி : ஆமா ஏன் டா நம்ம culturalsக்கு போடுற ட்ராமால நடிக்க மாட்டேன் சொல்லிட்ட.

ஆகாஷ் : ஒன்னும் இல்ல மாஸ் girl, interest இல்ல.

ப்ரீத்தி : இதோ ஜானகியே வந்துட்டா.

ஜானகி வந்துட்டா.

ப்ரீத்தி : நம்ம கிளாஸோட ஹீரோயின் வந்துட்டா.

ஜானகி : ஆமா மா, ஆனா நீ இந்த காலேஜ்க்கே ஹீரோயின், சாரி சாரி மாசு.

ப்ரீத்தி : ஆமா பா, மந்த்லி anniversary கொண்டாடுவீங்க, இந்த மந்த் கொண்டாடல, எங்களுக்கு ட்ரீட்டும் வரல.

ஜானகி : ஒரு வருஷமா லவ் பண்றோம்ல நான் பழைய காதலி ஆகிட்டோம்னு, anniversaryலாம் கொண்டாட மாற்றான்.

ஆகாஷ் பேசுறான்.

ஆகாஷ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல, நாளைக்கு surprise பண்ணலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள இந்த டாபிக் வந்துடுச்சு.

ஜானகி : ஓகே மாஸ் girl, நாங்க போய் ரெகார்ட் நோட் சப்மிட் பண்ணிட்டு வந்துடுறோம்.

ப்ரீத்திய பாக்க, அவங்க காலேஜ் proffessor கலிங்க மூர்த்தி வராரு.

கலிங்க மூர்த்தி : என்ன ப்ரீத்தி ஒரு வாரமா வீட்டுக்கே வரல.வாரத்துக்கு ஒரு தடவனாச்சும் வந்துடுவ

ப்ரீத்தி : கொஞ்சம் வேல சார், அது மட்டும் இல்லாம வீட்டுல பசங்க கூட சரக்கு அடிக்க போறீங்கனு நினைச்சேன்.

கலிங்க மூர்த்தி : வீட்டுல தனியா தான் சரக்கு அடிப்பேன், யாரையும் கூப்பிட மாட்டேன்னு தெரியாதா.

ப்ரீத்தி : ஓகே. ஒரு டவுட் உங்கள ஏன் மாஸ்டர் விஜய் போல, மாஸ்டர் மாஸ்டர்ன்னு கூப்பிடுறாங்க.

கலிங்க மூர்த்தி : எனக்கும் தெரியல பா.

ப்ரீத்தி : ஆனா உங்களுக்கும் மாஸ்டர் விஜயக்கும் சில ஒத்தும இருக்க, ஒரு difference உம் இருக்கு.

கலிங்க மூர்த்தி : என்னா ஒத்தும.

ப்ரீத்தி : ரெண்டு பேரையும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மாஸ்டர்னு கூப்பிடுவாங்க.

கலிங்க மூர்த்தி : சரி, வேற.

ப்ரீத்தி : ரெண்டு பேரும் நல்லா குடிப்பாங்க.

கலிங்க மூர்த்தி : சரி difference என்ன.

ப்ரீத்தி : விஜய் அவர் சொந்த காசுல குடிப்பாரு, நீங்க காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் காசுல குடிப்பாங்க.

கலிங்க மூர்த்தி : ஐயோ அது பசங்களே வாங்கி கொடுக்கறது. அது விடு சில பசங்க என்னை ok னு கூப்பிடுறாங்க, அப்படினா என்ன

ப்ரீத்தி : சொன்ன வருத்த படுவீங்க.

கலிங்க மூர்த்தி : சொல்லு பரவால.

ப்ரீத்தி : ஓசி குடினு அர்த்தம்.

கலிங்க மூர்த்தி : இனி இந்த பசங்க கூட குடிக்கவே கூடாது.

ப்ரீத்தி : இனி பசங்க கூட குடிக்க போறது இல்லையா.

கலிங்க மூர்த்தி : இல்ல இனி ok னு கூப்பிடுற பசங்க கூட குடிக்க போறது இல்ல.

ப்ரீத்தி : நான் கூட எங்க திருந்திட்டீங்களோனு பார்த்தேன்.

கலிங்க மூர்த்தி : ஓகே மாஸ் girl, ஹாப்பி பர்த்டே. விஷ் பண்ண மறந்து இருப்பேன்.

ப்ரீத்தி : தேங்க்ஸ். ஆனா நீங்களுமா மாஸ் girl னு கூப்பிடுறிங்க.

கலிங்க மூர்த்தி : காலேஜ்க்கே நீதானாமா மாஸ்.

ப்ரீத்தி : என்ன சார் மாஸ் அத வச்சு எதுனா பிரயோஜனம் இருக்கா, ஒரு காலேஜ் எலெக்ஷன் கூட வைக்க மாற்றிங்க.வச்சா ஜெயிப்பேன்

கலிங்க மூர்த்தி : இப்ப தான் ஓரு விஷயம் எனக்கு ஞாபகம் வருது.நீ மாசா இருக்கறதுக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கு. இன்னிக்கு சாயுங்காலம் வீட்டுக்கு வா சொல்றேன்.

ப்ரீத்தி : சார் சஸ்பென்ஸ் வேணாம் இப்பவே சொல்லுங்க.

கலிங்க மூர்த்தி : இங்க சொல்ல முடியாது மா.

ப்ரீத்தி : சரி வீட்டுக்கு வரேன், வந்தா உங்க அம்மா வட சுட்டு தருவாங்கல அன்னிக்கு மாதிரி. என்ன னா உங்க மாஸ்டர் ஏன் 40 வயசு ஆகியும் கல்யாணம் பண்ண மாற்றான்னு உங்க அம்மா கேட்க சொல்வாங்க, அது பரவால.

கலிங்க மூர்த்தி : சரி வந்துடு, நான் கிளம்புறேன்.

ப்ரீத்தி காலேஜ்ல இருந்து வீட்டுக்கு கிளம்புலாம் போய்ட்டுஇருக்கும் போது ஆகாஷும், ஜானகியும் பேசிட்டு இருக்கறது பாக்குறா.கிட்ட போய் அவங்க என்ன ரொமான்ஸ் பன்றாங்கனு ஒட்டு கேட்குறா.

ஜானகி to ஆகாஷ் : டேய் ஏன் டா நீ culturals ட்ராமால நடிக்க மாட்டேன்னு சொன்ன.

ஆகாஷ் : first first ஹீரோவா நடிக்கிறேன், ஒரு மொக்க பீசு கூடவா நடிக்கறது. எதாவது அழகான பொண்ணு கூட தான் நடிப்பேன்.

ஜானகி : ப்ரீத்திய சொல்றியா.

ஆகாஷ் : ஆமா அந்த பேரழகிய தான் சொல்றேன்

ஜானகி சிரிக்கிறா.

இதெல்லாம் கேட்டு ப்ரீத்தி கண்ணுல மல மலனு தண்ணி.



Rate this content
Log in

Similar tamil story from Thriller